Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நெல்லையில் 5 கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினமணி 22.10.2010

நெல்லையில் 5 கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திருநெல்வேலி,அக்.21: சொத்து வரி செலுத்தாததால், பாளையங்கோட்டை பகுதியில் 5 கட்டடங்களின் குடிநீர் இணைப்பு வியாழக்கிழமை துண்டிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி சொத்து வரி,குடிநீர் கட்டணம் ஆகியவற்றை வசூல் செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் இவற்றை மாநகராட்சிக்கு செலுத்தாமல் இருந்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக குடிநீர் இணைப்புகளைத் துண்டிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பாளையங்கோட்டை பால்ராவுத்தர் தெரு,பிச்சுவனத் தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு ஆகிய இடங்களில் 4 வீடுகளின் குடிநீர் இணைப்பையும், திருச்செந்தூர் சாலையில் உள்ள ஒரு வணிகக் கட்டடத்தின் குடிநீர் இணைப்பையும் மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை துண்டித்தனர்.

 

அனுமதியின்றி இயங்கிய சாயஆலை மூடல்

Print PDF

தினமணி 22.10.2010

அனுமதியின்றி இயங்கிய சாயஆலை மூடல்

திருப்பூர், அக். 21: திருப்பூர், மங்கலம் பிரதான சாலையில் கடைகளுக்கு இடையே, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி இயங்கி வந்த சாயஆலையை மாநகராட்சி அலுவலர்கள் மூடியதுடன், அங்கிருந்த ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள பின்னலாடைத் துணிகளையும், இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.

÷திருப்பூர் மாநகராட்சி, 29வது வார்டுக்கு உட்பட்ட மங்கலம் சாலை (அமர்ஜோதி கார்டன் எதிரில்) பழகுடோன் பஸ் நிறுத்தம் பகுதியில் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. அங்கிருந்த ஒரு காம்பிளக்சின் 3வது மாடியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முறையான அனுமதி பெறாமல் 2 இயந்திரங்கள் வைத்து பின்னலாடைத் துணிகளுக்கு சாயமிடும் ஆலை இயங்கி வந்துள்ளது.

÷இதுகுறித்து 29வது வார்டு மாமன்ற உறுப்பினர் கணேசன் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். சுகாதார ஆய்வாளர் சாமிநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் வியாழக்கிழமை அப் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ÷அப்போது, அங்கிருந்த காம்பிளக்சின் 3வது மாடியில் பூட்டப்பட்டிருந்த ஒரு கடையில் அனுமதியின்றி சாயமிடும் பணிகள் நடைபெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அக்கடை திறக்கப்பட்டு, உள்ளே இருந்த ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள பின்னலாடைத் துணிகளை பறிமுதல் செய்தனர்.

÷தொடர்ந்து, சாயமிடப் பயன்படுத்திய இயந்திரங்களையும் பறிமுதல் செய்து, அக்கடையை மூடினர். அதிகாரிகளின் திடீர் ஆய்வை அறிந்த சாய ஆலை உரிமையாளர் தலைமறைவாகி விட்டார். அவர் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

 

கடலூரில் பாதாள சாக்கடைப் பணிகளை பாதுகாப்புடன் மேற்கொள்ள உத்தரவு

Print PDF

தினமணி 22.10.2010

கடலூரில் பாதாள சாக்கடைப் பணிகளை பாதுகாப்புடன் மேற்கொள்ள உத்தரவு

கடலூர், அக். 21: கடலூரில் தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கப்பட்டு இருக்கும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை, பாதுகாப்புடன் மேற்கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டார்.

÷கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக தேசிய நெடுஞ்சாலையைத் தோண்டும் பணி தொடங்கப்பட்டு 3 நாள்களாக நடந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே இப்பணி தொடங்கப்பட்டு இருக்கிறது.

÷பணியை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். இப்பணி எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி நடப்பதை அறிந்த ஆட்சியர், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுடன் இதுகுறித்துப் பேசினார். பணி நடைபெறுவதாக எந்த அறிவிப்பும் அங்கு வைக்கப்படாமலும், தோண்டும் பணியில் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை இருப்பதையும் ஆட்சியர் சுட்டிக் காட்டினார். பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்த பிறகே பணி நடைபெற வேண்டும் என்றும் ஆட்சியர் உத்தரவிட்டார்.

÷கடலூர் வண்ணாரப்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடை தோண்டும் பணியின்போது, நகராட்சி குடிநீர் குழாய்கள் செவ்வாய்க்கிழமை உடைந்ததால் சாலைகளில் குடிநீர் ஆறுபோல் ஓடி வீணாகியது. இதனால் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளையும் தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அங்கு தேங்கிய நீரை தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

 


Page 335 of 506