Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பெரியாறு வைகை கால்வாய் ஆக்கிரமிப்பு 3 மாதத்தில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு

Print PDF

தினகரன் 08.09.2010

பெரியாறு வைகை கால்வாய் ஆக்கிரமிப்பு 3 மாதத்தில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு

மதுரை, செப். 8: பெரியாறு வைகை பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை 3 மாதத்தில் அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலூர் எட்டிமங்கலத்தை சேர்ந்த வக்கீல் பி.ஸ்டாலின், பெரியாறு வைகை பாசன கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் அடைப்புகளை அகற்றக்கோரி ஐகோர்ட் கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார். மனுவில், ‘பெரியாறு வைகை பாசன திட்டத்தில் கடை மடை பாசன நிலங்களுக்கும் தண்ணீர் செல்ல கால்வாய்களில் சிமெண்ட் சிலாப் அமைக்கப்பட்டன. அதை சிலர் திருடிவிட்டனர். கால்வாய் குப்பைகள் கொட்டப்படுகிறது. கால்வாயை ஆரமித்து கட்டிடம் கட்டியுள்ளனர். பெரியாறு வைகை பாசன கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட வேண்டும்என கூறப்பட்டிருந்தது.

மனு நீதிபதிகள் டி.முருகேசன், எஸ்.நாகமுத்து முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஏ.ராகுல் ஆஜரானார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘பெரியாறு பிரதான கால்வாயில் ஆக்கிரமிப்பு இல்லை. கிளை கால்வாய்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோட்டாட்சியர் மற்றும் தாசில்தாருக்கு மனு கொடுக்கப் பட்டுள்ளது. சில இடங்களில் கால்வாய் சேதம் அடைந்துள்ளது. கால்வாய் கரையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ள 33 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். மேலூர் நக ராட்சி சார்பில் கால்வாயில் குப்பை கொட்டப்படுகிறது. அதை நிறுத்தவும், கால்வாய்க்கும் கழிவுநீர் விழுமாறு அமைக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்றவும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பிரதான கால்வாய், கிளை கால்வாய், பேரணை முதல் கடைமடை வரை குளம், ஏரியை தூர்வாரி பராமரிக்க ரூ.150 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுஎன கூறப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘பெரியார், வைகை பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை 3 மாதத்தில் அகற்றி, கால்வாயை, தோண்டும் போது எப்படி இருந்ததோ அதே நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டனர்.

Last Updated on Wednesday, 08 September 2010 06:01
 

பெங்களூரில் புதிய கட்டிடங்களுக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு சிந்தியா கோரிக்கை

Print PDF

தினகரன் 08.09.2010

பெங்களூரில் புதிய கட்டிடங்களுக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு சிந்தியா கோரிக்கை

பெங்களூர், செப். 8: பெங்களூர் மாநகரில் புதியதாக கட்டப்படும் கட் டிடம், அப்பார்ட்மெண்ட் ஆகியவைக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதி செய்து கொடுக்க ஆலோசனை வழங்க நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று மஜத கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து சிந்தியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெங்களூர் மாநகரம் மழை காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியாக மாறி வந்தாலும், தினமும் உயரமான கட்டிடங்கள், அப்பார்ட்மெண்ட் ஆகியவை உருவாகி வருகிறது. புதியதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு குடிநீர் இணைப்பு மற்றும் கழிவுநீர் வசதி செய்து கொடுப்பதற்கான கோப்புகள் மாவட்ட பொறுப்பு அமைச்சரிடம் அனுப்பி அவரின் ஒப்புதல் பெற்ற பின் அனுமதிக்கப்படுகிறது. இது தவறான முன்னுதாரணமாகும். மாநகரில் நிலவும் பாதிப்பை சரிப்படுத்தும் ஞானம் அமைச்சர் உள்பட மக்கள் பிரதிநிதிகளுக்கு குறைவாக உள்ளது. மக்கள் பிரதிநிதிகளை குறைத்து மதிப்பிட்டு நான் சொல்லவில்லை.

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது அரசின் கடமை என்றாலும், அதற்கான திட்டம் வகுத்து செயல்படுத்தும் தகுதி சம்மந்தப்பட்ட துறையில் படித்து பட்டம் பெற்றவர் களுக்கு மட்டுமே உள்ளது. அவர்களால் தான் பாதிப்பில்லாத வகையில் இணைப்பு கொடுக்க முடியும். ஆகவே புதிய கட்டிடங்களுக்கு குடிநீர் இணைப்பு மற்றும் கழிவுநீர் வசதி செய்து கொடுக்கும் ஆலோசனை வழங்கி தனி பிரிவு தொடங்கி, சம்மந்தப்பட்ட துறையில் அனுபவம் உள்ள நிபுணர்களை நியமனம் செய்ய வேண்டும். அவர்கள் கோப்பில் கையெழுத்திட்டு அனுமதி கொடுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என்றார்.

 

வால்பாறையில் நகராட்சிகளின் துணை இயக்குனர் ஆய்வு

Print PDF

தினமலர் 07.09.2010

வால்பாறையில் நகராட்சிகளின் துணை இயக்குனர் ஆய்வு

வால்பாறை: வால்பாறை நகராட்சியில் ரூ.2.55 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படவுள்ள ரோடுகளை நகராட்சிகளின் துணைஇயக்குனர் ஆய்வு செய்தார். வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பழுதடைந்துள்ள காஞ்சமலை, நல்லகாத்து, வால்பாறை டவுன் குமரன்ரோடு, அரசு மருத்துவமனை உள்ளிட்டப்பகுதிகளில் பழுதடைந்துள்ள ரோடுகளை நகராட்சிகளின் துணை இயக்குனர் துரைசந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: வால்பாறையில் உள்ள பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க ரூ.2 கோடியே 55 லட்சத்து 50 ஆயிரம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புக்களின் கீழ் உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப்பணி இரண்டு மாதத்திற்கு பின்னர் இந்தப்பணிகள் அனைத்தும் துவங்கப்படும் என்றார். ஆய்வின் போது மண்டல இயக்குனர் விஜயலட்சுமி, நகராட்சி செயல்அலுவலர் ராஜ்குமார், பொறியாளர் சுப்பிரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

 


Page 362 of 506