Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

குடிசைமாற்று குடியிருப்பு திட்டப் பணி: ஆட்சியர் ஆய்வு

Print PDF

தினமணி             04.01.2014

குடிசைமாற்று குடியிருப்பு திட்டப் பணி: ஆட்சியர் ஆய்வு

சின்னமனூரில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டு வரும் குடிசைமாற்று குடியிருப்புகளை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 சின்னமனூர் நகராட்சிக்கு மத்திய அரசின் நகர்புற அமைச்சகம் மூலம் ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புதிய குடியிருப்பு மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள ரூ.12 கோடியே 21 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சின்னமனூரில் 14 குடிசைப் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு 950 குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

 புதிய குடியிருப்பு கட்டுமானப் பணி, பாதாளச் சாக்கடை இணைப்பு பணி, பொன்நகரில் நடைபெற்று வரும் தார்ச் சாலை, பேவர் பிளாக் கல் சாலை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, சமுதாயக் கூடம் கட்டுமானப் பணி ஆகியவற்றை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையர் அப்துல்ரசீத், பொறியாளர் சரவணக்குமார், பணி மேற்பார்வையாளர் செல்லத்துரை ஆகியோர் உடனிருந்தனர்.

 

ஆம்னி பேருந்து நிலையத்தில் பணிகளை விரைந்து முடிக்க மேயர் உத்தரவு

Print PDF

தினமணி             04.01.2014

ஆம்னி பேருந்து நிலையத்தில் பணிகளை விரைந்து முடிக்க மேயர் உத்தரவு

 மாட்டுத்தாவணியில் நடைபெற்று வரும் புதிய ஆம்னி பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதால் எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து, மேயர், ஆணையர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளனர்.

  மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில், ஆம்னி பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இப் பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதாக, பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாநகராட்சி ஆணையர் கிரன்குராலா தலைமையில், மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா ஆய்வு மேற்கொண்டார்.

  அப்போது, 49 பதிவு அலுவலகங்கள், பேருந்து நிறுத்தம், பயணிகள் நிழற்குடை, மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைத்தல், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் ஆகியன முடிவடையும் தறுவாயில் இருப்பதையும், தார் சாலை, நவீன கழிப்பறை, பொதுக் கழிப்பறை, பயணிகள் அமர்வதற்கான இருக்கைகள் போன்ற பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதும் தெரியவந்தது.

  நுழைவு வாயில் அமைக்கும் பணியும் இழுபறியாக உள்ளது. மாநகரின் மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான ஆம்னி பேருந்துகள் இயக்கத்தை முற்றிலுமாக மாட்டுத்தாவணிக்கு மாற்றும் விதத்தில்தான், இப்பேருந்து நிலையம் பல கோடி ரூபாயில் திட்டமிடப்பட்டுள்ளது.

   துவக்கத்தில் இருந்தே பேருந்து பணிகள் தரமாக நடைபெறவில்லை என்ற புகாரும் இருந்து வருகிறது. தற்போது, மேலும் கூடுதல் நிதிகளை பெறும் நோக்கில் பணிகளை இழுத்தடிப்புச் செய்து வருவதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன. வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மேயரும், ஆணையரும் விரைந்து பணிகளை முடிக்குமாறு, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கும், பொறியாளர்களுக்கும் உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

 

நகராட்சி நோட்டீஸ்

Print PDF

தினமலர்                03.01.2014

நகராட்சி நோட்டீஸ்

தேனி: தேனி புது பஸ்ஸ்டாண்டில் கடைகளை ஏலம் எடுத்தவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கி வருகிறது. தேனி புதுபஸ்ஸ்டாண்டில் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. போக்குவரத்துக்கழகம் சார்பில் அம்மா குடிநீர் கூட விற்பனை தொடங்கப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் எந்த பொருட்களும் வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். குடிநீர் கூட கிடைக்காமல் தவிக்கின்றனர். இதனை தொடர்ந்து கடைகளை விரைவில் திறக்க ,நகராட்சி நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதில் முதற்கட்டமாக கடைகளை ஏலம் எடுத்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி வருகிறது. அதில் கடைகளை ஏலம் எடுத்த ஏலதாரர்கள், ஒரு ஆண்டு வாடகை கட்டணம் மற்றும் சேவை வரி, உறுதிமொழி படிவத்தை நகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பித்து சாவியை பெற்று கடைகளை திறக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 


Page 36 of 506