Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மார்க்கெட்: அடிப்படைக் கட்டமைப்பு கட்டணம் செலுத்தக் கோரிய நோட்டீஸூக்குத் தடை

Print PDF

தினமணி 26.08.2010

மார்க்கெட்: அடிப்படைக் கட்டமைப்பு கட்டணம் செலுத்தக் கோரிய நோட்டீஸூக்குத் தடை

மதுரை,ஆக.25: மதுரை விளாங்குடி காய்கனி மார்க்கெட்டிற்கு கட்டமைப்புக்கான அடிப்படைக் கட்டணம் | 45.62 லட்சம், உணவுப்பொருள் விற்பனை யார்டுக்கு | 70.05 லட்சம் செலுத்தக் கோரிய, உள்ளூர் திட்டக் குழுமத்தின் நோட்டீஸýக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

இதுகுறித்து மதுரை சென்ட்ரல் மார்கெட் காய்கனி மற்றும் அழுகும் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் இம்மானுவேல் ஜெயராஜ் தாக்கல் செய்த மனு:

மதுரை மீனாட்சி கோயில் அருகே உள்ள சென்ட்ரல் மார்க்கெட் போக்குவரத்து நெருக்கடி காரணமாக மாட்டுத்தாவணிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. நாங்கள் எங்கள் சங்க உறுப்பினர்களுக்காக 15.25 ஏக்கர் நிலம் வாங்கி, | 15.05 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டி, அதை எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளோம். 2009-ம் ஆண்டிலிருந்து இந்த மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

மார்க்கெட்டில் அனைத்து அடிப்படை வசதிகளும் எங்கள் நிதியிலிருந்து செய்யப்பட்டுள்ளது. கடைகளுக்குக் கட்டணம் வசூலிக்க சங்கத்துக்கு மட்டுமே உரிமை உள்ளது. இந்நிலையில், உள்ளூர் திட்டக்குழு உறுப்பினர் செயலர், அடிப்படைக் கட்டமைப்புகளுக்கான கட்டணமாக | 45.62 லட்சம் செலுத்துமாறு 21.5.2010-ல் நோட்டீஸ் அளித்துள்ளார். இதற்குத் தடைவிதித்து, ரத்து செய்யவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, உணவு தானிய விற்பனை யார்டு |4 கோடியே 19.65 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் நிர்வாக இயக்குநர் ரத்தினவேலுக்கு அனுப்பிய நோட்டீஸில், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுக்காக | 70.05 லட்சம் கட்டுமாறு தெரிவித்துள்ளனர். இதற்கும் தடைவிதித்து ரத்து செய்யவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எம்.ஜெயபால், நோட்டீஸýக்கு இடைக்காலத் தடைவிதித்து விசாரணையை ஒத்திவைத்தார்.

 

கூடுதல் டெபாசிட் தொகையை கட்ட தவறினால் குடிநீர்இணைப்பு துண்டிப்பு பரமக்குடி நகராட்சி ஆணையாளர் தகவல்

Print PDF

தினகரன் 26.08.2010

கூடுதல் டெபாசிட் தொகையை கட்ட தவறினால் குடிநீர்இணைப்பு துண்டிப்பு பரமக்குடி நகராட்சி ஆணையாளர் தகவல்

பரமக்குடி, ஆக.26: பரமக்குடி நகராட்சியில் 3 மாதத்திற்குள் கூடுதல் டெபாசிட் தொகையை கட்ட தவறி னால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என ஆணையாளர் அட்சயா தெரிவித்தார்.

பரமக்குடி நகராட்சி பொதுமக்களுக்கு ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் காவிரி கூட்டு குடிநீர் கடந்த 2009 முதல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிதாக 10 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. பொதுமக்கள் நகராட்சியில் குடியிருப்பு வீடுகளுக்கு டெபாசிட் தொகையாக ரூ 7 ஆயிரம், சாலை சீரமைப்பு கட்டணமாக கருங்கல் ஜல்லி சாலைக்கு ரூ 2 ஆயிரத்து 261 சேர்த்து ரூ 9 ஆயிரத்து 261ம் செலுத்த வேண்டும்.

தார்சாலைக்கு ரூ 3 ஆயிரத்து 641 சேர்த்து ரூ 10 ஆயிரத்து 641ம், சிமென்ட் சாலைக்கு ரூ 4 ஆயிரத்து 259 சேர்த்து ரூ 11 ஆயிரத்து 259 செலுத்தி ஒரு வார காலத்திற்குள் குடிநீர் இணைப்பு பெறலாம்.

