Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

தஞ்சையில் நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு

Print PDF

தினமணி 11.08.2010

தஞ்சையில் நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு

தஞ்சாவூர், ஆக. 10: தஞ்சை நகரில் நகராட்சி நிர்வாக இயக்குநர் தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சை பெரிய கோயில் 1000-வது ஆண்டு நிறைவு விழா வருகிற செப்டம்பர் 25, 26-ம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.

அதனடிப்படையில், தஞ்சை நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குநர் டாக்டர் செந்தில்குமார் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை தஞ்சை வந்தனர்.

நகரின் பிரதான சாலைகளை விரிவுப்படுத்துதல், நடைபாதைகளை செப்பனிடுதல், பூங்காக்களை அழகுப்படுத்துதல், தேவையான இடங்களில் பொது கழிப்பறைகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தி, அதற்குரிய இடங்களையும் ஆய்வு செய்தனர்.

இதற்காக இக் குழுவினர் பெரிய கோயில், சிவகங்கை பூங்கா, தொல்காப்பியர் சதுக்கம், மணி மண்டபம், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட நகரின் பிரதான பகுதிகளைப் பார்வையிட்டனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் த. நடராஜன் கூறியது:

தஞ்சை நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், சாலைகளை விரிவுப்படுத்துதல் உள்ளிட்ட நகரை அழகுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இப் பணிகளுக்கு தேவையான நிதி குறித்த அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடும் என்று நம்புகிறோம் என்றார் நடராஜன்.

 

மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தால் கடும் நடவடிக்கை

Print PDF

தினமணி 09.08.2010

மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தால் கடும் நடவடிக்கை

புதுக்கோட்டை, ஆக. 8: வீடுகளுக்கான குடிநீர்க் குழாய் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சி எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் கே. பாலகிóருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

""நகராட்சிப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தி குடிநீரை சிலர் உறிஞ்சி எடுப்பதாகப் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக நகரில் ஆய்வு மேற்கொள்ள சம்பந்தப்பட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சி எடுத்தால், அது குற்றம். எனவே இந்தச் சட்ட விரோதச் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, மின் மோட்டாரும் பறிமுதல் செய்யப்பட்டு, குடிநீர்க் குழாய் இணைப்பும் உடனடியாக துண்டிக்கப்படும்.''

 

அரியலூர் நகராட்சிப் பகுதியில் விளம்பரத் தட்டிகள் நிறுவ கட்டுப்பாடுகள்

Print PDF

தினமணி 06.08.2010

அரியலூர் நகராட்சிப் பகுதியில் விளம்பரத் தட்டிகள் நிறுவ கட்டுப்பாடுகள்

அரியலூர், ஆக. 5: அரியலூர் நகராட்சிப் பகுதியில் விளம்பரத் தட்டிகள் நிறுவ கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரியலூர் நகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பதாகைகள்- பலகைகள்- தட்டிகளை தாற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ நிறுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறுவது அவசியம். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் விளம்பரங்களை நிறுவ வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்கும் இடத்தில்தான் விளம்பரத் தட்டிகளை நிறுவ வேண்டும். மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி நிறுவப்படும் விளம்பரங்கள் முன்னறிவிப்பின்றி உடனடியாக அகற்றப்படும். நகர்ப் பகுதியில் அதிகபட்சமாக 10-க்கு 15 அடி என்ற அளவில் மட்டுமே விளம்பரத் தட்டிகளை நிறுவ வேண்டும்.

தாற்காலிகமாக விளம்பரம் செய்ய சதுர மீட்டர்க்கு ரூ. 50 வசூலிக்கப்படும். இந்தத் தொகையை நகராட்சி அலுவலகத்தில் செலுத்திய பிறகே, விளம்பரத்தை நிறுவ வேண்டும். அரசியல் கட்சிகளின் விளம்பரத் தட்டிகள் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்னதாக நிறுவிக் கொள்ளலாம்.

நிகழ்ச்சிகள் முடிந்த இரண்டு நாள்கள் வரைக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். அதன் பின்னர் உரிமையாளரே அதை அகற்றிக் கொள்ள வேண்டும். விளம்பரத் தட்டிகள் நிறுவ அனுமதி கோரும் அனைவரும் இந்த விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


Page 378 of 506