Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மக்கள்தொகை கணக்கெடுப்பு: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

Print PDF

தினமணி 26.07.2010

மக்கள்தொகை கணக்கெடுப்பு: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

மதுரை, ஜூலை 25: மதுரை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்த பகுதிகளில் மீண்டும் ஆணையர் எஸ்.செபாஸ்டின் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி கடந்த ஜூன் 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து ஜூலை 15 வரையில் 45 தினங்கள் நடைபெற்றது. இந்தப் பணியில் 35 தலைமை ஆசிரியர்கள், 2500 கணக்கீட்டாளர்கள் மற்றும் மேற்பார்வைகளுக்கு முறையான பயிற்சி வகுப்புகள் நடத்திய பின்னரே கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வீடு, வீடாக சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறதா என அறிய மாநகராட்சி ஆணையர் சில குறிப்பிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு பணியை மேற்கொண்டார். அதில் புதூர் மற்றும் ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் உள்ள வீடுகளில் உள்ளவர்களிடம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது வீடுகளில் கணக்கெடுப்பு செய்யப்பட்டு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படாமல் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்குவதற்கு அந்தப் பகுதியில் பணி மேற்கொண்ட கணக்கெடுப்பாளர் மூலம் வழங்குவதற்கு ஏர்பாடுகள் செய்யப்பட்டன.

மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடர்பாக குறைபாடுகள் இருந்தால் பொதுமக்கள் கீழ்க்கண்ட மண்டல உதவி ஆணையர்களை அணுகி தங்களது குறைபாடுகளைத் தெரிவிக்காலம்.

எனவே வடக்கு மண்டலத்தில் உள்ளவர்கள் எஸ்.பி.ராஜகாந்தியிடமும், கிழக்கு மண்டலத்தில் உள்ளவர்கள் யு.அங்கையற்கண்ணியிடமும், மேற்கு மண்டலத்தில் இருக்கிறவர்கள் ஆர்.ஜே..ரவீந்திரனிடமும், தெற்கு மண்டலத்தில் வசித்து வருபவர்கள் அ.தேவாஸிடமும் தொடர்பு கொண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விவரங்களைத் தெரிவித்து பயன் அடையலாம் என தெரிவித்தார்.

ஆய்வின் போது துணை ஆணையர் க.தர்ப்பகராஜ், கல்வி அலுவலர்(பொறுப்பு) வெள்ளைத்தாய், கணக்கெடுப்பு உதவியாளர் ராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

குடியிருப்பு திட்ட வீடுகள் பேரூராட்சிக்கும் நீட்டிக்க தீர்மானம்

Print PDF

தினமணி 26.07.2010

குடியிருப்பு திட்ட வீடுகள் பேரூராட்சிக்கும் நீட்டிக்க தீர்மானம்

களியக்காவிளை,​​ ​ ஜூலை 25:​ இந்திரா மற்றும் கலைஞர் குடியிருப்புத் திட்ட வீடுகள்,​​ ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆகியவற்றை பேரூராட்சிக்கும் நீட்டிப்புச் செய்ய வேண்டும் என களியக்காவிளை பேரூராட்சிக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

​ ​ ​ ​ கூட்டத்துக்கு,​​ பேரூராட்சித் தலைவி எஸ்.​ இந்திரா தலைமை வகித்தார்.​ துணைத் தலைவர் சலாவுதீன் முன்னிலை வகித்தார்.

​ ​ ​ ​ இக் கூட்டத்தில்,​​ 8-ம் வார்டு உறுப்பினர் என்.​ விஜயேந்திரன்,​​ இந்திரா மற்றும் கலைஞர் குடியிருப்புத் திட்ட இலவச வீடுகளும்,​​ ஊரக 100 நாள் வேலை உறுதித் திட்டப் பணிகளும் அனைத்துப் பகுதி ஏழைகளுக்கும் பயன்பெறும் வகையில்,​​ பேரூராட்சிகளுக்கும் நீட்டிப்பு செய்ய வேண்டும்.​ ​ ​ ​ இல்லையேல்,​​ பேரூராட்சிகளை கிராம ஊராட்சியாக மாற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார்.​ இத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

