Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில் போஸ்டர் போலீசில் புகார் செய்ய கமிஷனர் உத்தரவு

Print PDF
தினமலர்               22.09.2010

மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில் போஸ்டர் போலீசில் புகார் செய்ய கமிஷனர் உத்தரவு

திருநெல்வேலி : மாநகராட்சி குப்பைத் தொட்டியில் போஸ்டர் ஒட்டினால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் சுப்பையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.நெல்லை மாநகராட்சி பகுதியில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த 4.5 மெட்ரிக் டன் கொள்ளவு உள்ள மஞ்சள் நிற குப்பைத் தொட்டிகளும், 1.1 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட பச்சை நிற குப்பைத் தொட்டிகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டிகளின் மீது நோட்டீஸ், வால் போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் அவை என்ன பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது என்ற விபரம் தெரியாமல் போவதால் பொதுமக்கள் குப்பைத் தொட்டி தவிர்த்து பிற இடங்களில் குப்பை கொட்டும் நிலை உருவாகிறது. எனவே மாநகராட்சி குப்பைத் தொட்டிகள் மீது விளம்பர போஸ்டர்கள் ஒட்டுவோர் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருவனந்தபுரம் ரோட்டிலுள்ள ஒரு குப்பைத் தொட்டியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. சுவரொட்டிகள் ஒட்டியவர் மீது சுகாதார ஆய்வாளர் சாகுல்ஹமீது பாளை., போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.மேலும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள குப்பைத் தொட்டிகள் மீது போஸ்டர் ஒட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் சுப்பையன் எச்சரித்துள்ளார்.

Last Updated on Wednesday, 22 September 2010 07:43
 

துப்புரவுப் பணியாளர் நியமனம்: முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை- மேயர் எச்சரிக்கை

Print PDF

தினமணி 21.09.2010

துப்புரவுப் பணியாளர் நியமனம்: முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை- மேயர் எச்சரிக்கை


சென்னை, செப். 20: மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள் பணி நியமனத்தில் முறைகேடு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர மேயர் மா. சுப்பிரமணியம் திங்கள்கிழமை எச்சரித்துள்ளார்.

÷மாநகராட்சியில் ஒரு சில மண்டலங்களில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்த முறையில் அனுமதி வழங்கப்பட்டது.

÷எனினும், ராயப்பேட்டை, மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் துப்புரவுப் பணி சீராக நடைபெறாததால், குப்பைகள் குவிந்து சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

÷இதையடுத்து, மீண்டும் மாநகராட்சியே அனைத்துப் பகுதியிலும் திடக்கழிவு மேலாண்மைத் துறை மூலம் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

÷இதன்படி, மாநகராட்சியில் காலியாக உள்ள 4,600 துப்புரவுப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரைப் பட்டியல் அனுப்பப்பட்டு வருகிறது.

÷இதன்படி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, 5-ம் வகுப்பு முதல் தேர்ச்சி பெற்றதற்கான கல்விச் சான்று, பிறப்புச் சான்று, ஜாதிச் சான்றிதழ், புகைப்படப் பிரதிகள், ரேஷன் அட்டை நகல் ஆகியவற்றுடன் மாநகராட்சியில் குறிப்பிட்ட தேதிகளில் நடக்கும் நேர்காணலில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

÷தேர்வு செய்யப்படுவோருக்கு கால முறையிலான தகுதி ஊதியமாக ரூ.4,800 மற்றும் இதர சலுகைகளும் வழங்கப்பட உள்ளன.

÷30.8.10-ல் நடத்தப்பட்ட நேர் காணலுக்குப் பின், 784 துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்பின் பல்வேறு கட்டமாக இந்த நேர்காணல் நடைபெறவுள்ளது.

மேயர் எச்சரிக்கை: இந்த நிலையில், இது குறித்து மேயர் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை கூறியதாவது: துப்புரவுப் பணியாளர் பணி நியமனம் வரையறுக்கப்பட்ட தகுதி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடிப்படையில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.

÷இதில் விதிகளை மீறி யாரேனும் முறைகேடு செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பின் தாமதமாக இணைப்பு பெற்றால் கூடுதல் தொகை செலுத்த வேண்டும் நகராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினகரன் 21.09.2010

பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பின் தாமதமாக இணைப்பு பெற்றால் கூடுதல் தொகை செலுத்த வேண்டும் நகராட்சி தலைவர் தகவல்

தர்மபுரி, செப்.21: பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் முடிந்த பின்னர், இணைப்பு பெற்றால் கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருக்கும். எனவே பொது மக்கள் விரைவாக இணைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நகராட்சி தலைவர் கூறினார்.

தர்மபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 19 வார்டுகளில் முதல்கட்ட பணியாக ரூ24கோடியில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டப் பணியில் சேர ஒரு வீட்டுக்கு ரூ5

ஆயிரம் முன் பணமாக செலுத்த வேண்டும். ஆனால் சொந்த வீடுகள் உள்ளோர் பலர் இப்பணியில் சேராமல் உள்ளனர். பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்த பின்னர் இணைப்புபெற்றால் கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே தர்மபுரி நகராட்சி பகுதியில் வசிப்பவர்கள், பாதாள சாக்கடை பணிகள் நடக்கும் போது, தங்கள் வீடுகளுக்கான இணைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நகரமன்ற தலைவர் ஆனந்தகுமார் ராஜா கூறியதாவது:

தர்மபுரி நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டப்பணியில் இணைப்பு பெற அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலானோர் இதுவரை இணைப்பு பெற முன்பணம் செலுத்தவில்லை. ஒரு இணைப்புக்கு ரூ5 ஆயிரம் முன்பணமாக செலுத்த வேண்டும். 6 ஆயிரம் இணைப்புகள் மூலம் ரூ3 கோடி வசூலிக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

 ஆனால் இதுவரை ரூ12 லட்சம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட திட்டப் பணிகள் ஒரு சில வார்டுகளில் மட்டும் முடிந்துள்ளது. சில வார்டுகளில் இன்னும் நடந்து வருகிறது. இதனால் வார்டுகளில் பணிகள் நடக்கும் போதே இணைப்பு பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்கான தொகையை நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி இணைப்பை பெறலாம். பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்த பின்னர் இணைப்பு பெற விண்ணப்பத்தால், கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருக்கும். எனவே நகராட்சி பகுதியில் உள்ள வீட்டின் உரிமையாளர்கள், வர்த்தக நிறுவனத்தினர் உரிய தொகையை செலுத்தி இணைப்பை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 


Page 356 of 506