Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

தியேட்டர்கள், வணிக வளாகங்களில் "பார்க்கிங்"கில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை மேயர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

Print PDF

மாலை மலர் 28.09.2010

தியேட்டர்கள், வணிக வளாகங்களில் "பார்க்கிங்"கில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை மேயர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தியேட்டர்கள், வணிக வளாகங்களில்
 
 “பார்க்கிங்”கில் அதிக கட்டணம்
 
 வசூலித்தால் நடவடிக்கை
 
 மேயர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை, செப். 28- சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

சைதைரவி: பன்றிக் காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த மாநகராட்சி எடுத்துள்ள ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என்ன?

மேயர் மா.சுப்பிரமணியம்:- ஒவ்வொரு மண்டபத்திலும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. குடிசை பகுதியில் இருந்து வரும் மாணவ-மாணவிகள் படிக்கும் பள்ளிகள் கண்டறியப்பட்டு 400-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இன்று கவுன்சிலர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.

டி.எஸ்.மூர்த்தி (பா...):- மழை நீர் சேமிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு தரமான குடையும், மழைக்கோட்டும் வழங்க வேண்டும். பிளாஸ்டிக்பொருட்களை பயன்படுத்த நகர் முழுவதும் தடை விதிக்க வேண்டும்.

சைதை ரவி:- பெரிய கட்டிடங்கள், வணிக வளாகங்களில் கார் பார்க்கிங் இலவசமாக வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கொசுவை கட்டுப்படுத்த சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி விதிக்க வேண்டும்.

மீனா (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு):- ராயபுரம் ரேஸ் கார்டன் பகுதியில் தினம் தினம் மின் தடை ஏற்படுகிறது. மின் அழுத்தம் குறையும் உள்ளது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்களும் மாணவர்களும் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் 23 தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் குறித்து மேயர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநகராட்சி சார்பில் 3 பல் மருத்துவமனகைள் செயல்பட்டு வருகின்றன. கூடுதலாக இளங்கோ நகர், செம்பியன், டி.பி.சத்திரம், புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோட்டூர் புரம், வேளச்சேரி ஆகிய 7 இடங்களில் பல் மருத்துவமனைகள் தொடங்கப்படும்.

கடந்த 4 வருடங்களில் ரூ. 2 கோடியே 28 லட்சம் செலவில் பாலங்கள், சுரங்க பாதைகள் அழகுபடுத்தப்பட்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 23 தொடக்கப்பள்ளிகள், 18 நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள மிகப்பெரிய வணிக நிறுவனங்கள், தியேட்டர்களில் ஒரு மணி நேரத்துக்கு இரு சக்கர வாகன பார்க்கிங் கட்டணம் 25 ரூபாயும், கார் பார்க்கிங் 40 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழும முறைப்படி இந்த கட்டணம் வசூலிக்கக் கூடாது.

இதை முறைப்படுத்த சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்படும். இது தொடர்பாக விரைவில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

அனுமதியின்றி அமைக்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

Print PDF

தினமணி 28.09.2010

அனுமதியின்றி அமைக்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

ஒட்டன்சத்திரம், செப். 27: ஒட்டன்சத்திரம் பேரூராட்சியில். பேரூராட்சி அனுமதியின்றி குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் வந்தது. இதனையடுத்து, பேரூராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை செயல் அலுவலர் ஜெயக்கொடி மற்றும் அலுவலர்கள் வார்டு வாரியாகச் சென்று காவல் துறை உதவியுடன், அனுமதியின்றி அமைக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளைத் துண்டித்து வருகின்றனர்.

மொத்தமுள்ள 18 வார்டுகளிலும் 132 இணைப்புகள் பேரூராட்சி அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 46 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மீதிமுள்ள இணைப்புகள் இன்னும் 3 நாள்களில் துண்டிக்கப்படும் என்று செயல் அலுவலர் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

 

பன்றிகள் வளர்த்தால் கடும் நடவடிக்கை

Print PDF

தினமலர் 28.09.2010

பன்றிகள் வளர்த்தால் கடும் நடவடிக்கை

மதுரை: மதுரை நகரை குப்பை இல்லா நகரமாக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நகரில் 1, 70, 33, 34 ஆகிய வார்டுகளில் மேயர் தேன்மொழி மக்கள் குறைகளை கேட்டறிந்தார். வைகை ஆற்றின் இருபுறங்களிலும் கோழிக் கழிவுகளையும், குப்பைகளையும் உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். பூந்தோட்டம், பேச்சியம்மன் படித்துறை, ஆனந்த பவனம் பகுதிகளை பார்வையிட்டார். கால்வாயில் தேங்கிய குப்பைகளை அகற்ற உத்தரவிட்டார். அப்பகுதியில் பன்றிகள் அதிகளவு வளர்க்கப்படுவதை அறிந்த அவர் பன்றி வளர்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் தலைமை பொறியாளர் சக்திவேல், நகர்நல அலுவலர் சுப்ரமணியன், மண்டல தலைவர் நாகராஜன், கவுன்சிலர்கள் சிலுவை, நீலமேகம், மாரியப்பன் கலந்து கொண்டனர்.

 


Page 350 of 506