Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

அனுமதி இன்றி டிஜிட்டல் போர்டு வைத்தால் கடும் நடவடிக்கை

Print PDF

தினமலர் 04.10.2010

அனுமதி இன்றி டிஜிட்டல் போர்டு வைத்தால் கடும் நடவடிக்கை

தூத்துக்குடி : தூத்துக்குடி நகரில் அனுமதி இன்றி டிஜிட்டல் போர்டு வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏஎஸ்பி தெரிவித்தார். தூத்துக்குடி நகரில் பல இடங்களில் ஏராளமான டிஜிட்டல் போர்டுகள் இருந்து வருகிறது இந்த டிஜிட்டல் போர்டினால் பொது மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர், மேலும் ராட்சத டிஜிட்டல் போர்டுகள் கீழே விழும் நிலையில் காணப்படுகிறது அவ்வாறு கீழே விழும் பட்சத்தில் பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது தொடர்பான புகார்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த வண்ணம் உள்ளது இதனை தடுப்பதற்காக நேற்று தூத்துக்குடி தென் பாகம் போலீஸ் ஸ்டேஷனில் ஆலோசனை கூட்டம் நடந்தது இந்த கூட்டத்திற்கு ஏஎஸ்பி சோனல் சந்திரா தலைமை வகித்தார். இதில் திமுக., அதிமுக., காங்கிரஸ், சமக., பாமக., மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

இது குறித்து ஏஎஸ்பி.,நிருபர்களிடம் கூறியதாவது, தூத்துக்குடி மாநகரில் எங்கு பார்த்தாலும் டிஜிட்டல்போர்டுகள் அதிக அளவில் காணப்படுகிறது இது பொது மக்களுக்கு இடையூறாக காணப்படுகிறது.டிஜிட்டல் போர்டு வைப்பதற்கு மாநகராட்சியின் முன் அனுமதி பெற வே ண்டும்.விழா நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் டிஜிட்டல் போர்டு வைக்க வேண்டும்.விழா முடிந்த இர ண்டு நாட்கள் கழித்து டிஜிட்டல் போர்டுகளை எடுத்து விட வேண்டும். டிஜிட்டல் போர்டுகள் ஆலோசனை கூட்டத்தில் கூறிய அளவில் தான் வைக்க வேண்டும் இது வரும் 11ம் தேதிமுதல் அமல்படுத்தபடுகிறது.இதனை மீறுபவர்கள் மீது கடும் நடடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

தேர்தல் பணி செய்ய பேரூராட்சி ஊராட்சி பணியாளர்களுக்கு தடை

Print PDF

தினமலர் 04.10.2010

தேர்தல் பணி செய்ய பேரூராட்சி ஊராட்சி பணியாளர்களுக்கு தடை

உத்தமபாளையம் : ஓட்டுச் சாவடி களப் பணியாளர்களாக பணிபுரிந்து வந்த பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்களை இனி அப்பணிக்கு பயன்படுத்தக் கூடாது என, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. விடுபட்ட வாக்காளர்கள், புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளுடன் முழுமையான இறுதி வாக்காளர் பட்டியலை தயாரிப்பதை பிரதான பணியாக செய்து வருகிறது.

இப்பணிகளில் சேர்த்தல், நீக்கல், மாற்றம், திருத்தம் ஆகியவற்றிற்காக கொடுக்கப்படும் மனுக்கள் மீதான விசாரணைக்கு பள்ளி ஆசிரியர்கள், பல்வேறு துறைகளின் அரசு ஊழியர்கள், பேரூராட்சி பணியாளர்கள், ஊராட்சி உதவியாளர்கள் ஆகியோர் பயன்படுத்தப்பட்டு வந்தனர். இவர்கள் நேரடியாக மனுதாரர் வீட்டிற்கே சென்று விசாரணை மேற்கொண்டு, சான்றிதழ்களை சரிபார்த்து அம்மனுக்களை தேர்தல் பிரிவில் சமர்ப்பித்து வந்தனர்.

இவர்களில் பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்கள் விசாரணை செய்து சமர்ப்பிக்கும் மனுக்களில் பல்வேறு குளறுபடிகளும், முழுமை பெறாமலும் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர இவர்களில் பலர் நேரடியாக களப்பணியில் ஈடுபடாமல் தங்களுக்கு தெரிந்த விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கின்றனர். இவ்வாறு செய்வதால் ஏராளமான வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படாமல் விடுபடுகின்றனர். கீழ்நிலை பணியாளர்கள் என்பதால் இந்த தவறுகள் குறித்து இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளவோ, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவோ சாத்தியமில்லாத நிலை உள்ளது.

எனவே இப்பணியாளர்களை இம்மாதம் முதல் இப்பணிகளில் பயன்படுத்தக் கூடாது என, தடை விதித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக பள்ளி ஆசிரியர்களை கூடுதலாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் நேரில் ஆய்வு

Print PDF

தினகரன் 04.10.2010

குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் நேரில் ஆய்வு

தர்மபுரி, அக்.4: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குனர் ஹிதேஷ்குமார் மக்வானா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒகேனக்கல்லில் அமைக்கப்பட்டு வரும் முதன்மை நீரேற்று நிலையம் உள்பட ஒகேனக்கல் திட்டப்பணிகளை நடைபெறும் பகுதிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது பணிகளின் தற்போதைய நிலை தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கி கூறினார்கள். இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்திற்காக 2&ம் கட்ட தொகையை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஆனந்தகுமார், ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட முதன்மை பொறியாளர் ரவிச்சந்திரன், நிர்வாக பொறியாளர் திருமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப்பணி

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் குறித்து குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குனர் ஹிதேஷ்குமார் மக்வானா ஒகேனக்கல்லில் ஆய்வு செய்கிறார். அவரிடம் திட்ட பணிகள் குறித்து வரைபடங்கள் மூலம் அதிகாரிகள் விளக்குகின்றனர்.

அப்போது பணிகளின் தற்போதைய நிலை தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கி கூறினார்கள். இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்திற்காக 2&ம் கட்ட தொகையை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஆனந்தகுமார், ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட முதன்மை பொறியாளர் ரவிச்சந்திரன், நிர்வாக பொறியாளர் திருமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 


Page 346 of 506