Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சென்னையில் இலவச கழிப்பிடத்திற்கு கட்டணம் வசூலித்தவர் கைது

Print PDF

தினமணி 19.10.2010

சென்னையில் இலவச கழிப்பிடத்திற்கு கட்டணம் வசூலித்தவர் கைது

சென்னை, அக்.19: சென்னை மாநகராட்சி இலவச பொதுக் கழிப்பிடத்தில் கட்டணம் வசூலித்தவரைக் கைது செய்ய மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆணையர் கார்த்திகேயன் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மாநகராட்சி பணிகளை ஆய்வுசெய்தார். சிந்தாதிரிப்பேட்டை 82-வது வார்டில் பூதப்பெருமாள் கோயில் தெருவில் மாநகராட்சி இலவச பொதுக்கழிப்பிடத்தில் அன்வர் என்பவர் பொதுமக்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பதை கண்டறிந்து காவல்துறை ஆய்வாளரிடம் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து மாநகராட்சி பொறியாளர் ஞானச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் அன்வர் கைது செய்யப்பட்டார் என மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை பணி விரைவில் முடிக்கப்படும் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

Print PDF

தினகரன் 18.10.2010

திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை பணி விரைவில் முடிக்கப்படும் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

திண்டுக்கல், அக். 18: திண்டுக்கல் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணி விரைவில் முடிக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். திமுக இளைஞரணி அறக்கட்டளையின் சார்பில் அண்ணாவின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், அமைப்பாளர் அசன்முகமது, துணை செயலாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:

திண்டுக்கல் நகராட்சி பகுதியில் புதிய சாலைகள் அமைக்க ரூ.25 கோடி நிதியை துணை முதல்வர் ஒதுக்கியுள்ளார். இந்த நிதியில் புதிய சாலைகள் அமைக்கப்படும். மற்ற நகராட்சிகளை விட திண்டுக்கல் நகராட்சிக்கு அரசு அதிக நிதி ஓதுக்கீடு செய்து வருகிறது. திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை பணிகளை ஒப்பந்தம் செய்துள்ள ஒப்பந்தகாரர்கள் காலதாமதத்தால் இப்பணி முடிக்க சிறிது தாமதம் ஏற்பட்டது. தற்போது 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டது. மீதமுள்ள 10 சதவீத பணிகள் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பழநியில் புதிய நீதிமன்றம் கட்ட ரூ.2.50 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. புதிய கட்டிட பணி நவம்பர் முதல் வாரத்தில் துவக்கப்படும்.

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டு அருகில் இருக்கும் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கலெக்டர் அலுவலகம் அருகில் மாற்றப்படுகிறது. இதனால் அங்கு புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட 8 ஏக்கர் நிலம் கொடுக்கப்படுகிறது. நீதிமன்ற ஊழியர்கள் குடியிருப்புக்கு கூடுதலாக 2 ஏக்கர் நிலம் கேட்டுள்ளனர். 2 ஏக்கர் நிலமும் விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

 

பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம்: நகராட்சி தலைவர் நேரில் ஆய்வு

Print PDF

தினமலர் 18.10.2010

பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம்: நகராட்சி தலைவர் நேரில் ஆய்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளை நகராட்சி தலைவர் ராஜா, நகராட்சி கமிஷனர் சுரேந்திரஷா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.ஆய்வின்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர்கள் செல்வதுரை, வெங்கடேசன், உதவி பொறியாளர்கள் சிவப்பிரகாசம், எழிலரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வுக்கு பின் தலைவர் ராஜா மற்றும் கமிஷனர் சுரேந்திரஷா ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

பெரம்பலூர் நகராட்சியில் 23 கோடியே 38 லட்சம் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற 2008ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.மொத்தமுள்ள 87 கிலோ மீட்டரில் 81 கிலோ மீட்டர் தொலைவுக்கு கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளன. மீதியுள்ள ஆறு கிலோ மீட்டர் பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. மூன்று கோடியே 16 லட்சம் ரூபாயில் சுத்திகரிப்பு நிலைய பணிகள் நடப்பாண்டு மே., 7ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு 2012ம் ஆண்டு மே., 7ம் தேதி இப்பணி முடிக்கப்பட உள்ளன.

துறைமங்கலம் பெரிய ஏரி அருகில் பிரதான கழிவுநீர் உந்து நிலையம் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வருகின்றன. அரணாரை, விளாமுத்தூர் ஆகிய இரண்டு இடங்களில் உந்து நிலைய பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அசோக்நகர் கலெக்டர் ஆபீஸ் ரோடு, மூன்று ரோடு, நான்கு ரோடு, எளம்பலூர் ரோடு ஆகிய விடுபட்ட பகுதிகளுக்கு 2 கோடி ரூபாயில் இத்திட்டத்தை நிறைவேற்ற அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 10 ஆயிரத்து 169 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 


Page 339 of 506