Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வாடகை செலுத்தாத கடைகளின் குத்தகை உரிமம் ரத்து!

Print PDF

தினமலர் 04.08.2010

வாடகை செலுத்தாத கடைகளின் குத்தகை உரிமம் ரத்து!

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை செலுத்தாதவர்களின் குத்தகையை ரத்து செய்ய, நகராட்சி முடிவு செய்துள்ளது.காஞ்சிபுரம் நகரில் பஸ் நிலையம், மார்க்கெட் உட்பட, பல்வேறு பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இக்கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. கடையை ஏலம் எடுத்தவர்கள், பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் உள்ளனர். பெரும்பாலானோர், லட்சக்கணக்கான ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர்.பார்த்தசாரதி என்பவர், நான்கு லட்சத்து 72 ஆயிரத்து 251 ரூபாய் பாக்கி வைத்துள்ளார். சங்கர், மூன்று லட்சத்து 29 ஆயிரத்து 342 ரூபாய், ஜெய்சங்கர், மூன்று லட்சத்து 28 ஆயிரத்து 452 ரூபாய், பஞ்சாட்சரம், மூன்று லட்சத்து 26 ஆயிரத்து 25 ரூபாய், பாரதி என்பவர், இரண்டு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர்.நகரில், 48 கடைகளிலிருந்து 48 லட்சத்து 34 ஆயிரத்து 181 ரூபாய் வாடகை பாக்கி வர வேண்டியுள்ளது. வாடகை முறையாக வசூலிக்கப்படாததால் நகராட்சிககு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இதை சரி கட்ட, இரண்டு மாதங்களுக்கு மேல் கடை வாடகை செலுத்தாதவர்களின் குத்தகை உரிமையை ரத்து செய்ய, மன்றத்தின் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி நிர்வாக இயக்குனர், நகராட்சிக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன் அடிப்படையில் பல மாதங்களாக வாடகை செலுத்தாத 48 கடைகளின் வாடகை பாக்கி விவரம் சமீபத்தில் நடந்த நகரமன்றக் கூட்டத்தில், கவுன்சிலர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது."வாடகை செலுத்தாத கடை குத்தகைதாரர்களின் உரிமத்தை ரத்து செய்வது, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு மறு ஏலம் விட ஒப்பந்தப்புள்ளி கோருவது, இதனால் ஏற்படும் இழப்பீட்டிற்கும், வாடகை பாக்கி வைத்திருப்பவர்களிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்கவும் கோர்ட்டில் வழக்கு தொடர்வது' என, தீர்மானிக்கப்பட்டது.மேலும், நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு இல்லாமல் வீதியில் வாழ்பவர்களை இரவில் கணக்கெடுத்து, அவர்களுக்கு நகராட்சி சார்பில் உறைவிடம் ஏற்படுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை பெரிய தெருவில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர், தங்குமிடம், கழிவறை, குளியல் அறை, மின் விளக்கு வசதி, குடிநீர் வசதிகளை செய்ய, 27 லட்சம் ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.நகராட்சி பொது நிதியில் பணியை நிறைவேற்றிவிட்டு திட்டப்பணிக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்போது, அதை ஈடு செய்து கொள்ள நகராட்சி முடிவு செய்துள்ளது.

 

விளம்பரங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் பிரபல நிறுவனங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

Print PDF

தினகரன் 03.08.2010

விளம்பரங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் பிரபல நிறுவனங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

புதுடெல்லி,ஆக.3: மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் விளம்பரங்களை வைத்துள்ள பிரபல நிறுவனங்கள் உடனடியாக பணம் செலுத்த வேண்டும் என்று இ&மெயிலில் மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லி மாநகராட்சி கடும் நிதிநெருக்கடியில் உள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட முடியாத அளவுக்கு நெருக்கடியில் தத்தளிக்கிறது. இதனால் நிதிநெருக்கடியை சரிக்கட்டஎன்று மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநகராட்சி எல் லையில் உள்ள டிடீசி பஸ் நிறுத்தங்கள், டெல்லி மெட்ரோ ரயில் கழக (டி.எம்.ஆர்.சி.) கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் செய்யப்பட்டுள்ள விளம்பரங்களை மாநகராட்சி அதிகாரிகள் பார்த்தனர்.

