Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வீடு, வர்த்தக நிறுவனங்கள் வாசலில் குப்பை கொட்டினால் அபராதம்: மேயர்

Print PDF

தினமணி 14.10.2010

வீடு, வர்த்தக நிறுவனங்கள் வாசலில் குப்பை கொட்டினால் அபராதம்: மேயர்

மதுரை, அக். 13: மதுரை மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள வீடுகள், கடைகள், வர்த்த நிறுவனங்கள் வாசல் முன்பு குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் தேன்மொழி எச்சரித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மேயர் தேன்மொழி தலைமையில் துணை மேயர் பி.எம். மன்னன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் குப்பைகளை அகற்றுதல், குடிநீர் இணைப்பு மற்றும் பாதாளச் சாக்கடை இணைப்பு வேண்டியும், நெல்பேட்டை மீன் மார்க்கெட் பகுதியில் குடிநீர் இணைப்பு வேண்டியும், வில்லாபுரம் பகுதியில் குடிநீர் விநியோக நேரத்தை மாற்றி மீண்டும் காலையிலேயே குடிநீர் விநியோகம் செயய்க் கோரியும் மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களை பரிசீலித்த மேயர் தேன்மொழி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை இணைப்பு வேண்டுவோர் மாநகராட்சியை அணுகிப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தார்.

மேலும் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் குப்பைகளை சாலைகளில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். அவ்வாறு குப்பை கொட்டுவோர் வார்டு சுகாதார ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றார்.

முன்னதாக, பழுதடைந்த அழகர் திருமண மண்டபத்தை பார்வையிட்ட மேயர், மண்டபத்தை மராமத்து செய்து புதுப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். புதிதாக கட்டப்பட்டு வரும் சத்துணவுக்கூடம், நூலக கட்டடப் பணிகளை விரைந்து முடிக்குமாறும் ஒப்பந்ததாரர்களை கேட்டுக் கொண்டார்.

மேலும் புதுமாகாளிபட்டி ரோட்டிலுள்ள புதிய சமுதாயக்கூடம் கட்டுவதற்கு இடம் தேர்வு மற்றும் முனிச்சாலை மகப்பேறு மருத்துவமனை புதிய கட்டடப் பணிகளை பார்வையிட்ட மேயர் அவரை விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் க. தர்ப்பகராஜ், தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், கண்காணிப்புப் பொறியாளர் ஆர். விஜயகுமார், மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி, உதவி ஆணையர் (கிழக்கு) அங்கயற்கண்ணி, நிர்வாகப் பொறியாளர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அதிகாரி இரா.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

ரூ.19 கோடி கேட்டு மாநகராட்சி கடிதம் நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் ஆய்வு

Print PDF

தினகரன் 13.10.2010

ரூ.19 கோடி கேட்டு மாநகராட்சி கடிதம் நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் ஆய்வு

நெல்லை, அக். 13: நெல்லையில் சாலை களை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம், நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு கடி தம் எழுதியது. இதன் அடிப்படையில் நெல்லை மாநகராட்சியில் 60 சாலைகளை சீரமைக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலப்பாளையம் மண்டலத்தில் குடிநீர் குழாய் களை மாற்றுதல், சாந்திநகர், தியாகராஜநகரில் மழைநீர் வடிகால் வசதிகள், நீரேற்று நிலையங்களில் உரிய வசதி கள் உள்ளிட்ட 12 பணிகளுக்காக ரூ.19 கோடியை மாநகராட்சி கேட்டுள்ளது. இதையடுத்து நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் சந்திரசேகரன் நேற்று நெல் லைக்கு ஆய்வு மேற்கொள்ள வந்தார்.

மேம்பாடு பணிகள் நடக்கவுள்ள நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் புதிய பஸ் நிலையம், மாநகராட்சி வாகன காப்பகம், திருமலை கொழுந்துபுரம், மணப்படை வீடு நீரேற்று நிலையங்கள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூடுதல் இயக்குனர் அளிக் கும் அறிக்கையின் அடிப்படையில் நெல்லை மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வின்போது கமிஷனர் சுப்பையன், சுகாதார ஆய்வாளர் அரசகுமார் உடனிருந்தனர்.

 

மருத்துவ விடுப்பு எடுத்த நகராட்சி அதிகாரியை டிஸ்மிஸ் செய்தது சரி

Print PDF

தினகரன் 13.10.2010

மருத்துவ விடுப்பு எடுத்த நகராட்சி அதிகாரியை டிஸ்மிஸ் செய்தது சரி

மதுரை, அக். 13: நீண்டநாள் மருத்துவ விடுப்பு எடுத்த நகராட்சி அதிகாரியை பணி நீக்கம் செய்தது சரி தான் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் நகராட்சியில் சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிந்தவர் கணேசன். இவர் 2004 ஜனவரி 28 முதல் தகவல் தெரிவிக்காமல் விடுமுறை எடுத்துள்ளார். இதனால் இவரை 2007 செப்டம்பர் 19ல் டிஸ்மிஸ் செய்து நகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். பணி நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து, மீண்டும் பணியில் சேர்த்து அனைத்து பணப்பலன்களையும் வழங்க உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் கணேசன் மனுத்தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி கே.சந்துரு பிறப்பித்த உத்தரவு; மனுதாரர் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவ குழு அவர் நல்ல உடல் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்பிறகும் பணியில் சேராமல் விடுப்பை நீட்டித்துள்ளார். இது தொடர்பான அதிகாரியின் விசாரணைக்கு அவர் செல்லவில்லை, உரிய விளக்கமும் அளிக்கவில்லை. இதனால், அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே, மனுதாரரை பணி நீக்கம் செய்ததில் தலையிட முகாந்திரம் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

 


Page 342 of 506