Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

அனுமதியின்றி பேனர் வைக்க தடை டிஎஸ்பி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

Print PDF

தினகரன் 24.09.2010

அனுமதியின்றி பேனர் வைக்க தடை டிஎஸ்பி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

தாராபுரம், செப். 24: தாராபுரத்தில் போலீசார் அனுமதி இல்லாமல் பிளக்ஸ் பேனர் கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் போலீஸ் சார்பில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளுக்கும் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் சிவரஞ்சனி மஹாலில் நடத்தப்பட்டது. காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மந்திரமூர்த்தி தலைமையில் நடை பெற்ற கூட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், மா.கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட அனைத் துக் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

நகரப் பகுதியில் வைக்கப்படும் விளம்பர பிளக்ஸ் பேனர்கள் இதுவரையில் நகராட்சியின் அனுமதியை முறைப்படி பெறுவதில்லை. போக்குவரத்துக்கு இடை யூறாக வைக்கப்படும் பேனர் கள், வைக்கப்பட்டு பல மாதங்கள் ஆனாலும் அப்புறப்படுத்தாமல் இருக்கிறது.இதனால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. பொதுமக்கள் பெரிய அளவில் பாதிப்புக்குளாகின்றனர். முக்கியமான சாலைகளில் தொடர் விபத்து ஏற்படுகிறது. எனவே, இனிமேல் போலீஸ் அனுமதியுடன் பிளக்ஸ் பே னர்கள் வைக்கப்பட வேண் டும் அனுமதியில்லாத பேனர் களுக்கு தடை விதிக்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கு 2 நாள் முன்பு பேனர்கள் வைக்கப்படவேண்டும். நிகழ்ச்சி முடிந்ததும் 2 நாட்களுக்குள் பேனர்களை அப்புறப்படுத்த வேண்டும். உத்தரவை மீறி வைக்கப்படும் பேனர்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பாபர் மசூதி பிரச் னை குறித்த தீர்ப்பை ஏற்று, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாதவாறு நடந்து கொள்ளவும் கூட்டத்தின் மூலம் அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்களை யும் கேட்டுக் கொள்ளப்பட் டது.

தாராபுரம் காவல் ஆய் வாளர் இளமுருகன், குண்ட டம் காவல் ஆய்வாளர் கிருஷ் ணசாமி, திமுக நகர செயலா ளர் கே.எஸ்.தனசேகர், நகரமன்ற துணைத் தலைவர் மாரிமுத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் நடராஜ், கருணாக ரன், மா.கம்யூ தாலுகா செயலாளர் வெங்கட்ராமன், கனகராஜ், பி.ஜே.பி நகர செயலாளர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர் ராம சாமி, பாமக நகர தலைவர் பெரியசாமி, ஒன்றிய செய லாளர் முனியப்பன், கருப்பு சாமி, முஸ்லீம் அமைப்புகளில் அபுதாகீர், முகமது இஸ்மாயில், முகமது இக்பால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ்முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தாராபுரத்தில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் டி.எஸ்.பி மந்திரமூர்த்தி தலைமையில் நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர்கள் இளமுருகன், கிருஷ்ணசாமி மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

இலஞ்சி டவுன் பஞ்.,சிறப்புகூட்டத்திற்கு ஐகோர்ட் தடை

Print PDF

தினமலர் 24.09.2010

இலஞ்சி டவுன் பஞ்.,சிறப்புகூட்டத்திற்கு ஐகோர்ட் தடை

தென்காசி:இலஞ்சி டவுன் பஞ்.,தலைவரை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக நடக்க இருந்த சிறப்பு கூட்டத்திற்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.இலஞ்சி டவுன் பஞ்.,துணைத் தலைவர் காத்தவராயன் உட்பட 12 கவுன்சிலர்கள் டவுன் பஞ்.,தலைவர் பிச்சையா மீது புகார் தெரிவித்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர். இதனையடுத்து இதுபற்றிய சிறப்பு கூட்டம் நேற்று நடப்பதாக பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அறிவித்திருந்தார்.

கூட்டத்தில் கலந்து கொள்ள துணைத் தலைவர் காத்தவராயன், கவுன்சிலர்கள் துரை, அருணாசலம், ராமச்சந்திரன் () மோகன், பரமசிவன், இசக்கி, செல்லத்துரை, மைதீன் பாத்து, சிவகாமி, அங்கம்மாள், சுப்புலட்சுமி, சின்னத்தாய் வந்தனர். கூட்டத்தை நடத்த வந்த நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சுரேஷ்குமார் ஐகோர்ட் இடைக்கால தடையால் கூட்டம் நடத்தப்படவில்லை என்றார்.இதுபற்றி உதவி இயக்குநர் கூறும் போது, "சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் இலஞ்சி டவுன் பஞ்., சிறப்பு கூட்டம் நடத்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கூட்டம் நடத்த இயலாது' என்றார்.கூட்டம் நடக்க இருந்த டவுன் பஞ்., அலுவலக வளாகத்தில் குற்றாலம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கூறிய விளக்கத்தை ஏற்று துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர். சிறப்பு கூட்டத்தை காண அதிகளவில் கூடிய பொதுமக்களும் திரும்பி சென்றனர்.

 

மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டம் ஜப்பான் வங்கிக்குழு நேரில் ஆய்வு

Print PDF

தினமலர் 23.09.2010

மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டம் ஜப்பான் வங்கிக்குழு நேரில் ஆய்வு

திருச்சி: திருச்சி மாநகராட்சி மாநகராட்சியில் நடக்கும் குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகளை, அத்திட்டத்துக்கு நிதியுதவி வழங்கும் ஜப்பான் நாட்டு வங்கி பிரதிநிதி குழு பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம், ஜப்பான் நிதி நிறுவன உதவி மாநில அரசு மானியம், மாநகராட்சி பங்களிப்பு ஆகியவை சேர்த்து, 169 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் அபிவித்தி திட்டப் பணிகள் நடந்து வருகிறது.

ஸ்ரீரங்கம், மேலூர் பகுதி கொள்ளிடம் ஆற்றில் நடக்கும் இப்பணிகளை, ஜப்பான் வங்கி பிரதிநிதிகள் சேனோ, இட்டோ மற்றும் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குழுவினர் திட்டப் பணியில மூன்று இடத்தில் அமைத்துள்ள பிரதான நீர் சேகரிக்கும் கிணறு, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணி, 52வது வார்டு ஆனந்தம் நகர், சுப்பிரமணி நகரில நடந்து வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணி ஆகியவற்றை நேரடியாக பார்வையிட்டனர்.

பணிகள் முன்னேற்றம் குறித்து குழுவினர் மாநகராட்சி அலுவலகம் ஆலோசனை நடத்தினர். மாநகராட்சி கமிஷனர் பால்சாமி, உலக ஒற்றுமைக்கான ஜப்பான் வங்கி இந்திய பிரதிநிதி மற்றும் முதுநிலை மேம்பாட்டு வல்லுநர் மிகிர் சோர்டி, நகர் உள்கட்டமைப்பு நிதி வசதி சேவை கழக உதவித் துணைத் தலைவர் ராஜந்திரன் உடனிருந்தனர்.

 


Page 353 of 506