Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

யாரால முடியும்? பார்க்கிங், கழிப்பிட கட்டண முறைகேடை தடுக்க மாநகராட்சியில் அதிரடி வசூல்

Print PDF

தினமலர் 29.12.2009

யாரால முடியும்? பார்க்கிங், கழிப்பிட கட்டண முறைகேடை தடுக்க மாநகராட்சியில் அதிரடி வசூல்


கோவை : கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான "பார்க்கிங்' மற்றும் கட்டணக் கழிப்பிடங்களில் கட்டண முறைகேடு மீண்டும் தலை தூக்கியுள்ளது. கோவை மாநகராட்சிக்கு, நகரில் பல்வேறு இடங்களில், கட்டணக்கழிப்பிடம், வாகன நிறுத்துமிடங்கள் (பார்க்கிங்) உள்ளன. இவற்றை கான்ட்ராக்ட் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க விடப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயித்த கட்டணத்தை விட, கான்ட்ராக்டர்கள், இரு மடங்கு கட்டணம் வசூலிப்பது வாடிக் கையாக உள்ளது.சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுவே, இந்த முறைகேட்டை நேரடியாகப் பிடித்து, சம்மந்தப் பட்ட ஒப்பந்ததாரரின் ஏலத்தை ரத்து செய்ய பரிந்துரைத்தும், மாநகராட்சி கவுன்சிலர்களின் ஆதரவுடன் அதே ஒப்பந்ததாரர் நீடித்த சம்பவமும் நடந் துள்ளது.

கட்டணக் கழிப்பிடத்தை விட, வாகன நிறுத்துமிடங்களில் நடக்கும் முறைகேடு அதிகம். ஒரு நாளுக்கு (24 மணி நேரம்) டூ வீலருக்கு ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும்.ஆனால்,இரு மடங்காக கட்டணம் வசூலிக்கின்றனர். ஐந்து ரூபாய் மதிப்புள்ள டோக்கன் கொடுத்தாலும், ஒரு நாளுக்கு இரண்டு டோக்கன் கொடுத்து, 24 மணி நேரத்துக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர்.

சென்ற ஆண்டு, இதே புகார் வந்த போது, மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தலையிட்டு அதிரடி நடவடிக்கை எடுத்தார். பலரது ஒப்பந் தங்களை ரத்து செய்தார். பல இடங்களில் மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக சில ஊழியர்களை நியமித்து கட்டணக் கழிப்பிடம் மற்றும் வாகன நிறுத்துமிடங்களை நடத்தியது.சில வாரங்களுக்கு முன், ஒரு சில இனங்களுக்கு ஏலம் விடப் பட்டு, மார்ச் இறுதி வரைக்கும் குத்தகைக்கு தரப் பட்டது. இவற்றை ஏலத்தில் சிலர் , சில நாட்களிலேயே இரட்டிப்பு கட்டணம் வசூலிக்க துவங்கினர்.காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள "பார்க்கிங்'கில், இந்த முறைகேடு பகிரங்கமாக நடக்கிறது. இரவு 10.00 மணிக்கு டூ வீலரை நிறுத்தி விட்டு, காலை 5.00 மணிக்கு வந்து எடுத்தாலும் இரண்டு நாள் கட்டணம் தர வேண்டும் என நிர்ப்பந்திக்கின்றனர்.

தர மறுப்பவர்களை கை நீட்டி அடிக்கவும் தயங்குவதில்லை. பலர் கவுரவம் கருதி, கேட்டதை கொடுக்கின்றனர். இங்கு கட்டண விபரம் குறித்து மாநகராட்சி வைத் துள்ள பலகையும் மறைக்கப் பட்டுள்ளது.தரப்படும் டோக்கனில் ஒப் பந்ததாரரின் பெயரும் இல்லை. பெயர் இல்லாத டோக்கன் விநியோகிக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதிக்கிறது.கடந்த 23ம் தேதியன்று இங்கு டூ வீலரை நிறுத்தி விட்டு, சுற்றுலா சென்று வந்த ஒருவர், நேற்று வந்து தனது வாகனத்தை எடுத்தபோது, நாளுக்கு 10 ரூபாய் வீதம் கணக்கிட்டு, 55 ரூபாய் கட்டணம் கேட்டுள்ளனர். இதுபற்றி மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

மாநகராட்சி தெற்கு மண் டல உதவி கமிஷனர் லட்சுமணன் உத்தரவின்பேரில், நிர் வாக அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் அங்கு சென்று நேரில் விசாரித்தனர். அப்போது அதிக கட்டணம் கேட்டது தெரியவந்தது. உடனடியாக ஒப்பந்ததாரரை எச்சரித்து விட்டுத் திரும்பியுள்ளனர்.மாநகராட்சி சார்பில் அங்கு கட்டண விபரம் குறித்த அறிவிப்புப் பலகையை பெரிதாக வைக்க நடவடிக்கை எடுப்பதாக உதவி கமிஷனர் குறிப்பிட்டார். இதே போல, சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் பார்க்கிங் மற்றும் அனைத்து கட்டணக் கழிப்பிடங்களிலும் கட்டண முறைகேடு நடந்து வருகிறது.கோவை நகரின் மீது அக்கறை கொண்டு, தமிழக அரசு பல வித மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இத்தகைய முறைகேடுகளால் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டியது, கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கடமையாகும்.

Last Updated on Tuesday, 29 December 2009 09:30