Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ராமேஸ்வரத்தில் பாலிதீன் பைகள் விற்றால் குற்றவியல் சட்டம் பாயும்

Print PDF

தினமலர் 06.08.2010

ராமேஸ்வரத்தில் பாலிதீன் பைகள் விற்றால் குற்றவியல் சட்டம் பாயும்

ராமேஸ்வரம் : ""ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் சுற்றுச்சூழலை கெடுக்கும் பாலிதீன், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவோர்,விற்பவர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 188 ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என ,தாசில்தார் ராஜேந்திரன் தெரிவித்தார். ராமேஸ்வரம் நகர் பகுதியில் நேற்று தாசில்தார் தலைமையில் வர்த்தக நிறுவனங்களில் பாலிதீன் சோதனை செய் யப்பட்டது. நுகர்வோர் இயக்க நிர்வாகி ரவிச்சந்திரன், தீவு விபத்து மீட்டு சங்க தலைவர் களஞ்சியம், தாலுகா அலுவலக பொறுப்பாளர் அப்துல்ஜபார் உட்பட பலர் சென்றனர். ரோட்டோர ஆடு,கோழி இறைச்சி கடைகள், பேக்கரிகள் மற்றும் உணவு விடுதிகளில் நடத்திய சோதனையில் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பாலிதீன்,பிளாஸ்டிக் பொருட் கள் பறிமுதல் செய்யப் பட்டன. மேலும், கோழி கடைகள் உட்பட 21 நிறுவனங்களுக்கு 6200 ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டது.

" ஒரு முறை அபராதம் கட்டிய கடைகளில், மீண்டும் பாலிதீன் பயன்படுத்தினால், விற்றால் இந்திய குற்றவியல் சட்டம் 188 ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,''என ,தாசில்தார் ராஜேந்திரன் தெரிவித்தார்.

 

பூ மார்க்கெட் ஏலம் தற்காலிக நிறுத்தம் வியாபாரிகள் எதிர்ப்பால் கமிஷனர் முடிவு

Print PDF

தினமலர் 06.08.2010

பூ மார்க்கெட் ஏலம் தற்காலிக நிறுத்தம் வியாபாரிகள் எதிர்ப்பால் கமிஷனர் முடிவு

கோவை : கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் நவீன வசதிகளுடன் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப் பட்டுள்ள புதிய பூமார்க்கெட்டிற்கான ஏலத்தை தற்காலிகமாக நிறுத்திவப்பதாக மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா அறிவித்துள்ளார். கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் பன்னீர்செல்வம் பூமார்க் கெட் செயல்பட்டு வருகிறது. சில்லறையில் பூ விற்பனை நடந்து வருகிறது. தரைகடைகள் மற்றும் மேடைகள் தவிர அங்காடிக்கடைகள் மூன்று தரங்களில் வரிசைப்படுத்தப்பட்டு மாநகராட்சி சார்பில் ஏலம் விடப்பட்டுள்ளது. மாதம் தோறும் குத்தகைதொகையை மலர் வியாபாரிகள் செலுத்தி வருகின்றனர்.

இதற்கு எதிரே மாநகராட்சி பள்ளி வளாகம் இருந்த பகுதியில் ஒரு கோடி ரூபாய் செலவில் இரண்டு தளங்களை கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய பூமார்க்கெட் அமைக்கப்பட்டது. இதை ஏலம் விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக பூ வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் மாநகராட்சி கமிஷனர் அன்சுல்மிஸ்ரா தலைமை வகித்தார். விவசாயிகள் மற்றும் பூ வியாபாரிகள் என்று நூற்றுக்கும் அதிகமானவர்கள் கருத்துக்கேட்பில் பங்கேற்றனர்.

உழவர் உழைப்பாளர் கட்சி செயலாளர் சின்னச்சாமி, மலர் வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வகுமார், பூ வியாபாரிகள் என்று ஏராளமானவர்கள் கருத்துக்களை கூறினர்.இதற்கடுத்து கமிஷனர் அன்சுல்மிஸ்ரா பேசியதாவது: கோவை மாநகராட்சி தீர்மானத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னரே ஒரு கோடி செலவில் பூமார்க்கெட் கட்டப் பட்டுள்ளது. "பூமார்க்கெட் வேண்டாம்;வணிகவளாகமாக மாற்றுங்கள்' என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. புதியதாக கட்டப்பட்ட பூமார்க்கெட் கட்டடடத்தை மொத்த விற்பனைக்கும் பழைய மார்க்கெட்டை சில்லறை விற்பனைக்கும் பயன்படுத்தலாம். எக்காரணம் கொண்டும் ஏலம் நிறுத்தி வைக்கப்படமாட்டாது. வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, இரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். அது வரை புதிய பூமார்க்கெட் ஏலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். மேலும் இது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும்.இவ்வாறு கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறினார்.

 

விதிமீறல்: பஸ் நிலையத்தில் டீக்கடைக்கு "சீல்' வைப்பு

Print PDF

தினமணி 05.08.2010

விதிமீறல்: பஸ் நிலையத்தில் டீக்கடைக்கு "சீல்' வைப்பு

மதுரை, ஆக.4: மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில், மாநகராட்சி விதிகளை மீறி எளிதில் தீப்பற்றக்கூடிய மண்ணெண்ணெய் அடுப்பு பயன்படுத்திய டீக்கடைக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டதாக, மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் கூறியிருப்பதாவது: மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இரு உணவகங்களுக்கு மட்டுமே எரிவாயு அடுப்பு வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த விதிகளுக்கு முரணாக செயல்பட்டு வந்த ஒரு டீக்கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, புதன்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், நடைபாதைகளில் அளவுக்கு அதிகமாக வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு பொருள்கள் அகற்றப்பட்டு, மாநகராட்சி பண்டகசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது என்று ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வில், உதவி ஆணையர் (வருவாய்) எம். ஆசைத்தம்பி மற்றும் உதவி ஆணையர் (வடக்கு) எஸ்.பி. ராஜகாந்தி, சந்தைக் கண்காணிப்பாளர் பழனிவேலு, சுகாதார ஆய்வாளர்கள், கட்டட ஆய்வாளர்கள் மற்றும் நகரமைப்புப் பிரிவு பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 


Page 380 of 506