Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பாதாள சாக்கடைப் பணி: எம்எல்ஏ சிவாஜி ஆய்வு

Print PDF

தினமணி 20.10.2010

பாதாள சாக்கடைப் பணி: எம்எல்ஏ சிவாஜி ஆய்வு

திருவள்ளூர், அக். 19: திருவள்ளூரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைப் பணியை திருவள்ளூர் எம்எல்ஏ இ..பி. சிவாஜி அண்மையில் ஆய்வு செய்தார்.

÷திருவள்ளூரில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பாதாள சாக்கடைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பணிகள் முடித்த பகுதிகளில் தார் மற்றும் சிமென்ட் சாலைகள் அமைக்கப்படுகிறது.

÷இந்நிலையில் பாதாள சாக்கடைப் பணிகள் மந்தமாக நடப்பதாகவும், பல இடங்களில் பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளதாகவும் புகார்கள் வந்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை திருவள்ளூர் எம்எல்ஏ இஏபி சிவாஜி, திருவள்ளூர் நகராட்சி ஆணையர் முத்துராமேஸ்வரன், பொறியாளர் சாய்ராம், நகர்மன்ற தலைவர் பாண்டியன், திமுக நகர செயலாளர் கா.மு. தயாநிதி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

÷தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட உதவி நிர்வாகப் பொறியாளர் டெபோரா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

÷திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விரைவில் பாதாள சாக்கடைப் பணிகளை முடிக்கவும், நிறைவடைந்த இடங்களில் நிதி ஒதுக்கி விரைவில் சாலைகள் அமைப்பதாகவும் சிவாஜி கூறினார்

 

மீன் மார்க்கெட் வாடகை வசூலை மாநகராட்சி ஏற்றது 2 அதிகாரி மீது நடவடிக்கை

Print PDF

தினகரன் 20.10.2010

மீன் மார்க்கெட் வாடகை வசூலை மாநகராட்சி ஏற்றது 2 அதிகாரி மீது நடவடிக்கை

மதுரை, அக். 20: நெல்பேட்டை மீன் மார்க்கெட்டில் அன்றாட கடை வாடகை வசூலை மாநகராட்சி ஏற்றது. பிரச்னையில் சிக்கிய 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை நெல்பேட்டை மாநகராட்சி மீன் மார்க்கெட்டில் வியாபாரிகள் இரு தரப்பினரிடையே கடந்த வாரம் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி புகார் கூறி வந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பாரபட்சமின்றி எது சரியோ அதன்படி நியாயமான நடவடிக்கை எடுத்து சுமுக தீர்வு காணும்படி அதிகாரிகளுக்கு மேலிடம் ஆலோசனை அளித்தது.

அதன்படி மாநகராட்சியும், போலீசாரும் இணைந்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மார்க்கெட்டில் அன்றாட கடை வாடகை வசூலை தனியாரிடம் இருந்து பறித்து மாநகராட்சி ஏற்றது. அங்கு ஒரு தரப்பினரால் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி தண்ணீர் குழாய் திறக்கப்பட்டது. மூடி வைக்கப்பட்டிருந்த பொது கழிப்பிடம் பயன்பாட்டிற்கு வந்தது.

இந்த விவகாரத்தில் ஒரு தரப்பினருக்கு அனுசரணையாக இருந்ததாக புகார் கூறப்பட்ட மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், மற்றும் மார்க்கெட் சார்ந்த போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாநகராட்சி பொறியாளர் மாறுதல் செய்யப்படுவாரா? அல்லது வேறு நடவடிக்கையா? என்பது குறித்து தீவிர பரிசீலனை நடந்து வருகிறது. இந்த அதிரடி நடவடிக்கைகள் மூலம் மீன் மார்க்கெட்டில் நிலவிய நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது, இனிமேல் மார்க்கெட் வழக்கம் போல் இயங்கும் என வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

 

இலவச கழிப்பிடத்தில் காசு வசூலித்தவர் கைது

Print PDF

மாலை மலர் 19.10.2010

இலவச கழிப்பிடத்தில் காசு வசூலித்தவர் கைது

இலவச கழிப்பிடத்தில் காசு வசூலித்தவர் கைது

சென்னை, அக். 19- சென்னை மாநகராட்சி புதிய கமிஷனராக பொறுப்பேற்றுள்ள கார்த்திகேயன் இன்று சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் ஆய்வு நடத்தினார். அப்போது அங்குள்ள மாநகராட்சி இலவச கழிப்பிடத்தில் அன்வர் (55) என்பவர் காசு வசூலித்ததை கண்டுபிடித்தார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து அனுமதி இல்லாமல் காசு வசூலித்த அன்வர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

 


Page 338 of 506