Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

எல்லைகள் விரிவாக்கத்துக்கு தயார்

Print PDF

தினமணி 01.04.2010

எல்லைகள் விரிவாக்கத்துக்கு தயார்

வேலூர், மார்ச் 31: வேலூர் மாநகராட்சியின் எல்லைகள் விரிவாக்கத்துக்கான பணிகள் நிகழாண்டில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் நகராட்சி கடந்த 2008ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சிப் பகுதிக்கு அருகிலுள்ள உள்ளாட்சிப் பகுதிகளை இணைத்து, எல்லைகளை விரிவுபடுத்த ஜூலை 2008ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வேலூர் மாநகராட்சியோடு இணைக்கப்படவுள்ள 3 நகராட்சிகள், 3 மூன்றாம் நிலை நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 61 ஊராட்சிகள் குறித்த அறிவிப்பை அரசு அண்மையில் வெளியிட்டது. வரும், 2011ம் ஆண்டில் தற்போதுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததும், மாநகராட்சி எல்லை விரிவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, புதிதாக இணையும் பகுதிகளில் வார்டுகள் அமைத்தல், மண்டலங்கள் பிரித்தல், வார்டு பிரிவினைகளில் பெண்கள், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினத்தவருக்கான இடஒதுக்கீடு முறையை அமல்படுத்துவது போன்ற பணிகள் நிகழாண்டில் மேற்கொள்ளப்படும் என்று புதன்கிழமை வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Last Updated on Thursday, 01 April 2010 10:11