Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சாலை சுத்தப்படுத்தும் பணி நகராட்சி சேர்மன் பார்வை

Print PDF

தினமலர் 03.09.2010

சாலை சுத்தப்படுத்தும் பணி நகராட்சி சேர்மன் பார்வை

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி பகுதியில் சாலை சுத்தப்படுத்தும் பணியை சேர்மன் பார்வையிட்டார். விழுப்புரம் நகராட்சி பகுதியில் பல இடங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்த இடங்களில் மீண்டும் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பாதாள சாக்கடை பணி நடந்ததால் நகரில் பல இடங்களில் மணல் சேர்ந்து வாகனங்கள் செல்லும் போது புழுதி பறந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதையடுத்து மணல் குவியலை அப்புறப் படுத்தும் பணியில் நகராட்சி துப்புரவு பணியாளர் கள் ஈடுபட்டனர். விழுப்புரம் திரு.வி..,வீதியில் மணல் குவியலை அப்புறப்படுத்தும் பணியை நகராட்சி சேர்மன் ஜனகராஜ் நேரில் பார்வையிட்டார்.

Last Updated on Friday, 03 September 2010 09:32
 

பழைய சென்ட்ரல் மார்க்கெட்டுக்கு சரக்கு வாகனங்கள் செல்லத் தடை

Print PDF

தினமணி 02.09.2010

பழைய சென்ட்ரல் மார்க்கெட்டுக்கு சரக்கு வாகனங்கள் செல்லத் தடை

மதுரை, செப்.1: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே செயல்பட்டு வந்த பழைய சென்ட்ரல் மார்க்கெட்டுக்கு சரக்கு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பி.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளதாவது: மதுரை சென்ட்ரல் மார்க்கெட் புதன்கிழமை முதல் மாட்டுத்தாவணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்க்கெட் வியாபாரிகள் தங்களது பொருள்களை உடனடியாக புதிய மார்க்கெட்டுக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் போக்குவரத்து போலீஸôர் நடத்திய கூட்டத்தில், மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் தண்ணீர் மற்றும் மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது.

தற்போது நகருக்குள் மார்க்கெட்டுக்கு வரும் அனைத்து வாகனங்களும் நேராக புதிய மார்க்கெட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. எனவே, புதன்கிழமையிலிருந்து பழைய சென்ட்ரல் மார்க்கெட்டுக்கு சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வரும் வாகனங்கள் மீது போலீஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

 

ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க ரூ.2.92 லட்சம் இழப்பீடு

Print PDF

தினமலர் 02.09.2010

ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க ரூ.2.92 லட்சம் இழப்பீடு

சேலம்: சேலம் மாநகராட்சியில் ஜப்தி நடவடிக்கையை தவிர்க்கும் பொருட்டு, குடிநீர் தொட்டி இடிந்து விழுந்து காயம் அடைந்த இருவருக்கு இரண்டு லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.சேலம் மாநகராட்சி 59வது வார்டுக்குட்பட்ட ராமைய்யன் காடு பகுதியில் பச்சியம்மாள், சித்ரா ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த 1998ம் ஆண்டு இப்பகுதியில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டி இடிந்து விழுந்தது. இதில் பச்சியம்மாள் மற்றும் சித்ரா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த இருவரும் இழப்பீடு தொகை வழங்கக்கோரி சேலம் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கின் அடிப்படையில் கடந்த 2006ம் ஆண்டு பச்சியம்மாள், சித்ரா ஆகிய இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சேலம் மாநகராட்சி சார்பில் இருவருக்கும் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. எனவே, பச்சியம்மாள், சித்ரா ஆகிய இருவரும் மாநகராட்சியின் ஐந்து வாகனங்களை ஜப்தி செய்யும் வகையில் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனுவை தாக்கல் செய்தனர். நீதிமன்ற உத்தரவினை செயல்படுத்தவும், ஜப்தி நடவடிக்கையை தவிர்க்கும் பொருட்டும் சேலம் மாநகராட்சியில், பச்சியம்மாள், சித்ரா ஆகியோருக்கு தலா ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 261 ரூபாய்( இழப்பீட்டு தொகை, வட்டி, நீதிமன்ற செலவினம்) வீதம் இருவருக்கும் சேர்த்து இரண்டு லட்சத்து 92 ஆயிரத்து 522 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.


 


Page 365 of 506