Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கூட்டுக்குடிநீர் திட்டப்பணி ஆய்வு

Print PDF

தினகரன் 28.07.2010ச்

கூட்டுக்குடிநீர் திட்டப்பணி ஆய்வு

திண்டுக்கல், ஜூலை 28: வேடசந்தூர் பகுதியில் நடந்துவரும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு செய்தார்.

வேடசந்தூர் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் ரூ.38 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டம் கட்டளைப் பகுதியில் இருந்து வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பாளையம், கன்னிவாடி, ஸ்ரீராமபுரம் பேரூராட்சி பகுதிகள் மற்றும் வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், குஜிலியம்பாறை, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 739 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

இதில் கோவிலூர் பகுதியில் வேடசந்தூர், குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம் ஊராட்சிப் பகுதிகளை 235 கிராம குடியிருப்புகள் பயனடையும் வகையில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவுடன் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, ரூ.5.50 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று ஆய்வு செய்து, விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அப்போது, கலெக்டர் வள்ளலார், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அகிலன் உடனிருந்தனர்.

Last Updated on Wednesday, 28 July 2010 11:31
 

நகராட்சி உடனடி நடவடிக்கை

Print PDF

தினமணி 28.07.2010

நகராட்சி உடனடி நடவடிக்கை

உடுமலை, ஜூலை 27: மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் ஆபத்தாக இருந்து வந்த படுகுழியை மூடி, உடுமலை நகராட்சி உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.

உடுமலை, தளி ரோட்டில் புதிய ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதை ஒட்டி வாகனங்கள் செல்ல மாற்றுப் பாதைகள் அமைக்கப்பட்டன. இதில் பிஏ மில்ஸ் பின்புறம் யூனியன் அலுவலகம் செல்லும் திருப்பம் ஒன்றில் உள்ள ஒரு பாலத்தில் ஆளை விழுங்கும் அபாய மரணக்குழி ஏற்பட்டிருந்தது. இது குறித்து தினமணியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதன் எதிரொலியாக, உடுமலை நகராட்சி அந்த மரணக் குழியை மூட நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென தொகையை ஒதுக்கப்பட்டு கடந்த சில தினங்களாக நடந்து வந்த பணிகள் செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது.

 

ஆடிப்பெருக்கு முன்னேற்பாடு பணிகள்: மாநகர மேயர் ஆய்வு

Print PDF

தினமணி 28.07.2010

ஆடிப்பெருக்கு முன்னேற்பாடு பணிகள்: மாநகர மேயர் ஆய்வு

திருச்சி, ஜூலை 27: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறைப் பகுதிகளில் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் சிறப்பு முன்னேற்பாட்டுப் பணிகளை மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.தி. பால்சாமி ஆகியோர் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வருகிற ஆகஸ்ட் 3-ம் தேதி ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, திருச்சியைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் காவிரியில் புனித நீராட வருவார்கள். இதற்காக ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறை, சிந்தாமணி படித்துறை, ஓடத்துறை படித்துறை, தில்லைநாயகம் படித்துறை ஆகிய இடங்களில் மாநகராட்சியின் மூலம் சுகாதாரம், விளக்கு வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அம்மாமண்டபம் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.õ. பால்சாமி ஆகியோர் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சுகாதாரப் பணியாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தவும், சிறப்பு மருத்துவ முகாம்களை அமைக்கவும், கூடுதலாக மின் விளக்கு ஏற்பாடுகளைச் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஆக. 3-ம் தேதி மட்டும் உள்ளூர் மக்கள் துணி துவைக்க அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

ஆய்வின்போது, செயற்பொறியாளர் எஸ். அருணாசலம், ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் த. குமரேசன், உதவி ஆணையர் பி. பாஸ்கர், மாமன்ற உறுப்பினர் கே. கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 


Page 390 of 506