Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கருணை நியமனத்திற்கு மாநகராட்சி கதவடைப்பு : காத்திருப்போர் கவலை

Print PDF

தினமலர் 16.04.2010

கருணை நியமனத்திற்கு மாநகராட்சி கதவடைப்பு : காத்திருப்போர் கவலை

மதுரை : மதுரை மாநகராட்சியில் கருணை அடிப்படை நியமனம் இல்லாததால், நீண்ட ஆண்டுகளாக பலர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் கல்விப் பிரிவில் இந்நிலைமை உள்ளது. கடந்த அ.தி.மு.., ஆட்சியில், கருணை அடிப்படையிலான நியமனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பின் வந்த தி.மு.., ஆட்சியில் அத்தடை விலக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து பல துறைகளிலும் கருணை அடிப்படையிலான நியமனங்கள் தொடர்ந்தன. மதுரை மாநகராட்சியின் பிறபிரிவுகளில் 130க்கும் மேற்பட்டோர் கருணை அடிப்படையில் நியமனம் பெற்றுள்ளனர்.

ஆனால் கல்விப்பிரிவில் மட்டும் நியமனம் இல்லை. இவர்களில் பலர் பத்தாண்டுகளுக்கும் மேலாக இவ்வாய்ப்பை எதிர்நோக்கி ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்டோரிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் நடவடிக்கை இல்லை. சென்னை, கோவை மாநகராட்சிகளில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோ அதைப் போல நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசனை நடத்தியுள்ளனர். ஆனால் அங்கு பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளதாக காத்திருப்போர் தெரிவிக்கின்றனர்.

Last Updated on Friday, 16 April 2010 06:35