Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

எடையளவு சரியில்லாத 40 கடைகள் மீது தொழிலாளர் துறையினர் நடவடிக்கை

Print PDF

தினமணி 21.01.2010

எடையளவு சரியில்லாத 40 கடைகள் மீது தொழிலாளர் துறையினர் நடவடிக்கை

மதுரை, ஜன. 20: மதுரை மாவட்டத்தில் எடையளவுகள் சரியில்லாத 40 கடைகள் மீது தொழிலாளர் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதுகுத்து மதுரை மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் தெரிவித்துள்ளது:

தொழிலாளர் துறை சார்பில் மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், வாடிப்பட்டி மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள கிராமங்களில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், எடையளவுகளில் அரசு மறுமுத்திரை உரிய காலத்தில் இல்லாமலும், முத்திரையே இல்லாமலும் வைக்கப்பட்ட 40 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அரசு முத்திரை வைக்கத் தவறிய 70 எடையளவுகள் பமுதல் செய்யப்பட்டன.

நான்கு மின்னணு தராசுகள், 4 மேஜை தராசுகள், ஒரு வில் தராசு, 29 இரும்பு எடைக்கற்கள், 4 பித்தளை பொன் எடைக்கற்கள், 25 ஊற்றிய அளவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடைகள், வணிக நிறுவனங்களில் வைக்கப்பட்டிருக்கும் மின்னணு தராசுகள், மேஜை தராசுகளை ஆண்டுக்கு ஒரு முறை முத்திரையிடவேண்டும், மற்றவற்றை 2 ஆண்டுக்கு ஒரு முறை முத்திரையிட வேண்டும்.

முத்திரையிட தல்லாகுளத்தில் இயங்கி வரும் முத்திரை ஆய்வாளர்கள் அலுவலகத்துக்கு தகுந்த ஆவணங்களை கொண்டுசென்று முத்திரையிடுமாறும், தவறும்பட்சத்தில் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

Last Updated on Thursday, 21 January 2010 10:45