Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சொத்துவரி, குடிநீர் கட்டணம் பாக்கி:குடிநீர் இணைப்பு துண்டிக்க எச்சரிக்கை

Print PDF

தினமலர் 30.07.2010

சொத்துவரி, குடிநீர் கட்டணம் பாக்கி:குடிநீர் இணைப்பு துண்டிக்க எச்சரிக்கை

திருநெல்வேலி:சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாவிடில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என பாளை., மாநகராட்சி உதவிக்கமிஷனர் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாளை., மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் மாநகராட்சி கடைகளுக்கான குத்தகை வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மார்ச் 31ம் தேதி வரையுள்ள காலத்திற்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. எனவே ஒரு வார காலத்திற்குள் நிலுவைத் தொகை வைத்துள்ள கட்டடதாரர்கள் பாக்கியை செலுத்தி ஜப்தி நடவடிக்கையை தவிர்த்துக் கொள்ளவேண்டும். 2010-11 முதல் அரையாண்டிற்கான வரித் தொகையினை வரும் ஆக.15ம் தேதிக்குள் செலுத்தாத கட்டங்களுக்கான குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும். மாநகராட்சி கடைகளில் 3 மாதங்களுக்கு மேலாக குத்தகை தொகை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள கடைகளுக்கான குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டு ஏலத்திற்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பாளை., உதவிக்கமிஷனர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

சுவர் விளம்பரங்கள் எந்த உருவத்தில் வந்தாலும் அகற்றப்படும்

Print PDF

தினமலர் 30.07.2010

சுவர் விளம்பரங்கள் எந்த உருவத்தில் வந்தாலும் அகற்றப்படும்

சென்னை : ""சென்னை மாநகராட்சியின் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் மாணவர்கள் உபயோகப்படுத்தும் வகையில் நூலகங்கள் அமைக்கப்படும்,'' என, மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் சுப்ரமணியன் தலைமையில் நடந்தது. கூட்டம் முடிந்த பின், மேயர் நிருபர்களிடம் கூறியதாவது:

மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் 61 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகராட்சி நலவாழ்வு மையங்களிலுள்ள சிறப்பு வார்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட கட்டணத்தை ரத்து செய்வது, சைதாப்பேட்டை, ஆலந்தூர் சாலையில் 1 கோடி ரூபாய் செலவில் நவீன குப்பை மாற்று நிலையம் அமைப்பது, நுங்கம்பாக்கம் பள்ளியில் புதிய தொடக்கப் பள்ளி தொடங்குவது போன்ற தீர்மானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.மாநகராட்சியின் 67 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் மாணவ, மாணவியர் படித்து பயன்பெறும் நிலையில் 1 கோடி 25 லட்ச ரூபாய் செலவில் நூலகங்கள் அமைக்கப்படவுள்ளது.நூலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் 6 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும். ஒவ்வொரு நூலகத் திலும் 200 புத்தகங்கள் வாங்கி வைக்கப்படும்.சொத்து வரி வசூலிப்பை மேம்படுத்த குறிப்பிட்ட அரையாண்டிற்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 1 சதவீதம் ஊக்கத் தொகையும், அரையாண்டிற்குள் கட்ட தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.கவுன்சிலர்களின் வார்டு அலுவலகங்களில் உபயோகப்படுத்த 81 லட்ச ரூபாய் செலவில், பிரிண்டருடன் கூடிய லேப்-டாப் வாங்கி கொடுக்கப்படும்.கவுன்சிலர்கள், அந்த பகுதி பொதுமக்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றுகளை இலவசமாக எடுத்து கொடுப்பார்கள். மாநகராட்சி மண்டலத்திற்கு ஒன்று வீதம் 10 ஆற்றல் சார் பள்ளிகள் தொடங்கப்படும்.விளம்பரப் பலகைகள் தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது பெரிய கட்டடங்களின் சுவர்களில் ஒட்டும் வகையில் விளம்பரங்கள் வைக்கப்படுகிறது. விளம்பரங்கள் எந்த உருவத்தில் வந்தாலும் மாநகராட்சி அவைகளை கட்டாயம் அகற்றும்.இவ்வாறு மேயர் கூறினார்.

