Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

விருத்தாசலம் நகராட்சி மீது நடவடிக்கைக்கு கோரிக்கை

Print PDF

தினமலர்     21.09.2010

விருத்தாசலம் நகராட்சி மீது நடவடிக்கைக்கு கோரிக்கை

விருத்தாசலம் : விருத்தாசலம் நகராட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத் துள்ளது.

இம்மைய தலைவர் செந்தமிழ்ச்செல்வன் கலெக்டர் சீத்தாராமனுக்கு அனுப்பியுள்ள மனு: விருத்தாசலம் 30வது வார்டு ராஜவேல் வீதியில் நகராட்சி சார்பில் 10 லட்சம் ரூபாய் செலவில் 52 கடைகள் கொண்ட காய்கறி மார்க்கெட் கட்டப்பட்டு கடந்த 2007ம் ஆண்டு திறக்கப் பட்டது. இந்த மார்க் கெட்டிற்கு நுழைவு வாயில், கதவுகள், முறையான குடிநீர், கழிவு நீர் வசதிகள் செய்யப்படவில்லை.மார்க்கெட் திறக்கப் பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை பயனற்ற நிலையிலேயே உள்ளது. தற்போது சிலர் இந்தக் கடைகளை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். அரசு பணத்தை வீணடித்து பல லட்சம் நஷ்டம் ஏற்படுத்திய விருத்தாசலம் நகராட்சி மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது

Last Updated on Tuesday, 21 September 2010 08:42
 

நாகையில் புதை சாக்கடை திட்டப் பணிகள் ஆய்வு

Print PDF

தினமணி 17.09.2010

நாகையில் புதை சாக்கடை திட்டப் பணிகள் ஆய்வு

நாகப்பட்டினம், செப். 16: நாகை நகராட்சியில் நடைபெற்று வரும் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ச. முனியநாதன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

நாகை நகராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 49 கோடியே 43 லட்சம் ரூபாயில் செலவில் நகராட்சி பகுதிக்குள்பட்ட வேதநாயகம் தெரு, செட்டித்தெரு, கிடங்கு சாலை, பப்ளிக் ஆபீஸ் சாலை, பெருமாள் தெற்கு வீதி, கடற்கரை சாலை, பாண்டியன் திரையரங்கு சாலை உள்ளிட்ட இடங்களில் புதை சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை புதன்கிழமை ஆட்சியர் முனியநாதன் பார்வையிட்டார்.

இதன் பின்னர் ஆட்சியர் கூறியது:

புதை சாக்கடைத் திட்டத்தின்கீழ் மொத்தம் 3,418 ஆள் நுழைவுக் குழிகளும், 90.30 கி.மீ. நீளத்துக்கு கழிவு நீர் சேகரிப்பு குழாய்களும், 9 கழிவு நீர் உந்து நிலையம், 2 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை கட்டப்படவுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணிகள் மேற்கொள்ளும்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாள தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகூர்- நாகப்பட்டினம் வரை நகராட்சிப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சீர்செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. மழைகாலத்துக்குள் சாலையின் இருபுறங்களிலும் உள்ள கழிவு நீர் வாய்க்கால்களை சீர் செய்யவும், சேர்ந்துள்ள மணல்களை அப்புறப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.

ஆட்சியரின் இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் எஸ். ராசேந்திரன், உதவி செயற்பொறியாளர் எஸ். கிருஷ்ண பிரசாத், ஆணையர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

சுகாதாரமின்றி செயல்பட்ட ஓட்டல்களுக்கு நோட்டீஸ்

Print PDF

தினகரன் 17.09.2010

சுகாதாரமின்றி செயல்பட்ட ஓட்டல்களுக்கு நோட்டீஸ்

போடி : போடியில் சுகாதாரமின்றி செயல்பட்ட ஓட்டலை மூட ஆர்.டி.., உத்தரவிட்டதையடுத்து வருவாய்த்துறையினர் நோட்டீஸ் வழங்கினர். போடி பஸ்ஸ்டாண்ட் மற்றும் சுற்றியுள்ள பல் வேறு ஓட்டல்களில் தென்னை மட்டை , முந்திரி கொட்டை ஓடுகளை வைத்து எரித்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வந்தனர். இதன்மூலம் வெளியேறும் நச்சு புகையால் சுவாசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் சுகாதாரகேடு ஏற்பட்டது.

போடி நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், டவுன் போலீசார், தீயணைப்பு துறையினரும் இணைந்து போடியில் உள்ள ஓட்டல்களில் சோதனை மேற் கொண்டனர். ஓட்டல் சுகாதாரமின்றியும், பாதுகாப்பு இல்லாத நிலையில் தெரிய வந்தது.

இதற்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டன. ஓட்டலை மூட ஆர்.டி.., மோகனதாஸ் உத்தரவிட்டதையடுத்து போலீசார் மூலம் வருவாய்த்துறையினர் போடி பஸ் ஸ்டாண் டில் செயல்பட்டுவந்த ஓட்டலை மூடவும், சுகாதாரம் மற்றும் கட்டட உறுதி சான்று பெற்ற பின்பு திறந்து கொள்ளுமாறு நோட்டீஸ் விடுத்தனர்.

 


Page 357 of 506