Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பெரிய கோவில் விழா வளர்ச்சிப்பணிகள் நகராட்சி நிர்வாக இயக்குனர் நேரில் ஆய்வு

Print PDF

தினமலர் 02.09.2010

பெரிய கோவில் விழா வளர்ச்சிப்பணிகள் நகராட்சி நிர்வாக இயக்குனர் நேரில் ஆய்வு

தஞ்சாவூர்: தஞ்சை நகராட்சிப்பகுதியில் பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவுக்காக நடந்து வரும் வளர்ச்சிப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்தார்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி ரோட்டில் 70 லட்சம் ரூபாயில் தடுப்புச்சுவரில் மின்கம்பம் அமைக்கும் பணி, பாலாஜி நகர், ..சி., நகரில் சிமெண்ட் ரோடு அமைக்கும் பணி, பெரிய கோவில் முன் உள்ள சோழன் சிலை அருகே 25 லட்சத்தில் நீரூற்றுடன் அமைக்க உள்ள பூங்காப்பணி, கரந்தை மார்க்கெட் அருகே 75 லட்சம் ரூபாயில் அமையும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, சீனிவாசபுரம் ராஜாஜி சாலை, ராஜராஜன் தெருவில் 58.72 லட்சத்தில் அமையும் சாலைப்பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

அப்பணிகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், கூடுதல் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கினார்.

கலெக்டர் சண்முகம் கூறுகையில், ""தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழாவுக்காக தமிழக அரசு 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், பல வளர்ச்சிப்பணிகள் நகராட்சி சார்பில் நடக்கிறது. விழா நடக்கும் முன்பு சில பணிகளும், விழாவுக்குப்பின் சில பணிகளும் முடிவடையும் வகையில் பணிகள் நடக்கிறது. விழாவுக்கு இடையூறு இல்லாத வகையில் பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.

மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் சாந்தி, தஞ்சை நகராட்சி ஆணையர் நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை

Print PDF

தினமணி 31.08.2010

கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை

ராமநாதபுரம், ஆக. 30: கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸôர் நடத்திய திடீர் சோதனையில், நிர்வாக அலுவலர் உள்பட 4 பேரிடமிருந்து கணக்கில் காட்டப்படாத பணம் ரூ| 1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கீழக்கரை நகராட் சியில் காலியாக உள்ள 3 வரி வசூல் அலுவலர்கள், ஓர் இளநிலை உதவியாளர் ஆகிய 4 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 12 பேர் கலந்து கொண்டனர்.

இப்பணியிடங்களுக்கு தலா |ரூ7ஆயிரம் வீதம் பணம் பெற்றுக் கொண்டு பணியிடம் வழங்கப்பட்டதாகப் புகார்கள் வந்தன. இது தொடர்பாக ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. கலாவதி தலைமையில் போலீஸôர், கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். இதில், நகராட்சி நிர்வாக அலுவலர் சுந்தரத்திடமிருந்து கணக்கில் காட்டப்படாத ரூ| 1 லட்சத்து 8 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தலைமை எழுத்தர் மதிவாணன், சுகாதார ஆய்வாளர் சரவணன், ஓவர்சீயர் தேவி ஆகியோரிடமிருந்து மொத்தம் ரூ| 42 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

குப்பைகள் தேங்கிக் கிடக்கும் பகுதிகளில் நாஜிம் ஆய்வு

Print PDF

தினமணி 30.08.2010

குப்பைகள் தேங்கிக் கிடக்கும் பகுதிகளில் நாஜிம் ஆய்வு

காரைக்கால், ஆக. 29 : காரைக்கால் நகரில் குப்பைகள் தேங்கிக் கிடக்கும் பல்வேறு பகுதிகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த புதுவை எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச்.நாஜிம், நகராட்சி மூலம் அவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அந்தப் பகுதி மக்களிடம் தெரிவித்தார்.

÷காரைக்கால் அம்மையார் நகர் பகுதியில் 15 நாள்களாக குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதாக அந்தப் பகுதியினர் நலச் சங்கம் சார்பில் அளித்த புகாரின்பேரில், ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று நாஜிம் ஆய்வு செய்தார்.

÷ஆய்வு செய்ய வந்த நாஜிமை, காரைக்கால் அம்மையார் நகர் நலச் சங்கத் தலைவர் கே.வி.சாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். முக்கிய பிரமுகர்களும், அரசு அதிகாரிகளும் வசிக்கும் பகுதி அம்மையார் நகர் எனவும் நூற்றுக்கணக்கான வீடுகளில் இருந்து வெளியேற்றும் குப்பைகள் தினமும் அகற்றப்படுவதில்லை.

÷இந்தப் பகுதியில் உள்ள மின்கம்பங்களின் விளக்குகள் எரிவதில்லை உள்ளிட்ட பல்வேறு குறைகளை தெரிவித்தனர். மின்துறை அலுவலகம், நகராட்சியில் புகார் தெரிவித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லையென அடுக்கடுக்கான புகார்களை அவரிடம் தெரிவித்தனர்.

÷இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக நாஜிம் உறுதியளித்தார். ÷மேலும், காரைக்கால் நகருக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பை தேங்கிக் கிடக்கும் இடங்களையும், கழிவுநீர் தேங்கிக் கிடக்கும் பகுதிகளையும் பார்வையிட்டார்.

÷இதுகுறித்து நாஜிம் கூறும்போது, மக்கள் வசிக்கும் பகுதிகளில் குப்பைகளும், கழிவுநீரும் தேங்கிக் கிடந்தால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படும். இதுகுறித்து அரசுத் துறைகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் மக்கள் தெரிவித்த குறைகள் குறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 


Page 366 of 506