Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பராமரிப்பு ஒப்பந்தம் மீறல் தனியார் மருத்துவமனை மீது வழக்கு தொடர நகராட்சி முடிவு

Print PDF

தினகரன் 30.07.2010

பராமரிப்பு ஒப்பந்தம் மீறல் தனியார் மருத்துவமனை மீது வழக்கு தொடர நகராட்சி முடிவு

தாம்பரம், ஜூலை 30: ஒப்பந்தப்படி நகராட்சி மருத்துவமனையை பராமரிக்காததால், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மீது வழக்கு தொடரவேண்டும் என்று தாம்பரம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

தாம்பரம் நகராட்சி கூட்டம், அதன் தலைவர் மணி தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் காமராஜ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், "கிழக்கு தாம்பரத்தில் உள்ள நகராட்சி மருத்துவமனையை தத்தெடுத்து பராமரிப்பதாக தனியார் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒப்பந்தம் செய்ததுள்ளது. நகராட்சியும் அனுமதி அளித்தது. அதை வைத்துதான், அந்த மருத்துவமனை நிர்வாகம், மருத்துவமனை தொடங்க டெல்லியில் அனுமதி பெற்றது. ஆனால், நகராட்சி மருத்துவமனையை பராமரிக்கவில்லை. இதனால், தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினர்.

கவுன்சிலர்கள் ரத்தினகுமார் (திமுக), வேணுகோபால், ஷீலா (காங்) ஆகியோர், ‘தரமற்ற பொருட்களை வைத்து பாதாள சாக்கடை கட்டப்படுகிறது.

கவுன்சிலர்கள் கேள்வி கேட்டால், ஒப்பந்ததாரர்கள் தரக்குறைவாக பேசுகின்றனர். எனவே, தனி அதிகாரி நியமித்து பாதாள சாக்கடை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்என்றனர்.

பிரபாகர் (அதிமுக), புவனேஸ்வரி (திமுக) ஆகியோர், ‘அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவருக்கும் செல்போன் தரப்பட்டுள்ளது. ஆனால், புகார் தெரிவிக்க அதிகாரிகளை தொடர்பு கொண்டால், பெரும்பாலான நேரங்களில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றனர்.

தலைவர் மணி பேசியதாவது, ‘கேளம்பாக்கத் தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒப்பந்தத்தை மீறி விட்டது. வக்கீல்களிடம் ஆலோசனை நடத்தி, செட்டிநாடு மருத்துவமனை மீது வழக்கு தொடரப்படும். பாதாள சாக்கடை பணிகளை ஆய்வு செய்ய தனி அதிகாரி நியமிக்க நகராட்சி நிர்வாக ஆணையருக்கு கோரிக்கை அனுப்பி வைக்கப்படும்கூட்டத்தில், 95 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

பசை தடவி சுவர்களில் டிஜிட்டல் பேனர் ஒட்டினாலும் நடவடிக்கை மேயர் எச்சரிக்கை

Print PDF

தினகரன் 30.07.2010

பசை தடவி சுவர்களில் டிஜிட்டல் பேனர் ஒட்டினாலும் நடவடிக்கை மேயர் எச்சரிக்கை

சென்னை, ஜூலை 30: கட்டிடங்களின் சுவர்களில் பசை தடவி ஒட்டப்படும் விளம்பர பேனர்களை மாநகராட்சி அகற்றும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூடத்தில் நேற்று நடந்தது.

அதன்பின்னர், மேயர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

புளியந்தோப்பு, ஐஸ் அவுஸ், கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் குப்பையை அகற்றி அழுத்தி எடுத்துச் செல்லும் சிறிய காம்பாக்டர்கள் உட்பட 93 காம்பாக்டர்கள் ணீ 19.79 கோடியில் புதிதாக வாங்கப்படவுள்ளது. இந்த வாகனங்கள் 2 வருட இயக்குதல் மற்றும் பராமரிப்பு ஒப்பந்தத்துடன் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆலந்தூர் சாலையில் ஒரு கோடி ரூபாய் செலவில் நவீன குப்பை மாற்று நிலையம் கட்டப்படவுள்ளது.

பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் 4,250 மீட்டர் நீளத்தில் வேலி சுவர் கட்டப்படும். கவுன்சிலர்களுக்கு ணீ 81 லட்சம் செலவில் பிரிண்டருடன் கூடிய லேப்&டாப் வழங்கப்படும்.

கல்வி வளர்ச்சிக்கு ஏற்ப மாநகராட்சி நடத்தும் சென்னை பள்ளிகளில் மண்டலத்துக்கு ஒன்று வீதம் ஆற்றல் சார் பள்ளிகள்உருவாக்கப்படவுள்ளது. இப்படி மாநகராட்சி மேற்கொள்ள இருக்கும் 60 பணிகளுக்கான தீர்மானங்கள் மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கட்டிடங்களின் மீதும், சாலைகளின் சந்திப்புகளிலும் பெரிய, பெரிய விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அந்த விளம்பர போர்டுகள் அகற்றப்பட்டன.

சென்னையில் தற்போது விளம்பர போர்டுகள் புதிய உருவத்தில் வருகிறது என்று மன்ற எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி தெரிவித்தார். கட்டிடங்களின் சுவர்களில் பசையை தடவி பெரிய டிஜிட்டல் விளம்பர பேனர்கள் ஒட்டப்படு கிறது.

இது போன்ற விளம்பரங்களை வைத்துள்ள கட்டிட உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றிட வேண்டும். அப்படியில்லை என்றால் மாநகராட்சி அகற்றும். அதற்கான கட்டணமும் அவர்களிடமே வசூலிக்கப்படும். சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு மேயர் கூறினார்.

 

நகராட்சியிடம் அனுமதி பெறாத 94 செல்போன் டவர்களுக்கு ‘சீல்’

Print PDF

தினகரன் 30.07.2010

நகராட்சியிடம் அனுமதி பெறாத 94 செல்போன் டவர்களுக்கு சீல்

மும்பை: மகாராஷ்டிராவில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட செல்போன் டவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்ததால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் 96 செல்போன் டவர்கள் உள்ளன. இவற்றில் 2 டவர்கள் மட்டுமே சட்டபூர்வமானவை. அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக நிறுவப்பட்ட மீதி 94 செல்போன் டவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைக்கத் தொடங்கியுள்ளது. இதற்கான பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நான்டெட் பகுதியில் செல்போன் டவர்களுக்கு சீல் வைக்கப்பட்டதால் செல்போன் சேவை பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் செல்போன் இணைப்பு கிடைக்காததால் அவதிப்பட்டனர். இதுவரை 20 செல்போன் டவர்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து சீல் வைக்கும் பணி நடந்து வருவதாகவும் நான்டெட் நகராட்சி கமிஷனர் தீபக் மாய்ஸ்கர் தெரிவித்தார்.

 

 


Page 386 of 506