Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

துணை முதல்வர் பங்கேற்கும் விழா மேடை: கடையநல்லூரில் ஆட்சியர் ஆய்வு

Print PDF

தினமணி 02.08.2010

துணை முதல்வர் பங்கேற்கும் விழா மேடை: கடையநல்லூரில் ஆட்சியர் ஆய்வு

கடையநல்லூர், ஆக. 1: துணை முதல்வர் மு.. ஸ்டாலின் பங்கேற்கும் விழா நடைபெறும் இடத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடையநல்லூர் நகராட்சியின் குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், புதிய குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என பீட்டர்அல்போன்ஸ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, முழு மானியத்தில் ரூ.21.5 கோடி மதிப்பீட்டில் கடையநல்லூரில் புதிய குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.

இதன் துவக்க விழா, காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் கக்கன் நூற்றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் இம்மாதம் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்காக கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் சீரமைக்கப்பட்டு மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனை மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன், எம்எல்ஏக்கள் பீட்டர்அல்போன்ஸ், கருப்பசாமிபாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் இப்ராஹிம், ஒன்றியத் தலைவர்கள் காமராஜ், சட்டநாதன், காங்கிரஸ் நிர்வாகிகள் செல்வராஜ், மாரியப்பன், புலவர் செல்வராஜ், அய்யாத்துரை, திமுக ஒன்றியச் செயலர் காசிதர்மம்துரை, நகரச் செயலர் முகம்மதலி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

 

ஆக்கிரமிப்பிலுள்ள தேயிலை தோட்டம் விரைவில் மீட்பு செயல் அலுவலர் உறுதி

Print PDF

தினகரன் 02.08.2010.

ஆக்கிரமிப்பிலுள்ள தேயிலை தோட்டம் விரைவில் மீட்பு செயல் அலுவலர் உறுதி

மஞ்சூர், ஆக.2: நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பேரூராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் தேயி லை தோட்டம் மஞ்சூர்அட்டி பின்புறம் உள்ளது. பல லட்சம் மதிப்புள்ள தேயிலை தோட்ட த்தை பேரூராட்சி நிர்வாகத்தால் நேரடியாக பராமரிக்க முடியவில்லை. எனவே ஆண்டுக்கு ஒரு முறை குத்தகைக்கு தனியாரிடம் விட்டு அதன் மூலம் வருவாய் ஈட்டியது.

இந்நிலையில், போதிய கண்காணிப்பு இல்லாததால் 10 ஏக்கரும் முழுமையாக தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டு க்கு முன் ஆக்கிரமிப்பிலுள்ள தேயிலை தோட்டத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அரசியல் உள்ளி ட்ட பல்வேறு குறுக்கீடுகள் காரண மாக ஆக்கிரமிப்பு தேயிலை தோட்டத்தை மீட்கும் நடவடிக்கை கைவிடப்பட்டது.

கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் தேயிலை தோட்டம் இருந்து வருகிறது. இந்த 10 ஏக்கரில் மாதந்தோறும் 5 ஆயிரம் கிலோ பசுந்தேயிலை கிடைக்கும். இதன் மூலம் ரூ.30 ஆயிரம் வரை மாதம் கிடைத்தது. ஆக்கிரமிப்பால் கடந்த காலங்களில் பேரூராட்சிக்கு பல லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் பேரூராட்சியில் ஆய்வு மேற் கொண்ட உதவி இயக்குனர் செல்வராஜ், ஆக்கிரமிப்பு பகுதிகளை பார்வையிட் டார். கடந்த மாதம் கீழ் குந்தா பேரூராட்சி மன்ற கூட்டத்திலும் ஆக்கிரமிப்பு தேயிலை தோட்டத்தை மீட்க வேண் டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து தேயிலை தோட்டத்தை மீட்கும் தீர்மா னம் பேரூராட்சி நிர்வாகத் தால் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயரா மன் கூறுகையில், ‘கீழ்குந்தா பேரூராட்சிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பிலுள்ள 10 ஏக்கர் தேயிலை தோட்டத்தை மீட்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகி றது. முதற்கட்டமாக கூடிய விரைவில் வருவாய் துறை மூலம் தோட்டத்தில் சர்வே பணிகள் நடத்தப்படும். பின் னர் தேயிலை தோட்டம் மீட் கப்படும். எதிர்காலத்தில் வேறு யாரும் ஆக்கிரமிப்பு செய்யா மல் இருக்க சுற்றிலும் தடுப்பு வேலி அமைத்து பேரூராட்சியின் கட்டுப்பாட்டிற் குள் கொண்டு வரப்படும்என்றார்.

 

பாரபட்சமற்ற பணிகள் பேரூராட்சி தலைவர் உறுதி

Print PDF

தினமலர் 02.08.2010

பாரபட்சமற்ற பணிகள் பேரூராட்சி தலைவர் உறுதி

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பேரூராட்சி வளர்ச்சி திட்டப்பணிகளில் எந்த வார்டும் புறக்கணிக்கப்படவில்லை என்று பேரூராட்சி தலைவர் ராமசாமி தெரிவித் துள்ளார். ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் ராமசாமி கவுன்சிலர்களை கலந்து பேசாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படுவதாக துணைத்தலைவர் காசிராஜன் உட்பட சில கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைவர் ராமசாமி கூறுகையில், "அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 50 லட்சம் ரூபாயில் தேவையான வார்டுகளில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. எந்த வார்டும் புறக்கணிக்கப்படவில்லை.

சேடபட்டி-ஆண்டிபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தில் 1,2,3,5,6,11,12,13,14,15,16,17,18 வார்டுகளுக்கும் பிரித்து வினியோகிக்கப்படுகிறது. சிலிண்டர் வினியோகம் சிவில் சப்ளை துறை அதிகாரிகளின் ஆலோசனை பெற்று தேவையான பகுதிகளுக்கு வழங்க கேட்கப்பட் டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட வார்டுகளில் விடுபட்டவர்களுக்கும் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பேரூராட்சியில் எந்த டெண்டரானாலும் அதிகாரிகள் முன்னிலையில் குறைந்த விலைப்புள்ளி உள்ள டெண்டர் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது' என்றார்.

 


Page 385 of 506