Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நெல்லை மாநகராட்சியில் குடிநீர் கட்டண உயர்வு தற்காலிக நிறுத்தி வைப்பு துணை முதல்வரை சந்திக்க கவுன்சிலர்கள் முடிவு

Print PDF

தினகரன் 23.07.2010

நெல்லை மாநகராட்சியில் குடிநீர் கட்டண உயர்வு தற்காலிக நிறுத்தி வைப்பு துணை முதல்வரை சந்திக்க கவுன்சிலர்கள் முடிவு

நெல்லை, ஜூலை 23: நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் குடிநீர் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக துணை முதல்வரை சந்தித்து முறையிட கவுன்சிலர்கள் முடிவெடுத்துள்ளனர்.

நெல்லை மாநகராட்சியின் அவசர கூட்டம் மேயர் சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் முத்துராமலிங்கம், கமிஷனர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர்கள் சீதாராமன், மைதீன் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

சுதாபரமசிவன்: குடிநீர் கட்டணத்தை நெல்லை மாநகராட்சி ரகசியமாக ரூ.100 ஆக உயர்த்தியுள்ளது. இதுகுறித்து கவுன்சிலர்களின் கருத்துகளை கேட்டிருக்க வேண்டும்.

துரை: ஜனவரி மாதம் நடந்த கூட்டத்தில் 6 மாதம் கழித்து குடிநீர் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்தோம். இப்போது கட்டண உயர்வு கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இனிமேல் தனியாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினால் தான் அதனை மாற்ற முடியும். புதிய குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும் வரை இந்த கட்டண உயர்வை நிறுத்தி வைக்கலாம்.

உமாபதி சிவன்: .பி.யில் மாயாவதி அரசு தண்ணீர் வரியை ரத்து செய்துள்ளது. நெல்லை மாநகராட்சியிலும் அதுபோல் செயல்படுத்த மேயர் முன் வரவேண்டும்.

மேயர்: குடிநீர் கட்டண உயர்வுக்கான தீர்மானம் நெல்லை மாநகராட்சியில் மூன்று முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளதால் இனி நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை. அடுத்த மாதம் நெல்லைக்கு வரும் துணை முதல்வரை சந்தித்து நாம் அனைவரும் முறையிடுவோம். சட்டப்படி என்ன செய்யலாம் என அவரிடமே ஆலோசனை கேட்போம்.

சைபுன்னிஸா: கெஜட்டில் அறிவிக்கும் முன் கவுன்சிலர்களை ஏன் நீங்கள் கலந்து ஆலோசிக்கவில்லை. நாங்கள் முன்பே இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தோம். (தொடர்ந்து பல கவுன்சிலர்களின் எதிர்ப்பு காரணமாக குடிநீர் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது).

முருகன்: மாநகராட்சி பகுதிகளில் கொசுதொல்லை அதிகரித்துள்ளது. சான்றிதழ்களில் பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்தால் 10 மாத காலத்திற்கு இழுத்தடிக்கின்றனர். இவ்வாறு விவாதம் நடந்தது.

சாகும்வரை உண்ணாவிரதம் அதிமுக கவுன்சிலர் முடிவு

மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் பொன்.தங்கராஜ் பேசுகையில், "வீடில்லாதவர்களுக்கு இரவு நேரத்தில் இலவச தங்குமிடங்கள் செய்து கொடுக்க மாநகராட்சி ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக சிந்துபூந்துறை பள்ளியை மாநகராட்சி தேர்வு செய்துள்ளது. வார்டுக்கு சம்பந்தமே இல்லாத புதிய நபர்கள் அங்கு வந்து தங்கினால் வீண் பிரச்னைகள் ஏற்படும். மறு இடம் தேர்வு செய்யாவிட்டால் நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்" என்றார். இதுகுறித்து பின்னர் பேசி முடிவெடுக்கப்படும் என மேயர் தெரிவித்தார்.

 

சென்னைக்கு குடிநீர் சப்ளை ஓய்வு பெற்ற பொறியாளர் குழு மேட்டூர் அணையில் ஆய்வு

Print PDF

தினகரன் 23.07.2010

சென்னைக்கு குடிநீர் சப்ளை ஓய்வு பெற்ற பொறியாளர் குழு மேட்டூர் அணையில் ஆய்வு

மேட்டூர், ஜூலை 23: மேட்டூர் அணையில் இருந்து சென்னைக்கு 15 டி.எம்.சி. தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கான மதிப்பீடு மற்றும் சர்வே பணிகளுக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று மேட்டூர் வந்தனர்.

மேட்டூர் நீர்த்தேக்க பகுதியில் எந்த இடத்தில் நீரேற்றும் நிலையம் அமைத்தால் வறட்சி காலங்களில் கூட தண்ணீர் கொண்டு செல்ல முடியும் என்பது குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. அப்போது, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விசைப்படகில் நீர்த்தேக்க பகுதியில் சுமார் 20 கி.மீ. தொலைவிற்கு சென்று ஆய்வு செய்தனர். அணையில் தற்போது உள்ள நீர் நிலவரம், எவ்வளவு சகதி தேங்கி உள்ளது என்பது குறித்து நீண்ட நேரம் ஆய்வுக்கு பின் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தினர். இதற்கான செலவுத் தொகை குறித்தும் திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. தமிழக அரசின் உத்தரவின்படி, தனியார் நிறுவனம் ஒன்று இந்த ஆய்வினை மேற்கொண்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

மாநகராட்சியின் புதிய கட்டிடம் மழையால் பெரும் பாதிப்பு விசாரணை நடத்த உத்தரவு

Print PDF

தினகரன் 23.07.2010

மாநகராட்சியின் புதிய கட்டிடம் மழையால் பெரும் பாதிப்பு விசாரணை நடத்த உத்தரவு

புதுடெல்லி,ஜூலை 23: மாநகராட்சியின் புதிய அலுவலக கட்டிடம் மழையால் பாதிக்கப்பட்டது. இது பற்றி விசாரணை நடத்த மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

மாநகராட்சிக்கு ரூ.650 கோடி செலவில் 28 மாடி கட்டிடம் கட்டப்பட்டது. கடந்த ஏப்ரல் 22ம் தேதியன்று இந்த கட்டிடத்தை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். மே மாதம் முதல் மாநகராட்சி, இந்த அலுவலகத்தில்தான் செயல்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் டெல்லியில் பலத்த மழை பெய்தது. இதில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.

மாநகராட்சியின் புதிய கட்டிடத்தின் தரை தளத்திலும் தண்ணீர் தேங்கியது. சுவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் மழை நீர் ஒழுகியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாநகராட்சியின் புதிய அலுவலக கட்டிடம் கட்டியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. இது பற்றி சி.பி..விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரியது.

இந்த நிலையில், மாநகராட்சியின் நிலைக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, மாநகராட்சி கட் டிடம் கட்டப்பட்டுள்ளதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, இது பற்றி சி.பி.. விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

பின்னர், நிலைக்குழு தலைவர் யோகேந்தர் சந்தோலியா கூறுகையில்,‘இது பற்றி விசாரணை நடத்தி 3 நாட்களில் அறிக்கை தர மாநகராட்சி தலைமை இன்ஜினியர் ரவிதாசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பணிகளில் முறைகேடு நடந்திருப்பது உண்மையாக இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்றார்.

 


Page 393 of 506