Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சிக்கன நடவடிக்கை தொடர்கிறது மாநகராட்சி ஊழியரிடம் சிம்கார்டு வாபஸ்

Print PDF

தினகரன் 05.08.2010

சிக்கன நடவடிக்கை தொடர்கிறது மாநகராட்சி ஊழியரிடம் சிம்கார்டு வாபஸ்

பெங்களூர், ஆக.5: பெங்களூர் மாநகராட்சி கமிஷனரின் சிக்கன நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள் ளது. அதிகாரிகள் மற்றும் இதர ஊழியர்கள் பயன்படுத்தி வந்த 1,293 பி.எஸ்.என்.எல். குரூப் சிம் கார்டுகளை வாபஸ் பெற்றுள்ளார்.

இது குறித்து மாநகராட்சி வட்டாரங்கள் கூறியதாவது: சித்தய்யா மாநகராட்சி கமிஷனராக பதவியேற்ற பிறகு சிக்கன நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். பாட்டில் தண்ணீர், அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களை வாபஸ் பெற்ற அவர் தற்போது அதிகாரிகள் மற்றும் இதர ஊழியர்கள் பயன் படுத்தும் பி.எஸ்.என்.எல். சிம் கார்டுகளை திரும்ப பெற்றுள்ளார். இந்த போன் பில்களுக்காக மாநகராட்சி மாதந்தோறும் ரூ.10.5 லட்சம் கட்டணம் செலுத்திவந்தது. இதனால் மாதந்தோறும் ரூ.6.5 லட்சம் மாநகராட்சிக்கு மிச்சமாகிறது.

உதவி பொறியாளர்களிடமிருந்து 184 சிம்கார்டுகளும், வருவாய் ஆய்வாளர்களிடமிருந்து 183 சிம்கார்டுகளும், டிரைவர்களிடமிருந்து 175 சிம்மும், வரி ஆய்வாளர்களிடமிருந்து 163, ஜூனியர் இன்ஜினியர்களிடமிருந்து 101, மேலாளர்களிடமிருந்து 44 உள்பட இன்னும் சில அதிகாரிகளிடமிருந்தும் சிம் கார்டு திரும்ப பெறப்பட்டுள்ளது.

சிம்கார்டுகளை சரண்டர் செய்யாதவர்கள் விரைவில் ஒப்படைக்கவும் கேட் டுக்கொள்ளப்பட்டுள்ள னர். இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.

 

வடக்கநந்தல் பகுதியில் குடிநீர் கட்டணம் செலுத்தாவிடில் இணைப்பு துண்டிக்கப்படும் செயல் அலுவலர் எச்சரிக்கை

Print PDF

தினகரன் 05.08.2010

வடக்கநந்தல் பகுதியில் குடிநீர் கட்டணம் செலுத்தாவிடில் இணைப்பு துண்டிக்கப்படும் செயல் அலுவலர் எச்சரிக்கை

சின்னசேலம், ஆக. 5: கள்ளக்குறிச்சியை அடுத்த வடக்கநந்தல் பேரூராட்சி செயல் அலுவலர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வடக்கந்தல் பேரூராட்சியில் அக்கராயபாளையம், கச்சிராயபாளையம், வடக்கநந்தல், அம்மாபேட்டை, வெங்கட்டம்மா பேட்டை ஆகிய கிராமங்கள் உள்ளது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி மூலம் இணைப்பு பெற்று குடிநீர் பெற்று வருகின்றனர். இதில் ஒரு சிலருக்கு குடிநீர் கட்டணம் செலுத்த சொல்லி நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை கட்ட மறுத்து வருகின்றனர். கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் அவர்கள் ம¦து நடவடிக்கையும் எடுக்கப்படும்.

மேலும் பேரூராட்சியின் அனுமதியின்றி தெருக்களில் செல்லும் குடிநீர் குழாயில் இணைப்பு பெற்று மின்மோட்டார் மூலம் நீரை உறிஞ்சுகின்றனர். இதனால் அக்கராயபாளையம் உள்ளிட்ட ஒருசில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே, அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு எடுத்துள்ளவர்கள் உடனடியாக இணைப்பை துண்டித்து கொள்ள வேண்டும். இல்லையெனில் பேரூராட்சி நிர்வாகம் திடீர் சோதனை செய்து குடிநீர் இணைப்பை துண்டிப்பதுடன் மின்மோட்டாரும் பறிமுதல் செய்யப்படும்.

வடக்கநந்தல் பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும். மேலும் அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு எடுத்துள்ளவர்கள் உடனே துண்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 05 August 2010 08:01
 

மாட்டுத்தாவணி கடைக்கு சீல்

Print PDF

தினமலர் 05.08.2010

மாட்டுத்தாவணி கடைக்கு சீல்

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இரண்டு ஓட்டல்களுக்கு மட்டுமே காஸ் வைத்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு முரணாக மண்ணெண்ணெய் அடுப்பு வைத்திருந்த ஒரு டீக்கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, "சீல்' வைக்கப்பட்டது. நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது, என மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் தெரிவித்தார். ஆய்வில் உதவி கமிஷனர்கள் ஆசைத்தம்பி, ராஜகாந்தி,சந்தை கண்காணிப்பாளர் பழனிவேலு பங்கேற்றனர்.

 


Page 382 of 506