Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகராட்சியில் மக்கள் குறைதீர்கும் நாள் கூட்டம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

Print PDF

தினகரன்            31.12.2013

மாநகராட்சியில் மக்கள் குறைதீர்கும் நாள் கூட்டம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

திருச்சி, : திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க் கும் நாள் கூட்டம் மேயர் ஜெயா தலைமையில் நடைபெற்றது. 

இதில் சாலை மேம்பாடு, ஆக்கிரமிப்பு அகற்றம், பழுதடைந்த தெரு விளக்குகளை சீரமைப்பது, கழி வறை மற்றும் பூங்காக்கள் பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 12 மனுக்கள் பெறப்பட் டன. மனுக்களைப் பெற் றுக் கொண்ட மேயர், போக்குவரத்துக்கு இடை யூறாக சாலை மற்றும் முக் கிய வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடி யாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், பழுதடைந்த தெரு விளக்குகளை விரை ந்து பழுது நீக்கம் செய்திட வும், பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உரிய தள ஆய்வு மேற் கொண்டு முழுமை யான நடவடிக்கை எடுப்பதோடு இதுகுறித்து மனுதாரர்களு க்கு பதில் அனுப்ப வேண் டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில்  நகர பொறியாளர் சந்திரன், நகர் நல அலுவலர் மாரியப்பன், செயற்பொறியாளர்கள் அருணாசலம், நாகேஷ், உதவி ஆணையர்கள்  தன பால், தயாநிதி, பிரபுகுமார் ஜோசப், உதவி செயற்பொறியாளர்கள் பாலகுருநாதன், கண்ணன், அமுதவள்ளி, லட்சுமணமூர்த்தி, குமரே சன்,  திட்டப்பிரிவு உதவி செயற்பொறியாளர் கள் சிவ பாதம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மருதமலைக்கு ரோப்கார் வசதி கோவை மாநகராட்சி அறிவிப்பு

Print PDF

தினகரன்            31.12.2013

மருதமலைக்கு ரோப்கார் வசதி கோவை மாநகராட்சி அறிவிப்பு

கோவை, : மருதமலை சுப்பிரமணியசாமி கோயிலுக்கு ரோப்கார் வசதி செய்து தரப்படும் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் விக்டோரியா ஹாலில் நேற்று நடந்தது. மேயர் செ.ம.வேலுசாமி தலைமை தாங்கினார். கமிஷனர் லதா முன்னிலைவகித்தார். இதில், மேயர் பேசியதாவது:

மாநகரில் மின்சேமிப்புக்காக, கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது. இதற்காக உழைத்த அத்தனை பேருக்கும் நன்றி. கோவை மாநகரில் பில்லூர் 2வது குடிநீர் திட்டம், கவுண்டம்பாளையம்-வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம் அமலுக்கு வந்தபிறகு குடிநீர் பிரச்னை தீர்ந்துள்ளது. வீதிகளில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டம் நடத்துவது அடியோடு நின்றுவிட்டது. நகரில், பிளாஸ்டிக் குப்பைகள் சுகாதார மேம்பாட்டுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதை அடியோடு ஒழிப்பதில் மாநகராட்சி தீவிர கவனம் செலுத்தி வருகிறது. முதல்கட்டமாக, நகரில் தேங்கும் பிளாஸ்டிக் குப்பைகள், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் தனியாக பிரித்து எடுக்கப்படுகிறது.

தினம் 7 டன் குப்பை சேருகிறது. இவற்றை தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் நிதி துப்புரவு பணியாளர் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது. விரைவில், 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் குப்பை அடியோடு ஒழிக்கப்படும். போக்குவரத்து நெரிசல் உள்ள என்.எச்.ரோட்டில் சாலை விரிவுபடுத்தப்படும். இதற்காக, கடைகள் இடித்து அப்புறப்படுத்தப்படும். பக்தர்களின் நலனை கருத்தில்கொண்டு மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயிலில் ரோப்கார் வசதி ஏற்படுத்தி தரப்படும். இதற்காக, தமிழக அரசின் உதவியை கோவை மாநகராட்சி நாடியுள்ளது. விரைவில் பணி துவங்கும்.

இவ்வாறு மேயர் பேசினார்.

