Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

தரமற்ற முறையில் பாதாள சாக்கடை பணி: காண்டிராக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்- கமிஷனர் நடவடிக்கைக்கு கொ.மு.க. பாராட்டு

Print PDF

மாலை மலர் 27.08.2010

தரமற்ற முறையில் பாதாள சாக்கடை பணி: காண்டிராக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்- கமிஷனர் நடவடிக்கைக்கு கொ.மு.. பாராட்டு

கோவை, ஆக. 27- கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இதில் 9-வது வார்டில் நடைபெறும் கட்டமைப்பு பணி தரமற்ற முறையில் நடைபெறுவதை கொ.மு..வினர் கண்டு பிடித்தனர். இது குறித்து கொ.மு.. மாநகர அமைப்பாளர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள், துணை மேயரிடம் புகார் தெரிவித்தனர்.

அதன் பேரில் துணை மேயர் கார்த்திக் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பணிகளை பார்வையிட்டனர். தரமற்ற செங்கற்கள் மற்றும் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்ததால் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டன.

இதைத்தொடர்ந்து அந்த பணியை மேற்கொண்ட காண்டிராக்டருக்கு மாநக ராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா ரூ. 1 லட்சம் அப ராதம் விதித்தார். மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனை கூட்டம் நடை பெறும் என்றும் அறிவித்தார். கமிஷனரின் இந்த நடவடிக்கைக்கு கொ.மு.. பாராட்டு தெரிவித்துள்ளது.

இது குறித்து கொ.மு.. மாநகர அமைப்பாளர் நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலம் 9-வது வார்டில் நடைபெறும் பாதாள சாக் கடை திட்டத்தில் தரமற்ற பொருட்கள் கொண்டு கட்டப்படுவது கொ.மு.. அமைப்பால் கண்டறியப்பட்டது. உடனே மாநகராட்சி அதிகாரிகளால் பணி நிறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அந்த பணி யின் காண்டிராக்டருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக் கப்பட்டுள்ளது. மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத் தப்படும் என கமிஷனர் தெரிவித்துள்ளார். இதை கொ.மு.. வரவேற்கிறது.

மேலும் பாதாள சாக் கடை திட்டத்தில் 3 காண்டி ராக்டர்கள் பணி செய்வ தால் தகவல் தொடர்பு பரிமாற்றத்தால் ஏற்படும் குறைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

சல்பூரிக் ரெசிஸ்டண்ட் சிமெண்ட் இன்னும் ஒப்பந்த தாரர்களுக்கு வழங்கப் படவில்லை. ஜவஹர்லால் நேரு புனரமைப்பு திட்டத் துக்கு மாநகராட்சியால் அமைக்கப்பட்ட அறிவுறுத்தும் குழு முழுமையாக உபயோகப் படுத்தப்படவில்லை. கொ.மு.. இதுபோன்ற பணிகளை கொங்கு நாடு முழுவதும் கண்காணித்து பொது மக்களின் பணம் விரயமாவதை தடுப்பதற்கு அரசுக்கு எல்லா உதவிகளையும் செய்யும். மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

திருநெல்வேலி மாநகர் நெல்லையில் சுகாதாரமற்று செயல்பட்ட இனிப்புக் கடை கிட்டங்கிக்கு சீல்

Print PDF

தினமணி 27.08.2010

திருநெல்வேலி மாநகர் நெல்லையில் சுகாதாரமற்று செயல்பட்ட இனிப்புக் கடை கிட்டங்கிக்கு சீல்

திருநெல்வேலி,ஆக.26: திருநெல்வேலியில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட இனிப்புக் கடை கிட்டங்கிக்கு மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனர்.

திருநெல்வேலி சந்திப்பைச் சேர்ந்தவர் கு.மாடசாமி. இவர் சந்திப்பு பஸ் நிலையத்தில் இனிப்புக் கடை நடத்தி வருகிறார். இதற்கான உணவு பொருள்கள் தயாரிக்கும் இடமும்,கிட்டங்கியும் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதி வளாகத்தில் உள்ளது.

இந்த கிட்டங்கி மிகவும் சுகாதாரக் கேட்டுடனும், அங்கு சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்படுவதாகவும் மாநகராட்சி ஆணையர் என்.சுப்பையனுக்கு புகார்கள் சென்றன. புகாரின்பேரில் திடீர் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி சுகாதாரத் துறையினருக்கு ஆணையர் உத்தரவிட்டார்.

அதன்படி மாநகராட்சி உதவி சுகாதார அதிகாரி சாந்தி தலைமையில் உணவு ஆய்வாளர் அ.ரா.சங்கரலிங்கம் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், அந்த கிட்டங்கியில் வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த கிட்டங்கி, மிகவும் சுகாதாரக் கேட்டுடன் செயல்படுவது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த கிட்டங்கிக்கு சீல் வைத்தனர். இச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Last Updated on Friday, 27 August 2010 11:21
 

சுகாதாரக் குறைபாடு நெல்லை ஸ்வீட்ஸ்டால் குடோனுக்கு சீல் வைப்பு

Print PDF

தினமலர் 27.08.2010

சுகாதாரக் குறைபாடு நெல்லை ஸ்வீட்ஸ்டால் குடோனுக்கு சீல் வைப்பு

திருநெல்வேலி:நெல்லையில் சுகாதாரக் குறைபாடு இருந்த ஸ்வீட் ஸ்டால் குடோன் மூடி சீல் வைக்கப்பட்டது.சுகாதார குறைவாக ஸ்வீட் ஸ்டால் குடோன்களில் உணவு பண்டங்கள் தயாரிக்கப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் சுப்பையனுக்கு வந்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி உதவி சுகாதார அதிகாரி சாந்தி தலைமையில் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், அந்தோணி, துப்புரவுப்பணி மேற்பார்வையாளர் பழனி அடங்கிய குழுவினர் மதுரை ரோட்டிலுள்ள உணவுப் பொருட்கள் தயாரிக்கும் இடத்தை ஆய்வு செய்தனர்.

குடோனில் மிகவும் சுகாதாரக் கேடாக இருந்ததால் ஸ்வீட் தயாரிப்பு தொழிலை தொடர்ந்து நடத்த நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அந்த கம்பெனி மூடி சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து குடோன்களும் திடீர் ஆய்வு செய்யப்படும். ஆய்வின் போது சுகாதாரக்கேடுகள் நிறைந்து காணப்பட்டால் ஸ்வீட் தயாரிப்புக்கு தடை விதிக்கப்படும் என உதவி சுகாதார அதிகாரி சாந்தி எச்சரித்துள்ளார்.

 


Page 367 of 506