Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

முறையான ஆவணங்கள் சமர்ப்பித்தால் கட்டடம் கட்ட ஒரே நாளில் அனுமதி

Print PDF

தினகரன் 13.08.2010

முறையான ஆவணங்கள் சமர்ப்பித்தால் கட்டடம் கட்ட ஒரே நாளில் அனுமதி

கோவை, ஆக. 13: முறையான ஆவணங்கள் சமர்ப்பித்தால் புதிய கட்டடம் கட்ட ஒரே நாளில் அனுமதி வழங்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறினார்.

இந்திய கட்டுமான கலைஞர்கள் சங்க (ஐஐஏ) கோவை கிளைக்கு 2010&2012ம் ஆண்டுகளுக்கான புதிய தலைவ ராக அருண்பிரசாத், துணை தலைவராக சாய் விவேகானந்த், இணை செயலாளர்களாக கருணாம்பிகா, சசி குமார், பொருளாளராக வசந்தகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களது பதவிஏற்பு விழா கோவையில் நடந்தது. பழைய நிர்வாகிகள் புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தனர். விழாவில், கோவை மாநகராட்சி கமி ஷனர் அன்சுல் மிஸ்ரா பேசியதாவது:நகரில் புதிய கட்டடம் கட்டும்போது அதற்கான அனுமதி வழங்குவதில் பழைய நடைமுறையே உள்ளது. இதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என கட்டட கலை நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பான கருத்துருவை நாங்களும் அரசுக்கு அனுப்பிவைத்துள்ளோம். மாநகரில் கட்டட விதிமுறை மீறல் தடுக்க மாநகர தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப புதிய கட்டட வரைபடங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கட்டட வரைபடங்களுக்கு அனுமதி அளிப்பதில் மாநகராட்சி நகரமைப்பு குழு காலம் தாழ்த்துவதாக தகவல் தெரிவித்துள்ளார். அங்கு, காலதாமதத்துக்கு இடமில்லை. புதிய விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, வரைபடம் ஆய்வுசெய்யப்பட்டு அதிகபட்சம் 15 முதல் 20 நாட்களில் அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது வரைபடம் தயாரிப்பு பிரிவு என்ற புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இங்கு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளின்படி வரைபடம் தயாரிக்கப்படுகிறது. 100க்கணக்கான வரைபடம் இப்பிரிவில் உள்ளது. இதில், ஏதேனும் ஒன்றை தேர்வுசெய்து, அதற்கான முறையான ஆவணங்களை சமர்ப்பித்தால் 1,500 சதுர அடி பரப்பளவு கொண்ட வரைபடங்களுக்கு ஒரே நாளில் அனுமதி அளிக்கப்படும். இப்பிரிவு ஒற்றை சாளர முறைப்படி செயல்படுகிறது. இங்கு, அரசு மட்டுமின்றி அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டட கலை நிபுணர்கள் வரைபடம் தயாரித்து வழங்குகின்றனர். மாநகரில் சாலை விரிவாக்கம், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவினாசி ரோடு, திருச்சி ரோடு போலவே மாநகரின் இதர ரோடுகளிலும் மின்சார வயர்கள் மிக விரைவில் பூமிக்கு அடியில் பதிக்கப்படும். இவ்வாறு அன்சுல் மிஸ்ரா பேசினார்.

 

ஒற்றுமையுடன் செயல்படுங்கள்!

Print PDF

தினமணி 13.08.2010

ஒற்றுமையுடன் செயல்படுங்கள்!

சிதம்பரம், ஆக.12: சிதம்பரம் நகர்மன்ற உறுப்பினர்கள், கருத்து வேறுபாடுகளை மறந்து சுமுகமான முறையில் ஒற்றுமையுடன் இருந்து மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் பி.வி.தண்டபாணி தெரிவித்தார்.

சிதம்பரம் நகராட்சித் தலைவர் பௌஜியாபேகத்தின் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) போக்கை கண்டித்து கடந்த 3 கூட்டங்களாக திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் கூட்டம் நடைபெறாமல் ஒத்தி போனது.

கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் ரூ| 7.50 கோடி செலவிலான நகர குடிநீர் விரிவாக்கத் திட்டத்துக்கான தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போனது.

நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரை அழைத்து கூட்டத்தை நடத்தி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என திமுக கூட்டணி உறுப்பினர்கள் வெளிநடப்பு மற்றும் முற்றுகை போராட்டத்தை நடத்தியதால் தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் போனது.

இந்நிலையில் சிதம்பரம் நகர்மன்றக் கூடத்தில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் பி.வி.தண்டபாணி தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் மற்றும் 28 நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். 5 நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

கூட்டத்தில் இயக்குநர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசிய விவரம்:

இயக்குநர்: நகரில் தங்குதடையின்றி வளர்ச்சிப் பெற நகர்மன்றம் சுமுகமாகவும், சிறப்பாகவும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அரசு மற்றும் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தமிழகத்தில் 5 இடங்களில் ரூ| 1170 கோடிக்கு குடிநீர்த் திட்டங்களை அறிவித்துள்ளார் முதல்வர். சிதம்பரத்தில் |ரூ 7.50 கோடி செலவிலான நகர குடிநீர் விரிவாக்கத் திட்டத்துக்கு நகர்மன்றம், தீர்மானம் நிறைவேற்றிருந்தால் முதல்வர் அறிவித்த பட்டியலில் இத்திட்டமும் சேர்ந்திருக்கும்.

சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நகர வளர்ச்சியை பாதிக்கும் வகையில் செயல்பாடு இருக்கக்கூடாது. எனவே கருத்து வேறுபாடுகளை மறந்து உறுப்பினர்கள் சுமுகமான முறையில் ஒற்றுமையுடன் இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மக்கள் நலன் கருதி ஒருமித்த கருத்துடன் குடிநீர்த் திட்டத்தை உறுப்பினர்கள் நிறைவேற்றித் தர வேண்டும்.

.ஜேம்ஸ்விஜயராகவன் (திமுக): அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று தலைவர் நடந்திருந்தால் இப்பிரச்னை ஏற்பட்டிருக்காது. தலைவர், உறுப்பினர்களின் கோரிக்கைகளை கேட்காமல் தனது கட்சியைச் சேர்ந்தவர்களை வைத்து முடிவு எடுப்பதால்தான் இப்பிரச்னை ஏற்பட்டது.

கடந்த 4 ஆண்டுகளாக வருமானத்தை பெருக்க எந்தவித முயற்சியும் தலைவர் மேற்கொள்ளவில்லை. நகராட்சிக்குச் சொந்தமான புல்பண்ணை செயல்பாடின்றி பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நீதிமன்ற வழக்கினால் வரி வசூல் |ரூ 4.50 கோடி பாக்கி உள்ளது. நிலுவையில் உள்ள வழக்கை முடித்து வரியை வசூலிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேற்கண்டவற்றின் மூலம் வருவாயை பெருக்கியிருந்தால் குடிநீர்த் திட்டத்துக்கான நகராட்சியின் பங்களிப்பு | ரூ1 கோடியை நாமே வழங்கியிருக்கலாம்.

தற்போது அந்த நிதியை குடிநீர் இணைப்புக்கான கூடுதல் டெபாசிட் என்ற பெயரில் மக்கள் மீது சுமை செலுத்தப்பட்டுள்ளது. எனவே மக்களிடமிருந்து பெறாமல் வேறுவழியில் அந்த |ரூ 1 கோடியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.செந்தில்குமார் (அதிமுக)- சாலைகள் மேம்படுத்தாதற்கு அடிப்படை காரணம் | 44 கோடி செலவில் அரசால் கொண்டு வரப்பட்ட புதிய பாதாள சாக்கடை விரிவாக்கத் திட்டம். இந்த திட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. குடிநீர் டெபாசிட் தொகை உயர்த்தி வசூலிக்கக் கூடாது. மாற்று நிதி மூலம் இத்திட்டத்துக்கு நிதியை அளிக்க ஆய்வு செய்ய வேண்டும்.

Last Updated on Friday, 13 August 2010 09:22
 

தினக்கூலி துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும்

Print PDF

தினமணி 13.08.2010

தினக்கூலி துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும்

திருப்பூர், ஆக. 12: மாநகராட்சி, நகராட்சிகளில் பணியாற்றும் தினக்கூலி துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி அளிக்க வேண்டும் என்று, மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் (சிஐடியூ) கோரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருப்பூர் மாநகராட்சி, உடுமலை, தாராபுரம், 15 வேலம்பாளையம், நல்லூர், பல்லடம், வெள்ளக்கோவில் ஆகிய 6 நகராட்சிகளிலும் சுமார் 2,500 துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இம் மாவட்ட மக்களின் முழுசுகாதாரம் காத்திட இன்னும் ஆயிரக் கணக்கான துப்புரவு தொழிலாளர்கள் தேவைப்படும் நிலையில், தற்போதுள்ள தொழிலாளர்கள் கடுமையாக பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனால், அத் தொழிலாளர்களில் பெரும்பகுதியினருக்கு வசிப்பிடம், உரிய ஊதியம், சட்ட உரிமைகள் மறுக்கப்படுவதாக, திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சிஐடியூ) குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அச் சங்கச்செயலர் கே.ரங்கராஜன் தலைமையில் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தியிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பது:

தற்போது திருப்பூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் பாதிக்கு மேற்பட்டோர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும், சுயஉதவிக் குழு தொழிலாளர்களாக வும் இருப்பதால், அவர்களுக்கு நாள் ஊதியமாக | 50 முதல் | 100 மட்டுமே வழங்க ப்படுகிறது. தற்போதைய விலைவாசியில் ஒருநாள் ஊதியமாக | 100 பெற்றுக்கொண்டு துப்புரவுத் தொழிலாளர்கள் கடும் நெருக்கடியில் குடும்பம் நடத்துகின்றனர்.

பல ஆண்டுகளாக சுயஉதவிக் குழு மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற பெயரில் பணியாற்றி வரும் துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அது வரை இந்திய அரசின் தலைமை தொழிலாளர் துறை ஆணைய உத்தரவுப்படி தினக்கூ லியாக உள்ள துப்புரவுத் தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்சமாக மாநகராட்சியில் | 244ம், நகராட்சியில் | 186ம் அளிக்க வேண்டும்.

மேலும், துப்புரவுப் பணியிடங்களை மக்கள்தொகைக்கு ஏற்ப கூடுதலாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 376 of 506