Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

முறையாக குப்பை அள்ளாத ஒப்பந்த பணி ஆணை ரத்து காரைக்கால் நகராட்சி அறிவிப்பு

Print PDF

தினகரன் 13.08.2010

முறையாக குப்பை அள்ளாத ஒப்பந்த பணி ஆணை ரத்து காரைக்கால் நகராட்சி அறிவிப்பு

காரைக்கால், ஆக. 13: முறை யாக குப்பை அள்ளாத ஒப்பந்ததாரர்களின் பணி ஆணை ரத்து செய்வதாக காரைக்கால் நகராட்சி தலைவர் மற்றும் ஆணையர் தெரிவித்தனர்.

காரைக்கால் நகராட்சியின் 28வது மன்றக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நகரா ட்சி தலைவி பிரபாவதி தலைமை வகித்தார். துணைத்தலைவர் தங்கவடிவேலு, ஆணையர் ஜோஸ்பேட்டன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவா தம்:

நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் இயற்றாமல் வாரச்சந்தையை அருகில் உள்ள காந்தி பூங்கா மற்றும் சாலைக்கு மாற்றியது தவறு. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு பெருத்த இடையூறாக உள்ளது என கவுன்சிலர் அம்புரோஸ் கண்டனம் தெரிவித்தார். அதற்கு ஆதரவாக மற்ற கவுன்சிலர்களும் கண்டனம் தெரிவித்ததோடு, அடுத்த கூட்டத்தில் இதற்கு உடனடி தீர்வு காணவேண்டும் என்றனர்.

கவுன்சிலர் செய்யது பேசுகையில், காரைக்கால் நகராட்சிக்கு கடந்த 2004 முதல் கேபிள் டிவிக்கான கேளிக்கை வரி செலுத்தப்படவில்லை. மாறாக, வேறு வேறு பெயரில் கேபிள் டிவி நிறுவனம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இதுவரை ரூ.88 லட்சம் ஏமாற்றப்பட்டுள்ளது. இனியும் இந்த ஏமாற்றத்தை நகராட்சி அனுமதிக்க கூடாது என்றார். இதற்கு மற்ற கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து காரைக் கால் நகராட்சிக்கான கேளிக்கை வரியை, நகர்பகுதியில் உள்ள கேபிள் டிவி நிறுவனம் கட்டும் வரை, பொதுமக்கள் யாரும் கேபிள் டிவிக்கான சந்தா தொகையை கேபிள் நிறுவனத்தில் செலுத்த தேவையில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காரைக்கால் நகாரட்சிக்கு உட்பட்ட மதகடி, காதர் சுல்தான் வீதி, மற்றும் புளியங்கொட்டை சாலை வார்டுகளில், டெண்டர் விட்டபடி குப்பைகளை அள்ளாததால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என வார்டு கவுன்சிலர்கள் தெரிவித்தனர். முறையாக குப்பைகளை அள்ளாத ஒப்பந்ததாரர்களின் பணி ஆணையை ரத்து செய்வதாக ஆணையர் மற்றும் மன்ற தலைவி ஆகியோர் அறிவித்தனர்.கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

மோட்டார் மூலம் உறிஞ்சுவதால் வடக்கநந்தல் பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Print PDF

தினகரன் 13.08.2010

மோட்டார் மூலம் உறிஞ்சுவதால் வடக்கநந்தல் பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சின்னசேலம், ஆக. 13: மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சுவதால் வடக்கநந்தல் பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வடக்கநந்தல் பேரூராட்சியில் ஓடும் கோமுகி ஆற்றில் விவசாயத்துக்கு நீர் எடுப்பதால் ஆற்றில் நீர் வற்றியதுடன், நீர் மட்டமும் குறைந்து போனது. இதனால் வடக்கநந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட கச்சிராயபாளையம், அக்கராயபாளையம், மேட்டுப்பாளையம், வடக்கநந்தல் ஆகிய பகுதிகளில் பேரூராட்சி மூலம் குடிநீர் தேவை யான அளவுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் 100க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி மூலம் குடிநீர் இணைப்பு பெற்றவர்களும், பெறாத வர்களும் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்து இதர தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்ற னர்.

இதனால் பேரூராட்சி குடிநீர் தெரு குழாய்களில் குடிநீர் எடுப்பவர்களுக்கு சிறிது நேரமே வருகிறது. இதனால் பலருக்கு குடிநீர் கிடைப்பதில்லை.

இந்த நிலை சின்னசேலம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் தொடர்கிறது. ஆகையால் குடிநீர் பஞ்சத்தை போக்க பொதுமக்களுக்கு ஓரளவு குடிநீர் கிடைத்திட, மாவட்ட ஆட்சியர் தனிப்படை அமைத்து மின் மோட்டார் பொருத்தி எடுப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் மின் மோட்டாரையும் பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவேண்டும் போஸ்டர் ஒட்டுவோர் மீது நடவடிக்கைக்கு உத்தரவு அமைச்சர் ஏ.கே.வாலியா அறிக்கை

Print PDF

தினகரன் 13.08.2010

சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவேண்டும் போஸ்டர் ஒட்டுவோர் மீது நடவடிக்கைக்கு உத்தரவு அமைச்சர் ஏ.கே.வாலியா அறிக்கை

புதுடெல்லி, ஆக. 13: டெல்லி நகரை சர்வதேச தரத்துக்கு அழகாக வைத்து கொள்ள நகரை அசிங்கப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி, போலீசாருக்கு மாநில நிதித்துறை அமைச்சர் ஏ.கே.வாலியா கேட்டுக் கொண்டுள்ளார். காமன்வெல்த் போட்டியை முன்னிட்டு நகரை அழகுபடுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, நகரை அசிங்கப்படுத்தும் பணியில் தொடர்ந்து சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசு கேட்டு கொண்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

டெல்லியை சர்வதேச நகரமாக ஆக்கும் முயற்சியில், நகரை அசிங்கப்படுத்துவோர் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதற்காக டெல்லி அழகை பாழ்படுத்துவோர் தடுப்பு சட்டத்தை மாநகராட்சியும், போலீசாரும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். நகரில் போஸ்டர்கள், பேனர்கள், சுவர்களில் விளம்பரம் வரைதல் ஆகியவற்றை தடுக்க வேண்டும். பொதுமக்களும் இப்பிரச்னையில் அரசு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு நகரை சுத்தமாக வைத்திருக்க உதவ வேண்டும்.இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

 


Page 375 of 506