Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெயர் பலகைகள் தமிழில் இல்லாதது வெட்கக்கேடானது: மேயர்

Print PDF

தினமணி 16.04.2010

பெயர் பலகைகள் தமிழில் இல்லாதது வெட்கக்கேடானது: மேயர்

சென்னை, ஏப். 15: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழில் இடம்பெறாதது வெட்கக்கேடானது என்று மேயர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை மாநகராட்சியில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில், மே 31}ம் தேதிக்குள் தமிழுக்கு பிரதான இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு வணிக சங்கங்களின் நிர்வாகிகளுடன் சென்னையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதற்கு தலைமை வகித்த மேயர் பேசியது:

கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள்தான், வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் பிரதானமாக இடம் பிடித்துள்ளன. ஆனால், தமிழகத்தில் ஆங்கிலம்தான் பிரதான இடம்பிடித்துள்ளது. ஜூன் 23}ம் தேதி கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. எனவே, அதற்கு முன்னதாக மாநிலத்தின் தலைநகரான சென்னையில் அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளிலும் தமிழ் பிரதானமாக இடம்பெற வேண்டும். இதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்படமாட்டாது. ஜூன் 1}ம் தேதி முதல் தமிழுக்கு பிரதான இடம் கொடுக்காத பெயர்ப் பலகைகள் அப்புறப்படுத்தப்படும் என்றார்.