அதைத் தொடர்ந்து, விளம்பரங்களை வைத்துள்ள சம்பந்தப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு கம்பெனிகளுக்கு இ&மெயிலில் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. அதில், "தங்களது தயாரிப்புகளை பிரபலப்படுத்துவதற்காக வைக்க ப்பட்டுள்ள விளம்பரத்து க்கான கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் விள ம்பரங்கள் அகற்றப்படும்" என்று மாநகராட்சி தெரிவித்திருந்தது.

டிஸ்கவரி சேனல், சாம்சங் நிறுவனம், டைட்டன் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், .சி..சி.. வங்கி, சோனி டி.வி. உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த செயலுக்கு நிலைக்குழு உறுப்பினர் ரஜ்னி அப்பி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஏற்கனவே விளம்பரத்துக்கான தொகையை டிடீசி, டிஎம்ஆர்சிக்கு செலுத்திவிட்டன. டிடீசியும், டிஎம்ஆர்சி அந்தப் பணத்தை மாநகராட்சியுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. நிலைமை இப்படியிருக்கும்போது, சம்பந்த ப்பட்ட கம்பெனிகளை தண்டிப்பது எந்த வகையில் நியாயம்? இது முழுக்க முழுக்க சட்டவிரோதம் என்றார்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் விளம்பரம் செய்யப்பட்டிருக்கும்போது, பணம் செலுத்தும்படி இ&மெயில் அனுப்பியதில் எந்தத் தவறும் இல்லை. சம்பந்தப்பட்ட கம்பெனிகளிலிருந்து விளம்பரத்துக்கான கட்டணத்தை பெற்றவுடன், அதில் மாநகராட்சியின் பங்கை அளித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை" என்றனர்.

இதுபற்றி டிடீசி உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "விளம்பரங்கள் செய்ய கான்ட்ராக்ட் எடுத்துள்ள தனியார் நிறுவனத்திடம்தான் விளம்பரத்துக்கான தொகையை சம்ப ந்தப்பட்ட கம்பெனிகள் அளித்துள்ளன. அந்த நிறுவனம் முழுத்தொகையையும் எங்களுக்கு வழங்கவில்லை. அவ்வாறு முழு தொகையும் வந்தபிறகு, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகையை நிச்சயம் செலுத்துவோம்" என்றார்.

 

மேற்கு அண்ணாநகரில் சுகாதாரம் இல்லாத டாஸ்மாக் பாருக்கு சீல்

Print PDF

தினகரன் 03.08.2010

மேற்கு அண்ணாநகரில் சுகாதாரம் இல்லாத டாஸ்மாக் பாருக்கு சீல்

சென்னை, ஆக. 3: மேற்கு அண்ணாநகர் 13வது மெயின்ரோடு நேரு நகர் முதல் தெருவில் டாஸ்மாக் கடை உள்ளது. இதற்கு அருகில் முருகன் என்பவர் பார்நடத்தி வருகிறார். இங்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமாக இல்லாததுடன், அந்த பகுதி முழுவதும் சிறுநீர் கழிக்கப்பட்டு அசுத்தமாக உள்ளதாக புகார் கூறப்பட்டது.

கடந்த 2 மாதத்துக்கு முன் மாநகராட்சி அதிகாரிகள் அந்த பார்உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினர். தொடர்ந்து சுகாதாரமற்ற பொருட்கள் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை மீண்டும் மாநகராட்சி சார்பில் நோட்டீசு தரப்பட்டது.

அடுத்த கட்டமாக கீழ்ப்பாக்கம் கூடுதல் சுகாதார அதிகாரி பிரபாவதி தலைமையில் சுகாதார அலுவலர்கள் அந்த டாஸ்மாக் பாருக்கு நேற்று சென்று சீல்வைத்தனர்.

 


Page 384 of 506