Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நீர் நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டினால், நடவடிக்கை; கலெக்டர்.

Print PDF

தினமலர் 05.08.2010

நீர் நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டினால், நடவடிக்கை; கலெக்டர்.

மதுரை:""குளம், வாய்க்கால்களில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டினால் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்'' என மதுரை கலெக்டர் சி.காமராஜ் பேசினார்.மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைஅலுவலகத்தை தூய்மைப் படுத்தும் பணி நேற்று நடந்தது. இதனை துவக்கி வைத்த கலெக்டர் சி.காமராஜ் பேசியதாவது:மதுரை மாவட்டம் முழுவதும் இப்பணி நடக்க ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், தன்னார்வ தொண்டுநிறுவனங்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள், நண்பர் குழு, செஞ்சிலுவை சங்கம், தனியார் ஆஸ்பத்திரிகள் ஈடுபட உள்ளன. இக்குழு மூலம் தூய்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தரம் பிரித்து, பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆக., 10ம் தேதி ஒத்தக்கடையில் நடக்கும் தூய்மை பணியில் பேரூராட்சி துப்புரவு பணியாளர், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மகளிர் குழுக்கள், மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என 1500க்கும் மேற் பட்டோர் பங்கேற்பர். குளங்கள், கழிவுநீர் வாய்க்கால்களில் பிளாஸ்டிக் கழிவுகளை குவிப்பதால், மாசு ஏற்படுவதுடன், கழிவுநீர் வெளியேற முடியாமல் அடைப்பு ஏற்படுகிறது. அங்கு பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவோர் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில், மகளிர் திட்ட அலுவலர் தங்கவேல், உதவி இயக்குனர் (பஞ்சாயத்து) பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

4,257 செக்குகள் பணம் இல்லாமல் திரும்பின சொத்து வரி கட்டாதவர்கள் மீது மாநகராட்சி கடும் நடவடிக்கை

Print PDF

தினகரன் 04.08.2010

4,257 செக்குகள் பணம் இல்லாமல் திரும்பின சொத்து வரி கட்டாதவர்கள் மீது மாநகராட்சி கடும் நடவடிக்கை

புதுடெல்லி, ஆக. 4: சொத்து வரி செலுத்தாதவர்கள் மீது மாநகராட்சி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும் என்று நிலைக்குழு தலைவர் எச்சரித்துள்ளார்.

மாநகராட்சி நிலைக்குழு தலைவர் யோகேந்தர் சந்தோலியா நிருபர்களிடம் கூறியதாவது:

மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த வேண்டியவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 2003&04ம் ஆண்டில் இருந்ததைவிட, 2009&10ம் ஆண்டில் 17,470 பேர் அதிகரித்துள்ளனர். ஆனால், வரி வசூலோ கு¬ றந்து விட்டது. 2003&04ல்

ரூ776.73 கோடி சொத்து வரி வசூல் ஆனது. 2000&10ம் ஆண்டில் ரூ697.75 கோடிதான் வசூலானது.

அதனால், முந்தைய காலத்தில் சொத்து வரி செலுத்தி, தற்போது யாரெல்லாம் செலுத்தாமல் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சொத்து வரி நிலுவை வைத்துள்ளவர்கள், அதை செலுத்தாமல் இருப்பவர்கள் ஆகியோர் மீது மாநகராட்சி சட்டம் 1957ன் படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், தேவையில்லாமல் சொத்து வரிதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.

காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பி வருவது பெரும் பிரச்னையாக உள்ளது. இந்த நிதியாண்டில் மட்டும் சொத்து வரிக்காக பெறப்பட்ட 4,257 காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டன. கணக்கில் பணம் இல்லாமல் காசோலைகளை கொடு த்தவர்கள் மீதும் மாநகராட்சி சட்டம் மற்றும் செலாவணி விதிகள் சட்டம் ஆகியவற்றின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி சட்டப்படி, சொத்துக் களுக்கு அடையாளக் குறிகள் இடப்பட வேண்டும். குறிப்பாக சொத்து வரி செலுத்தியவர்களின் சொத் துகளுக்கு அடையாளக்குறி இட வேண்டும். இந்த நடைமுறை, சொத்து வரியை செலுத்த மற்றவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

சொத்து வரியை உயர்த்துவது, புதிய வரிகளை விதிப்பது ஆகியவற்றுக்கு எதிரான கொள்கையைக் கொண்டுள்ளோம். அதனால், சொத்து வரி உயராது. புதிய வரிகளும் வராது. ஆனால், மக்களின் ஒத்துழைப்பு இருந்தால், தற்போது நடைமுறையில் இருக்கும் வரிகளை தவிர்த்து மற்ற வழிகளில் மாநகராட்சி நிர்வாகத்தால் போதுமான வருவாயை ஈட்ட முடியும். இவ்வாறு யோகேந்தர் சந்தோலியா கூறினார்.

 

ஊத்துக்கோட்டை பேரூராட்சி எச்சரிக்கை சொத்து வரி செலுத்த தவறினால் ஜப்தி இவ்வாறு கூறியுள்ளார்.

Print PDF

தினகரன் 04.08.2010

ஊத்துக்கோட்டை பேரூராட்சி எச்சரிக்கை சொத்து வரி செலுத்த தவறினால் ஜப்தி இவ்வாறு கூறியுள்ளார்.

ஊத்துக்கோட்டை, ஆக.4: வரும் 31ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்த தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் இரா.பெரியசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழ்நாடு நகராட்சிகளின் சட்டம் 36வது பிரிவின்படி முதல் அரையாண்டு சொத்து வரியை ஏப்ரல் 30ம் தேதிக்குள்ளும், 2வது அரையாண்டு சொத்து வரியை அக்டோபர் 30ம் தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாதவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

2010&11ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி செலுத்தும் தேதி கடந்த ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. அதற்கு பிறகும் சிலர் வரி செலுத்தவில்லை.

அவ்வாறு வரி செலுத்தாத கட்டிட உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் சம்மந் தப்பட்ட கட்டிடத்துக் கான சொத்து வரியை செலுத்த வரும் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டித்தல், ஜப்தி உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

 


Page 383 of 506