Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி நிர்வாகம் அதிரடி

Print PDF

தினமலர் 23.12.2009

குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி நிர்வாகம் அதிரடி

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சொத்து வரி, குடிநீர் கட்டண வசூலிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் கட்டண நிலுவைக்காக இரண்டு குடிநீர் இணைப்புகளை நேற்று துண்டித்தது.திருப்பூர் மாநகராட்சிக்கு சொத்து வரி வசூல் மூலம் ஆண்டுக்கு 21 கோடி ரூபாய்; குடிநீர் கட்டணம் மூலம் நான்கு கோடி ரூபாய் கிடைக்கிறது. இந்தாண்டு, 50 சதவீதத்துக்கும் குறைவாகவே இதுவரை வரி வசூலாகி உள்ளது. இம்மாத இறுதிக் குள், வரி வசூலில் குறிப்பிட்ட இலக்கை எட்டுவதற்கு, மாநகராட்சி தீவிர நட வடிக்கை எடுத்து வருகிறது. அரசு விடு முறை தினமான சனிக்கிழமையன்றும், வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.சொத்து வரி நிலுவை வைத்திருந்தால், ஜப்தி நடவடிக்கையும், குடிநீர் கட்டண நிலுவை வைத்திருந்தால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநக ராட்சி எச்சரித்துள்ளது. அதுபற்றி ஆட்டோ மூலம் பல்வேறு பகுதிகளில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குடி நீர் கட்டண நிலுவை வைத்திருந்த கார ணத்துக்காக, நேற்று இரண்டு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

எம்.ஜி., புதூர் வீதி அருகே குப்பணஞ் செட்டியார் வீதியில் மண்டபம் ஒன்றின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதே போல், தென்னம்பாளையம் பகுதியில் முத்து சாமி என்பவர் வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக, குடிநீர் கட்டணம் செலுத் தாமல் இருந்த தற்காக, இவ்விரண்டு குடி நீர் இணைப்பு கள் துண்டிக்கப்பட்டுள்ள தாக தெரிகிறது. குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை யில் மாநகராட்சி அதிரடியாக இறங்கி யுள்ளதால், குடிநீர் கட்டணம், சொத்து வரி நிலுவை உள்ளவர்கள், மாநகராட்சிக்கு வரியை செலுத்தி வருகின்றனர்.