Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வணிக நிறுவனங்களில்நகராட்சி அதிகாரி ஆய்வு

Print PDF

தினமலர் 19.08.2010

வணிக நிறுவனங்களில்நகராட்சி அதிகாரி ஆய்வு

அரியலூர்: அரியலூர் நகராட்சி பகுதியில் உள்ள மளிகை, பெட்டிக்கடைகளில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருக்கக் கூடாது, பிளாஸ்டிக் கப், பாலிதீன்பை உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்தக் கூடாது என்ற நோக்கத்துடன் அவற்றை கண்டறிந்து பறிமுதல் செய்ய வேண்டும் என நகராட்சி மற்றும் சுகாதார அலுவலர்களுக்கு, அரியலூர் கலெக்டர் ஆபிரகாம் உத்தரவிட்டார்.இதையடுத்து அரியலூர் நகராட்சி நிர்வாக அலுவலர் சமயச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சண்முகம், சுகாதார ஆய்வாளர் கணேசன், உணவு ஆய்வாளர் ரத்தினம், வட்டார மருத்துவ பணியாளர்கள் சுமித்சைமன், வகீல், ரெங்கநாதன், நமச்சிவாயம் உள்ளிட்டோர் அரியலூர்-செந்துறை சாலையில் இருசுகுட்டை பகுதியில் உள்ள மளிகைகடை பெட்டிக்கடை உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் நேற்று திடீர் ஆய்வு மேற் கொண்டனர்.கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த பிஸ்கட், கேக் உள்ளிட்டவற்றில் காலாவதியான பொருள் மற்றும் பிளாஸ்டிக் கப், பாலிதீன் பையை பறிமுதல் செய்தனர்.

Last Updated on Thursday, 19 August 2010 08:36
 

புறம்போக்கு நிலத்தில் பட்டா தமிழக அரசின் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

Print PDF

தினகரன் 18.08.2010

புறம்போக்கு நிலத்தில் பட்டா தமிழக அரசின் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

சென்னை, ஆக. 18: புறம்போக்கு நிலத்தில் 3 ஆண்டு வசித்தால் பட்டா வழங்கலாம் என்ற அரசு ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகாசி மண்டல வரி செலுத்துவோர் சங்க செயலாளர் தேன்ராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

சிவகாசியில் இரண்டு ஏரிகள் உள்ளன. சிவகாசி மக்கள் தண்ணீருக்கு இந்த ஏரிகளைத்தான் நம்பியுள்ளனர். ஏரியை சுற்றியுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை 100க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த 2006ம் ஆண்டு அரசு அறிவித்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். எங்களுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால், உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளோம். அது நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, 10 ஆண்டு வரம்பை 5 ஆண்டுகளாக குறைத்து, 2008ம் ஆண்டு புதிய அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது. இதை எதிர்த்தும், உயர்நீதிமன்றத்தில் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளோம். அதுவும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், 5 ஆண்டு என்பதை 3 ஆண்டாக குறைத்து, கடந்த ஜனவரி மாதம் அரசு உத்தரவிட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. இதற்கு தடை விதிக்க வேண்டும். இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் பலன் பெறுவார்கள். ஏரி, குளங்களை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கினால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு, தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பாக மூத்த வக்கீல் என்.ஆர்.சந்திரன், வக்கீல் சகாதேவன் ஆகியோரும், தமிழக அரசு சார்பாக அரசு பிளீடர் ராஜா கலிபுல்லாவும் வாதாடினர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘புறம்போக்கு நிலங்களில் 3 ஆண்டு குடியிருந்தால் பட்டா வழங்கப்படும் என்ற அரசாணையை இந்த வழக்கு முடியும் வரை அமல்படுத்தக் கூடாதுஎன உத்தரவிட்டனர். வழக்கில் அரசு தரப்பில் 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

 

3 ஆண்டுகளுக்கு மேல் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு இலவச பட்டா வழங்க தடை; ஐகோர்ட்டு உத்தரவு

Print PDF

மாலை மலர் 17.08.2010

3 ஆண்டுகளுக்கு மேல் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு இலவச பட்டா வழங்க தடை; ஐகோர்ட்டு உத்தரவு

3 ஆண்டுகளுக்கு மேல் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு
 
 இலவச பட்டா வழங்க தடை;
 
   ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, ஆக. 17- சிவகாசி வரி செலுத்துவோர் சங்கத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் ஏரி, குளங்கள் உள்ளிட்ட அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து 10 ஆண்டுகள் குடியிருப்போருக்கு பட்டா வழங்கப்படும் என தமிழக அரசு 2006-ம் ஆண்டு ஆணை பிறப்பித்தது. இந்த உத்தரவால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் உள்ளதால் அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் புறம்போக்கு நிலத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு இலவச பட்டா வழங்கப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையானது தமிழகம் முழுவதும் உள்ள புறம்போக்கு நிலங்களையும், நீர் நிலைகளையும் ஆக்கிர மிப்போரை ஊக்குவிப்பதாக உள்ளது. எனவே இதுகுறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து அரசின் புதிய உத்தரவான புறம்போக்கு நிலங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு இலவச பட்டா வழங்குவதை அமல்படுத்த கூடாது என்று தடை விதித்தனர்.

Last Updated on Wednesday, 18 August 2010 07:53
 


Page 374 of 506