ஆலைகளுக்கு பூட்டு: கவுன்சிலர் மீனா லோகநாதன் (திமுக) பேசுகையில், ‘‘பிளாஸ்டிக் கழிவைப்போல், கோழிக்கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரத்தை பேண எவ்வளவு நிதி வேண்டுமானாலும் செலவு செய்யலாம்‘‘ என்றார். கவுன்சிலர் நந்தகுமார் (திமுக) பேசுகையில், ‘‘துடியலூரிலும், இருகூரிலும் பிளாஸ்டிக் பை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இதை மூட வேண்டும். மாநகராட்சி டூவீலர், கார் பார்க்கிங் பகுதியை சிலர் ஏலம் எடுத்து, அத்துமீறுகின்றனர். இந்த இடங்களை முழுமையாக ஆய்வுசெய்ய வேண்டும். பொது இடங்களில் கட்டட கழிவு கொட்டுவோரை கண்காணித்து பிடிக்க, தனிப்படை அமைக்கவேண்டும்’’ என்றார். கவுன்சிலர் லட்சுமி இளஞ்செல்வி (திமுக) பேசுகையில், ‘‘மாமன்ற கூட்டம் தொடர்பான அறிவிப்பை கவுன்சிலர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலமும் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

46 தீர்மானங்கள்

கூட்டத்தில், மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் ரூ.12.65 கோடியில் புதிய மாமன்ற கூட்ட அரங்கம் கட்டப்படும். மாநகராட்சி பள்ளி விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தி, விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும். மாநகரில் திறந்தவெளியில் கழிப்பிடம் செல்வதை தடுக்கும் வகையில் 21 இடங்களில் ‘நம்ம கழிப்பிடம்‘ கட்டப்படும். புதிதாக குடிநீர் இணைப்பு கோரிய விண்ணப்பங்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பயன்படுத்துவோர் ரூ.200, உற்பத்தியாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். சிவானந்தாகாலனி வணிக வளாகத்தில் ‘பண்ணை பசுமை காய்கறி திட்டம்‘ கடை அமைக்கப்படும். மாநகராட்சி வணிக வளாகங்களுக்கு வாடகை உயர்வு செய்தல், வடவள்ளியில் 47 சென்ட் நிலத்தில் பேருந்து திருப்பு முனையம் அமைத்தல், மாநகராட்சி குப்பை கிடங்கில் மருத்துவ கழிவு கொட்டுவோருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தல், மாநகராட்சி பள்ளிகளில் பசுமை படை-காய்கறி தோட்டம் அமைத்தல் உள்பட 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

நகராட்சிக் கடைகளை உள் வாடகைக்கு விட்டால் உரிமம் ரத்து: ஆணையர்

Print PDF

தினமணி              31.12.2013

நகராட்சிக் கடைகளை உள் வாடகைக்கு விட்டால் உரிமம் ரத்து: ஆணையர்

தாராபுரம் நகராட்சிக்குச் சொந்தமானக் கடைகளை ஏலம் எடுத்த பின் உள் வாடகைக்கு விட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆணையர் க. சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் திங்கள்கிழமை கூறியது:

நகராட்சிக்குச் சொந்தமான 207 கடைகள் 27 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 7-ஆம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளன.  ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் குடும்ப அட்டை மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் கொடுக்க வேண்டும். அதிகத் தொகைக்கு ஏலம் கோருவதை தவிர்க்கும் பொருட்டு, வைப்புத் தொகை ஓராண்டு வாடகை என்பதை இரண்டு அல்லது மூன்றாண்டுகள் என மாற்றி அமைக்கப்படும். பெயர் மாற்றம் செய்து ஒன்பது ஆண்டுகளான கடைகள் மட்டுமே ஏலத்தில் விடப்படும். ஏலம் நடத்தப்படும் போது கருத்து முரண்பாடு ஏற்பட்டால் ஆணையரின் முடிவே இறுதியானது.

தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள வைப்புத் தொகை சூழ்நிலை கருதி மாற்றவும் வாய்ப்பு உள்ளது. பேருந்து நிலையக் கடைகளில் டீக்கடை மற்றும் இறைச்சிக் கடைகள் நடத்த அனுமதியில்லை. கடைகளை ஏலம் எடுத்த பின் உள் வாடகைக்கு விட்டால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். பொது ஏலம் நியாயமாகவும், நேர்மையுடன் நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். ஏலத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றார்.

 


Page 39 of 506