Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நெல்லையில் குடிநீர் உறிஞ்சிய 26 மின்மோட்டார்கள் பறிமுதல்

Print PDF

தினகரன் 22.09.2010

மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நெல்லையில் குடிநீர் உறிஞ்சிய 26 மின்மோட்டார்கள் பறிமுதல்

நெல்லை, செப். 22: நெல்லை மாநகராட்சி பகுதியில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சிய 26 மின் மோட்டார்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன. வீட்டுக் குடிநீர் இணைப் பில் சட்ட விரோதமாக மோட்டார் பொருத்தி குடி நீர் உறிஞ்சுவது தொடர்பாக ஏராளமான புகார்கள் மாநகராட்சிக்கு சென்றன. அதன் அடிப்படையில் நேற்று காலை 6 மணி முதல் 8 மணி வரை பாளை மிலிட் டரி லைன் தெரு, கிருபாகரன்தெரு, பேரின்பதெரு, எல்லாம் வல்லவன் தெரு, சிவன்கோயில் கீழத்தெரு, வடக்குரதவீதி, பிச்சுவனத்தெரு, கடிகார ஆசாரி தெரு, கோட்டூர் ரோடு, தச்சை மண்டலம் சிந்துபூந் துறை, செல்விநகர் தெருக்களிலும் வீட்டுக் குடிநீர் இணைப்புகள் இன்ஜினியர்கள் குழுவால் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சிய 26 மோட் டார் பம்புகள் கைப்பற்றப்பட்டன. மோட்டார் பொருத்திய வீடுகளில் குடி நீர் இணைப்புகளும் உடனடியாக துண்டிக்கப்பட்டன. குடிநீர் இணைப்பு தாரர்கள் மோட்டார் பொருத்தி சட்ட விரோதமாக குடிநீர் எடுத் தால் குற்ற வழக்கு தொடரப்படும் என மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் எச்சரித்துள்ளார். இந்த ஆய்வுகள் தொடர்ந்து மாநகராட்சி யின் பிற பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட உள்ளது. பாளை. பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் வீடுகளில் குடிநீர் குழாயில் முறைகேடாக பொருத்தப்பட்ட மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்

Print PDF

தினகரன் 22.09.2010

வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்

ஆர்.எஸ்.மங்கலம், செப்.22:ஆர்.எஸ்.மங்கலம் பஸ் நிலையத்தில் பேரூராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் 31 கடைகள் உள்ளன. 29 கடைகளின் உரிமையாளர்கள் மட்டுமே வாடகை முறையாக செலுத்தி உள்ளனர். மற்ற இரண்டு கடைகள் பல மாதமாக வாடகை செலுத்தாததால் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் விவேகானந்தன் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்கள் கடையை பூட்டி சீல் வைத்தனர். ஆர்.எஸ்.மங்கலம் காவல்துறை ஆய்வாளர் பில்லத்தியான் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

நெல்லை, பாளை., பகுதி வீடுகளில் ரெய்டு 26 குடிநீர் மின் மோட்டார்கள் பறிமுதல்

Print PDF

தினமலர்              22.09.2010

நெல்லை, பாளை., பகுதி வீடுகளில் ரெய்டு 26 குடிநீர் மின் மோட்டார்கள் பறிமுதல்

திருநெல்வேலி : நெல்லை, பாளை., பகுதிகளில் வீட்டுக் குடிநீர் இணைப்பில் பொருத்தப்பட்டிருந்த 26 மின் மோட்டார்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.நெல்லை மாநகராட்சி பகுதிகளில் வீட்டுக் குடிநீர் இணைப்பில் சட்ட விரோதமாக மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவது சம்பந்தமாக ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து கமிஷனர் சுப்பையன் உத்தரவின் பேரில் பாளை., மண்டலத்தில் மிலிட்டரி லைன் தெரு, கிருபாகரன் தெரு, பேரின்பதெரு, எல்லாம் வல்லவன் தெரு, சிவன் கோயில் கீழத் தெரு, சிவன்கோயில் வடக்கு ரதவீதி, பிச்சுவனத் தெரு, கடிகார ஆசாரி தெரு, முனையாடுவார் நயினார் தெரு, கோட்டூர் ரோடு மற்றும் தச்சநல்லூர் மண்டலம் சிந்துபூந்துறை, செல்விநகர் பகுதிகளிலும் வீட்டுக் குடிநீர் இணைப்புக்கள் பொறியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் 26 வீடுகளில் குடிநீர் இணைப்பில் மோட்டார் பொருத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. மோட்டார் பொருத்திய இணைப்புக்கள் உடனடியாக துண்டிக்கப்பட்டன.

கமிஷனர் எச்சரிக்கை : குடிநீர் இணைப்புதாரர்கள் சட்ட விரோதமான மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவதை தவிர்க்கவேண்டும். மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் அவை பறிமுதல் செய்யப்பட்டு, குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும். குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் கமிஷனர் சுப்பையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Last Updated on Wednesday, 22 September 2010 07:43
 


Page 355 of 506