இதேபோல் குடியிருப்பு அல்லாத வணிக உபயோகத்திற்கு டெபாசிட் தொகை யாக ரூ 15 ஆயிரம், சாலை சீரமைப்பு கட்டணமாக கருங்கல் ஜல்லி சாலைக்கு ரூ 2 ஆயிரத்து 261 சேர்த்து ரூ 17 ஆயிரத்து 261ம் செலுத்த வேண்டும். தார்சாலைக்கு ரூ 3 ஆயிரத்து 641 சேர்த்து ரூ 18 ஆயிரத்து 641ம், சிமெண்ட் சாலைக்கு ரூ 4 ஆயிரத்து 259 சேர்த்து ரூ 19 ஆயிரத்து 259 செலுத்தி ஒரு வார காலத்திற்குள் குடி நீர் இணைப்பு பெற லாம்.

இந்த விபரப்படி தொகையினை நகராட்சியில் நேரடியாக செலுத்தி வேலை செய்வதற்கான உத்தரவை அன்றே பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் தங்களுக்கு அறிமுகமான பிளம்பர்களை கொண்டு தங்கள் கட்டிடங்களில் உள்குழாய் வேலைகளை செய்தபின் நகராட்சி அலுவலகத்தில் தெரிவித்தால் ஏழு தினங்களுக்குள் பகிர்மானக் குழாயில் துளையிட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இடை தரகர்களை அணுகாது, நகராட்சி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு இணைப்பு பெறலாம்.

பகிர்மான குழாய் இல்லாத இடங்களில் புதிய பகிர்மானக் குழாய்கள் இம்மாத இறுதிக்குள் அமைக்கப்பட உள்ளதால் அவ்விடங்களிலும் குடிநீர் இணைப்புகள் உடனடியாக வழங்கப்படும்.

இதுகுறித்து ஆணையாளர் அட்சயா கூறியதாவது:

புதிய குடிநீர் இணைப்பு பெறுபவர்களுக்கு 30 மீட்டர் வரை ஒரு கட்டணமும், 30 மீட்டர் முதல் 90 மீட்டர் து£ரம் வரை ஒரு கட்டணமும் கட்ட வேண்டும்.

நகராட்சியில் ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்கள் திருத்தம் செய்யப்பட்ட கூடுதல் டெபாசிட் தொகையை 3 மாதத்திற்குள் நகராட்சி அலுவலகத்தில் தாங்களாகவே வந்து செலுத்தி குடிநீர் இணைப்பினை துண்டிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

 

தேனி புதிய பஸ் நிலைய இடம்: நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் ஆய்வு

Print PDF

தினமணி 28.04.2010

தேனி புதிய பஸ் நிலைய இடம்: நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் ஆய்வு

தேனி, ஆக. 24: தேனியில் புதிய பஸ் நிலையம் அமையவுள்ள இடத்தில் நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் செந்தில்குமார் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

தேனியில் பெரியகுளம் புறவழிச்சாலையில் சிட்கோ வளாகத்தை அடுத்துள்ள 7.5 ஏக்கர் வனத்துறை நிலம், புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு நகராட்சி நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. பஸ் நிலைய கட்டுமானப் பணிகளுக்குத் தயாரிக்கப்பட்ட ரூ.16 கோடி திட்ட மதிப்பீட்டிற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந் நிலையில், புதிய பஸ் நிலையம் அமையவுள்ள இடத்தில் சென்னை நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் செந்தில்குமார் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தேனி நகர குடிநீர் விநியோகத்திற்கு லோயர்கேம்ப் பெரியாறு பகுதியில் இருந்து குடிநீர் கொண்டு வர திட்ட மதிப்பீடு செய்யப்படும் என்றார் . அப்போது மதுரை நகராட்சிகள் மண்டல நிர்வாக இயக்குநர் அசோகன், பொறியாளர் மருதுபாண்டியன், தேனி நகராட்சித் தலைவர் பழனிச்சாமி, துணைத் தலைவர் இலங்கேஸ்வரன், ஆணையர் மோனி, பொறியாளர் கணேசன், நகர அமைப்பு அலுவலர் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

 


Page 369 of 506