Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ஆடிப்பெருக்கு முன்னேற்பாடு பணி: மேயர், கமிஷனர் நேரில் ஆய்வு

Print PDF

தினமலர் 28.07.2010

ஆடிப்பெருக்கு முன்னேற்பாடு பணி: மேயர், கமிஷனர் நேரில் ஆய்வு

திருச்சி: ஆடி 18 முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறை பகுதியில் மாநகராட்சி மூலம் நடந்து வரும் முன்னேற்பாடு பணியை மாநகராட்சி மேயர், கமிஷனர் நேரில் ஆய்வு செய்தனர்.ஆடி பெருக்கை கொண்டாட திருச்சி மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து ஏராளமான மக்கள் காவிரி ஆற்றுக்கு வருவர். ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஆடி 18 விழாவுக்கு மாநரகாட்சி சார்பில், சிறப்பு ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். நடப்பாண்டு ஆடிப்பெருக்கு விழா முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மாநகராட்சி அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:ஆகஸ்ட் மூன்றாம் தேதி (ஆடி 18) ஆடிப்பெருக்கு முன்னிட்டு திருச்சி, அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து புனித நீராட காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறை, சிந்தாமணி படித்துறை, ஓடத்துறை படித்துறை, தில்லைநாயகம் படித்துறை ஆகிய இடங்களில் திருச்சி மாநகராட்சி மூலம் சுகாதாரம், விளக்கு வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேற முன்னேற்பாடு வசதி மேற்கொள்ளப்பட உள்ளது.அம்மாமண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணியை மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி ஆகியோர் பார்வையிட்டனர்.ஆடி 18 அன்று சுகாதார பணியாளர்களை சுழற்சி முறையில் ஈடுபடுத்தி பணி மேற்கொள்ள வேண்டும். அம்மாமண்டபம், ஓடத்துறை படித்துறை பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க வேண்டும். கூடுதலாக அவ்விடங்களில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். பக்தர்கள் புனித நீராடும் இடங்களில் ஆடி 18 அன்று மட்டும் உள்ளூர் மக்கள் துணி துவைக்க அனுமதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.ஆய்வின் போது, செயற்பொறியாளர் அருணாச்சலம், ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் குமரேசன், உதவி கமிஷனர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர் பாலகுருநாதன், கவுன்சிலர் கிருஷ்ணவேணி, உதவி செயற்பொறியாளர்கள் லட்சுமணமூர்த்தி வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

விதி மீறிய கட்டடத்திற்கு "சீல்'

Print PDF

தினமலர் 28.07.2010

விதி மீறிய கட்டடத்திற்கு "சீல்'

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயம் அருகில், விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடத்திற்கு சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், "சீல்' வைத்து மூடியது.சென்னை மாநகராட்சியில் பெற்ற திட்ட அனுமதியை மீறி, வணிக கட்டடம் கட்ட முயன்றதை கண்டுபிடித்த சி.எம்.டி.., இந்த சீல் நடவடிக்கையை நேற்று எடுத்தது.

இது குறித்து சி.எம்.டி.., உறுப்பினர்-செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை பெருநகரில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்களை கட்டுப்படுத்தும் முகமாக, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, வானவில் அருகில் நில அளவை எண் 1433/3, பிளாக் 29, மயிலாப்பூர் கிராமம், சென்னை-18ல் கட்டப்பட்ட பழைய கதவு எண் 286, புதிய கதவு எண் 409 கொண்ட கட்டடம், நகர் மற்றும் ஊரமைப்பு சட்டம் 1971ன் பிரிவு 56 மற்றும் 57ன் படி பூட்டி சீல் வைக்கப்பட்டது.மாநகராட்சியிடம், திட்ட அனுமதி பெற்றதற்கு புறம்பாக, தரைதளம் மற்றும் நான்கு தளம் கொண்ட வணிக கட்டடத்தை கட்டியுள்ளார். இதனால், இந்தக் கட்டடம் பூட்டி சீல் வைக்கப்படுகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளது.

 

"சூளேஸ்வரன்பட்டி குடிநீர் பிரச்னைக்கு குடிநீர் வடிகால் வாரியம் பொறுப்பேற்க முடியாது'

Print PDF

தினமலர் 27.07.2010

"சூளேஸ்வரன்பட்டி குடிநீர் பிரச்னைக்கு குடிநீர் வடிகால் வாரியம் பொறுப்பேற்க முடியாது'

பொள்ளாச்சி:"சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு, குடிநீர் வடிகால் வாரியம் எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது' என, அதன் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

பொள்ளாச்சி நகரை ஒட்டியுள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில்வாரத்தில் இரண்டு நாட்கள் வினியோகம் செய்யப்பட்ட குடிநீர், தற்போது மாதத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து, மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் பல்வேறு போராட்டத்தில் குதித்துள்ளனர்.பேரூராட்சிக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு குடிநீர் வழங்குவதில்லை என்று பேரூராட்சி நிர்வாகம் அறிவித்து, கலெக்டருக்கு மனுஅனுப்பியது. அதன்பின், சூளேஸ்வரன்பட்டிக்கு தனி குடிநீர் திட்டம் கொண்டு வருவதற்கு பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்து கலெக்டருக்கு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி, அரசு அனுமதி பெறப்பட்டுள்ளது.பேரூராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த கோரி அ.தி.மு.., கவுன்சிலர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இந்நிலையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கை: சூளேஸ்வரன்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் 1996ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பேரூராட்சிக்கும், சுற்றுப்பகுதி கிராமங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் 2011ம் ஆண்டு, பேரூராட்சியிலுள்ள 19 ஆயிரத்து 957 மக்கள் தொகைக்கேற்ப நாளொன்றுக்கு 13 லட்சத்து 97 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது நாளொன்றுக்கு 16 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது.பேரூராட்சிக்கு குடிநீர் வழங்கியதுடன் குடிநீர்வடிகால் வாரியத்தின் பொறுப்பு முடிந்தது. பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு முறையாக வினியோகிக்க வேண்டிய பொறுப்பு பேரூராட்சி நிர்வாகத்தை சார்ந்தது. பேரூராட்சிக்கு குடிநீர் வழங்கியதற்காக, குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சராசரியாக மாதாந்திர 2.75 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். அரசு ஆணை படி சலுகை விலையில், ஆயிரம் லிட்டருக்கு 4.50 ரூபாய் என்ற விகிதத்தில் தண்ணீர் வழங்கப்படுகிறது.குடிநீர் வரையறுக்கப்பட்ட அளவை விட மூன்று லட்சம் லிட்டர் அதிகமாக வழங்கியும், பேரூராட்சி நிர்வாகம், 96 லட்சம் ரூபாய் குடிநீர் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது.

பேரூராட்சிக்கு குடிநீருக்கு தனி திட்டம் நிறைவேறும் வகையில், மேற்கொள்ளப்படும் பணிகளை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் வடிகால் வாரியத்திற்குசெலுத்த வேண்டிய நிலுவை கட்டணத்தை செலுத்தினால்மட்டுமே புதிய குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.பேரூராட்சி நிர்வாகத்திற்கு வழங்க வரையறுக்கப்பட்ட குடிநீர் அளவுக்கு அதிகமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தாததால் ஏற்படும் பிரச்னைக்கு குடிநீர் வடிகால் வாரியம் பொறுப்பேற்கமுடியாது.இவ்வாறு, குடிநீர் வடிகால் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 


Page 391 of 506