Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

தெருக்களில் குப்பைகளை கொட்டினால் ரூ.100 அபராதம்

Print PDF

தினமணி 21.08.2010

தெருக்களில் குப்பைகளை கொட்டினால் ரூ.100 அபராதம்

நாகர்கோவில், ஆக. 20: நாகர்கோவில் நகர தெருக்களிலும், வீதிகளிலும் குப்பைகளைக் கொட்டினால் ஜனவரி 1-ம் தேதி முதல் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாகர்கோவில் நகர்மன்ற அவசர கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் அ. சைமன்ராஜ் தலைமை வகித்தார். நாகர்கோவில் நகர்நல அலுவலர் போஸ்கோ ராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும், நகர்மன்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். நகரில் குப்பைகளைக் கொட்டும் விவகாரம் தொடர்பாக, கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தனர். இதையடுத்து அவ்வாறு குப்பைகளைக் கொட்டுவோருக்கு அபராதம் விதிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 1.1.2011 முதல் நாகர்கோவிலில் தெருக்களிலும், வீதிகளிலும், கழிவு நீரோடைகளிலும் குப்பைகளைக் கொட்டும் தனிநபர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் முதற்கட்டமாக |100 அபராதம் விதிக்கவும், 2-ம் கட்டமாக தனிநபர்களுக்கு |500-ம், வணிக நிறுவனங்களுக்கு |1000-ம் அபராதம் விதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காய்ச்சல் பாதித்துள்ளவர்களுக்கு ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளைச் செய்வதற்கு தனியார் மருத்துவமனைகளில் |4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. சாதாரண மக்களால் இவ்வளவு தொகையை செலவிட முடியாது.

எனவே, நாகர்கோவில் நகராட்சி சார்பில் பரிசோதனை மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து, அடுத்த நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றலாம் என்று துணைத் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன், நகரில் நபார்டு வங்கி நிதிஉதவியுடன் |6.5 கோடியில் 36 சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

குடிநீரை உறிஞ்சினால் அபராதம்

Print PDF

தினமலர் 20.08.2010

குடிநீரை உறிஞ்சினால் அபராதம்

திருப்பூர் : "குடிநீர் வினியோகிக்கும்போது, மின்மோட்டார் வைத்து முறைகேடாக உறிஞ்சினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, 15 வேலம்பாளையம் நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

திருப்பூர் அருகே 15 வேலம்பாளையம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. குறிப்பிட்ட சில வார்டுகளில், குடிநீர் வினியோகிக்கும்போது, மின் மோட்டார் வைத்து அதிகமாக உறிஞ்சிக் கொள்வதாக நகராட்சிக்கு புகார் வந்துள்ளது.

செயல் அலுவலர் குற்றாலிங்கம் கூறுகையில், ""சாமுண்டிபுரம், பெரியார் காலனி உள்ளிட்ட சில பகுதிகளில் மின் மோட்டார் வைத்திருப்பதாக புகார்கள் வந்துள்ளன. குடிநீர் வினியோகிக்கப்படும் பகுதிகளில் திடீர் சோதனை நடத்தப்படும். மோட்டார் வைத்து, குடிநீரை உறிஞ்சும் போது பிடிபட்டால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; குடிநீர் இணைப்பும் தூண்டிக்கப்படும்,'' என்றார்.

 

பஞ்சப்பூரில் நகராட்சி நிர்வாகத் துறைச் செயலர் ஆய்வு

Print PDF

தினமணி 19.08.2010

பஞ்சப்பூரில் நகராட்சி நிர்வாகத் துறைச் செயலர் ஆய்வு

திருச்சி, ஆக. 18: திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலர் கே. அசோக் வர்தன் ஷெட்டி புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சியில் மக்கள்தொகை அதிகரிப்பு, வாகனப் பெருக்கத்துக்கு ஏற்ப ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில், பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை அமைக்க மாநகராட்சி மாமன்றத்தில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பஞ்சப்பூரில் இதற்கென ஏறத்தாழ 200 ஏக்கர் தனியார் நிலத்தை கையகப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் கே. அசோக் வர்தன் ஷெட்டி புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவரிடம் பேருந்து நிலையத் திட்டத்துக்கான வரைபடம் விளக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இந்தத் திட்டத்துக்கான உரிய முன்மொழிவுகளை அரசுக்கு வைக்க, அதிகாரிகளுக்கு அசோக் வர்தன் ஷெட்டி அறிவுரை வழங்கினார்.

பின்னர், காந்தி சந்தையிலிருந்து மொத்த வியாபாரக் கடைகளை மட்டும் அரியமங்கலம் பால்பண்ணை அருகே மாற்றும் திட்டத்துக்கான இடத்தையும் அவர் நேரில் பார்வையிட்டார்.

மேலும், கருமண்டபத்தில் | ரூ1.49 கோடியில் அமைக்கப்பட்டு பயன்பாட்டிலுள்ள நவீன எரிவாயு தகனமேடையையும், ஜி.கார்னரில் |ரூ 1 கோடியில் அமைக்கப்பட்டு பயன்பாட்டிலுள்ள நவீன இறைச்சிக் கூடத்தையும் ஷெட்டி பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாக இயக்குநர் டாக்டர் ப. செந்தில்குமார், நகராட்சி நிர்வாக இயக்கக தலைமைப் பொறியாளர் ஆர். ரகுநாதன், மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி, நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, நிர்வாகப் பொறியாளர்கள் ஆர். சந்திரன், எஸ். அருணாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Thursday, 19 August 2010 10:18
 


Page 372 of 506