​ ​ ​ தொடர்ந்து,​​ பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடிநீர்க் குழாய்களை நீட்டிப்பு செய்தல்,​​ சாலை மேம்பாடு செய்தல் மற்றும் பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் உள்ள முக்கியமான சாலை சந்திப்புகளில் 2 சோடியம் விளக்குகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

​ ​ ​ கூட்டத்தில்,​​ உறுப்பினர்கள் விஜயானந்தராம்,​​ என்.​ குமார்,​​ ரமா,​​ என்.​ விஜயேந்திரன்,​​ ராயப்பன்,​​ வின்சென்ட்,​​ எம்.எஸ்.ஏ.​ கமால்,​​ தேவராஜ்,​​ ஜெலின் பியூலா,​​ அ.​ ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

சீரான குடிநீர் விநியோகத்திற்கு தென்காசியில் ரூ.19 லட்சத்தில் இரண்டு ஜெனரேட்டர்கள்

Print PDF

தினகரன் 23.07.2010

சீரான குடிநீர் விநியோகத்திற்கு தென்காசியில் ரூ.19 லட்சத்தில் இரண்டு ஜெனரேட்டர்கள்

தென்காசி, ஜூலை 23: தென்காசியில் தாமிரபரணி குடிநீர் சீராக விநியோகம் செய்வதற்காக ரூ.19 லட்சம் செலவில் இரண்டு புதிய ஜெனரேட்டர்களை நேற்று சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் இயக்கி வைத்தார்.

தென்காசி நகராட்சிக்கு கருப்பசாமி பாண்டியன் எம்எல்ஏ, தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ஆண்டு தோறும் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார். இதன் மூலம் வார்டு வாரியாக பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. மின்தடை ஏற்பட்டாலும் தாமிரபரணி குடிநீர் சீராக விநியோகம் செய்வதற்காக தென்காசி மற்றும் மாதா புரம் ஆகிய இடங்களில் தலா ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் செலவில் இரண்டு ஜெனரேட்டர்கள் வாங்கப் பட்டுள்ளன.

இவற்றை நேற்று கருப்ப சாமி பாண்டியன் எம்எல்ஏ இயக்கி வைத்தார். நகர்மன்ற தலைவர் கோமதிநாயகம் தலைமை வகித்தார். ஆணை யாளர் செழியன், நகர்மன்ற துணை தலைவர் இப்ராகிம் முன்னிலை வகித்தனர். பின்னர் கருப்பசாமி பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், "தென்காசி நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற் காக தாமிரபரணி மற்றும் குற்றாலம் குடிநீர் வழங்கப் பட்டு வருகிறது.

இதில் தாமிரபரணி குடிநீர் தென்காசி, ஊர்க்காடு, மாதாபுரம் உள்ளிட்ட நான்கு இடங் களில் பம்பிங் செய்யப்படு கிறது. இதில் ஏதாவது ஒரு உபமின் நிலையத்தில் மின் தடை ஏற்பட்டாலும் குடிநீர் விநியோகம் பாதிக்கும். இதனை தவிர்ப்பதற்காக ஏற்கனவே இரண்டு ஜென ரேட்டர்கள் வாங்கப்பட் டுள்ள நிலையில் தற்போது ரூ.19 லட்சத்தில் மேலும் இரண்டு ஜெனரேட்டர்கள் வாங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அடுத்த கோடை காலம் வரை தென்காசி நகர மக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒருநாள் சீரான இடை வெளியில் தாமிரபரணி தண்ணீர் கிடைக்கும். குற் றாலம் தண்ணீர் தற்போது அதிகமாக உள்ளதால் தினமும் விநியோகம் செய்யப்படுகிறதுஎன்றார்.

கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சிவபத்மநாதன், நகர செயலாளர் ஆயான் நடராஜன், இஸ்மாயில் பாலாமணி, சாதிர், நட ராஜன், கவுன்சிலர்கள் ராமராஜ், முகமது உசேன், நாகூர்மீரான் மற்றும் மோகன்ராஜ், சுப்பிரமணி யன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 


Page 392 of 506