Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலைப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Print PDF

தினமணி                 03.01.2014

சாலைப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகளை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரோவர் வளைவிலிருந்து, எளம்பலூர் இணைப்பு சாலை வரையிலும் ரூ. 1.90 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர், சீரான போக்குவரத்தை உருவாக்கும் வகையிலும், சாலையில் மழைநீர் தேங்காத வகையிலும் சாலைகள் அமைக்க வேண்டும் என்பது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், புதிய பேருந்து நிலைய வாளாகத்தை விரிவுபடுத்த தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பெரம்பலூர் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார் ஆட்சியர் தரேஸ் அஹமது. இந்த ஆய்வின்போது, நகர்மன்றத் தலைவர் சி. ரமேஷ், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) தாண்டவமூர்த்தி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.