Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினமணி 15.09.2010

மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

தூத்துக்குடி, செப். 14: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பெ. குபேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாநகரில் 37,000 குடிநீர் இணைப்புகள் உள்ளன. வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இருந்து பெறப்படும் குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்படும் நாள்களின் இடைவெளியைக் குறைப்பதற்கு அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

ஆய்வில் பொதுமக்கள் தேவைக்குப் போக அதிகமான குடிநீரை அடைக்காமல் வடிகால்களில் விடுவதும், கால்நடைகளைக் குளிப்பாட்டுவதும், தோட்டங்களுக்குப் பயன்படுத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சட்டவிரோதமாக மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதும் கண்டறியப்பட்டது. இதனால், குடிநீர் விநியோகம் செய்யும் நாள்களின் இடைவெளியைக் குறைக்க இயலாத நிலை ஏற்படுகிறது. மேலும், சட்டவிரோதமாக மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் தகவல் கொடுக்கும்படியும், தகவல் கொடுப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுபவர்கள் தாங்களே முன்வந்து அகற்றிவிட வேண்டும். அதிகாரிகளின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டால் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும். அபராதமாக 15 ஆயிரம் வரை செலுத்த வேண்டும். மேலும், அடுத்து குடிநீர் இணைப்பு குறைந்தது 6 மாதங்களுக்கு வழங்கப்படாது என்றார் ஆணையர்.

 

மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினமலர் 13.09.2010

மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு

கோவில்பட்டி : கோவில்பட்டியில் மின்மோட்டார் மூ லம் குடிநீரை உறிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்படும் என கோவில்பட்டி நகராட்சி அறிவித்துள்ளது. கோவில்பட்டி நகரில் 14 ஆயிரத்து 650 குடிநீர் இணைப்புகள் நகராட்சி மூலம் வழங்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் விநியோகிக்கப்படும் நாட்களின் நீண்ட இடைவெளியை குறைப்பதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் பொதுமக்கள் தேவைக்கு போக அதிகமாக தண்ணீரை கவனிக்காமல் வடிகால்களில் விடுவதும், கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும், தோட்டங்களுக்கு பயன்படுத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் மின்மோட்டார் வைத்து நீரை உறிஞ்சுவதும் தெரிய வந்துள்ளது. எனவே குடிநீருக்கு மின்மோட்டார் பயன்படுத்துவது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டால் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும், குடிநீர் இணைப்பு 6 மாதத்திற்கு துண்டிக்கப்படும் எனவும் நகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்

 

50 கோடி மதிப்பிலான நிலம்: மாநகராட்சி கையகப்படுத்தியது

Print PDF

தினமணி 09.09.2010

50 கோடி மதிப்பிலான நிலம்: மாநகராட்சி கையகப்படுத்தியது

சென்னை, செப்.8: சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 50 கோடி மதிப்பிலான 22 கிரவுண்ட் திறந்தவெளி நிலம் புதன்கிழமை கையகப்படுத்தப்பட்டது.

சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான திறந்தவெளி நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகக கிண்டி ஜவஹர்லால் நேரு சாலையில் இரண்டு இடங்களில் 23 கிரவுண்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஒலிம்பியா டெக்னாலஜி பார்க் நிறுவனத்திடம் 15 கிரவுண்ட் நிலமும், தாமரை டெக் பார்க் நிறுவனத்திடம் 7 கிரவுண்ட் நிலமும் மாநகராட்சிக்குச் சொந்தமான திறந்தவெளி நிலம் இருந்தது.

இவற்றை கையகப்படுத்தி அந்த இடம் மாநகராட்சிக்குச் சொந்தமான நிலம் என்று பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகரம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 3ஆயிரம் கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் ரூ. 1,500 கோடி மதிப்பிலான 700 கிரவுண்ட் நிலத்தை மீட்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Last Updated on Thursday, 09 September 2010 11:51
 


Page 360 of 506