Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காலியாகின்றன மாநகராட்சி கடைகள்: அவகாசம் கேட்டு மீண்டும் மனு

Print PDF

தினமலர் 08.02.2010

காலியாகின்றன மாநகராட்சி கடைகள்: அவகாசம் கேட்டு மீண்டும் மனு

திருப்பூர் : திருப்பூர் காமராஜ் ரோட்டில் உள்ள மாநகராட்சி கடைகளை ஏலம் எடுத்து நடத்தியவர்கள், நேற்று அக்கடைகளை காலி செய்யும் பணியில் இறங்கினர். இருப்பினும், மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு கடை வியாபாரிகள் பேரவை, சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது.

திருப்பூர், மாநகராட்சி மற்றும் மாவட்ட அந்தஸ்து பெற்றதை தொடர்ந்து, அதற்குரிய உள் கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்த மாவட்ட நிர்வாகம் தரப் பிலும், உள்ளாட்சி நிர்வாகம் தரப் பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. நகர ரோடுகளில் நெரிசலை குறைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, ரோடு விரிவாக்க பணிகள் துவங்கப்பட்டுள்ளன. ரோடுகளை சர்வே செய்யும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. ரோடுகளை அகலப் படுத்த இடையூறாக இருக்கும் கட் டடங்களை அகற்றும் நடவடிக்கையில், மாநகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது.

காமராஜ் ரோட்டை அகலப் படுத்த, 40 ஆண்டுகளுக்கு முன் கட் டப்பட்ட மாநகராட்சி கடைகளை இடிப்பதென முடிவு செய்யப் பட்டது. அப்பகுதியில் உள்ள 32 கடைகளை ஏலம் எடுத்து நடத்துபவர்களுக்கு, கடந்த மாதம் 23ம் தேதி மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

"கடைகளை ஏலம் எடுத்தவர்கள், வர்த்தக ரீதியான கொடுக்கல் - வாங் கல்களில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி நிர்வாகமே இங்குள்ள 11 கடைகளுக்கு, மார்ச் வரை உரிமம் புதுப்பித்து கொடுத்துள்ளது. கடைகளை உடனடியாக காலி செய்தால், தொழில் பாதிக்கும். எனவே, கடைகளை காலி செய்ய இரண்டு மாதம் அவகாசம் வழங்க வேண்டும்,' என்று கோரி, கடை உரிமையாளர் கள், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதன் பேரில், கடைகளை காலி செய்வது தொடர் பான நடவடிக்கைக்கு, பிப்., 8ம் தேதி வரை இடைக்கால தடை உத்தரவு பெற்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் இரவு 10.00 மணிக்கு மேல், கடைகள் முன் சாக்கடை கால்வாய்களை மூடியிருந்த சிமென்ட் "சிலாப்'களை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர். இதை கண்டித்து, கடைக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர். மேயர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தியதை அடுத்து, மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
மாநகராட்சி நிர்வாக தரப்பில் கூறுகையில், "மாவட்டமாக திருப்பூர் உயர்ந்துள்ளதால், நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப, ரோடுகளை அகலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது; இதன் காரணமாகவே கடைகளை இடிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பொது நலன் கருதி, கடைக்காரர்கள் கடைகளை காலி செய்து கொடுக்க வேண்டும். தடை உத்தரவு பெறுதல், மறியல் போன்றவை மூலம் வளர்ச்சி பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதை தவிர்க்க, மாநகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது,' என்றனர்.

மாநகராட்சி கடைகளை ஏலம் எடுத்தவர்கள், ஐகோர்ட் மூலம் பெற்ற இடைக்கால தடை இன்றுடன் முடிகிறது. அதனால், கடைகளில் இருந்த பொருட்களை வேறு கடைகளுக்கு மாற்றும் முயற்சியில் கடைக்காரர்கள் நேற்று ஈடுபட்டனர். அப்போது, கடைகளில் இருந்த பொருட்கள், அலமாரிகள், பெயர் பலகைகள் அகற்றும் பணி நடந்தது. சில கடைகளின் முன் புதிய முகவரியுடன், "இடம் மாற்றம்' அறிவிப்பும் வைக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி மாநகராட்சி கடை வியாபாரிகள் பேரவை தலைவர் முத்துசாமி கூறியதாவது: மாநகராட்சி கடைகளை ஏலம் எடுத்துள்ள வியாபாரிகள், கடைகளை காலி செய்ய வேண்டும் என்று திடீரென நோட்டீஸ் கொடுக்கப் பட்டது. கடைகளை காலி செய்து கொடுப்பதில், எவ்வித மாற்று கருத் தும் இல்லை. அவகாசம் வேண்டும் என்பதற்காக, கோர்ட்டில் இடைக் கால தடை உத்தரவு பெறப்பட்டது.

ஆனால், நோட்டீஸ் கொடுத்த சில நாட்களில், சாக்கடை கால்வாய் சுத்தம் செய்வதாகக்கூறி, நடைபாதை யில் உள்ள "சிலாப்'களை இரவோடு இரவாக பெயர்த்து எடுத்தனர். கடைகளை காலி செய்ய வைப்பதற்காக, மாநகராட்சி இதுபோன்ற மறைமுக நடவடிக்கையில் இறங்கியுள்ளது. எனவே, மீண்டும் ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என்று கேட்டு, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள் ளோம். இருப்பினும், மாற்று இடம் கிடைத்த வியாபாரிகள் கடைகளை காலி செய்து வருகின்றனர், என்றார்.

Last Updated on Monday, 08 February 2010 06:12