 

கோடி மேம்பாலம் கட்டுவதற்கு ஆய்வு 1040 மீட்டர் தூரம் அமையும் சில மாதத்தில் திட்ட அறிக்கை தயாராகி விடும், " என்றார்.

Print PDF

தினகரன் 29.07.2010

கோடி மேம்பாலம் கட்டுவதற்கு ஆய்வு 1040 மீட்டர் தூரம் அமையும் சில மாதத்தில் திட்ட அறிக்கை தயாராகி விடும், " என்றார்.

கோவை, ஜூலை 29: கோவை யில் 100 கோடி ரூபாய் செல வில் மேம்பாலம் அமைக்க ஆய்வு நடக்கிறது. உலக தமிழ் செம்மொழி மாநாடு நிறைவு விழாவில், கோவை காந்திபுரத்தில் 100 கோடி ரூபாய் செலவில் புதிதாக மேம்பாலம் அமைக்கப்படும் என தமிழக முதல் வர் அறிவித்தார்.

இந்த மேம்பாலம், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து, கணபதி டெக்ஸ்டூல் பாலம் வரை 1040 மீட்டர் தூரம் அமையும். அதாவது 1.04 கி.மீ தூரத்திற்கு இந்த மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, சின்ன சாமி ரோடு, கிழக்கு பாரதி யார் ரோடு, தெற்கு நஞ்சப் பா ரோடு, வடக்கு சத்தி ரோடு போன்றவை இந்த மேம்பால எல்லைக்குள் வரும். மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இப்பகுதிகளுக்கு சர்வீஸ் ரோடு அமைக்கப்படும். புதிய மேம்பாலம் அமைப்பதற்கான முதல் கட்ட ஆய்வு, நிலத்தின் தன் மை, நீள, அகலம் குறித்த ஆய்வு நடக்கிறது.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி சார்பில் இதற்கான பணி மேற்கொள்ளப்படும். மேம்பாலம் 4 வழிப்பாதையாக, 17 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படும். பொதுமக்கள் நடந்து செல்ல 0.25 மீட்டர் அகலத்திற்கு நடைபாதை விடப்படும். திட்டப்பணிக்காக காந்திபுரம் விரைவு பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து ஆம்னி பஸ் ஸ்டா ண்ட் வரை 300க்கும் மேற் பட்ட வணிக கடை, வியா பார நிறுவனங்கள், கட்டடங் கள் கையகப்படுத்தும் வாய்ப்புள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகை யில், " மேம்பாலம் தொடர் பாக விரிவான திட்ட அறிக் கை (டி.பி.ஆர்) தயாரிக்க டெண்டர் விடப்படும். இப் பகுதி ரோட்டில் வாகனங்க ளின் இயக்கம், பொதுமக்கள் நடமாட்டம், எதிர்காலத்தில் வாகனங்களின் பெருக்கம், வாகனங்கள் சென்று வரும் வர எளிதான வழிகளை ஆய்வு செய்து திட்டம் தயாரிக்கப்படும். இந்த பணி முடிந்த பின்னரே, மேம்பா லம் கட்டும் பணி துவக்கப்படும்.

மேம்பாலம் கட்டுவதற் கான உத்தேசமான விவரங்கள் மட்டுமே ஆய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளது. மேம்பாலம் அமையும் பகுதியில் அடுக்குமாடி வணிக கட்டடம், இதர கட்டடங்கள், போலீஸ் குவார்ட்டர்ஸ், பஸ் ஸ்டாண்ட், சிலை, கழிப்பிடம் உள்பட பல்வேறு கட்டுமானங்கள் இருக்கிறது. வணிக கட்டடங்களை கை யகப்படுத்தவேண்டியிருக் குமா என ஆய்விற்கு பின்ன ரே உறுதியாக தெரிய வரும். கட்டடங்கள் குறைவாக உள்ள இடத்தை அதிகமாக கையகப்படுத்தலாமா, மேம் பாலம் எந்த விதத்தில் அமைத் தால் சிறப்பாக இருக்கும் என திட்ட அறிக்கையின் மூலம் உறுதி செய்யப்படும்.

 


Page 389 of 506