Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சின்னமனூர் அய்யனார்புரத்தில் உரக்கிடங்கு அமைக்கும் பணி நகராட்சித் தலைவர் ஆய்வு

Print PDF

தினகரன் 22.07.2010

சின்னமனூர் அய்யனார்புரத்தில் உரக்கிடங்கு அமைக்கும் பணி நகராட்சித் தலைவர் ஆய்வு

சின்னமனூர், ஜூலை 22: சின்னமனூர் அய்யனார்புரம் பகுதியில் முடங்கி கிடக்கும் உரக்கிடங்கு பணியை நகராட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.

சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. 3வது வார்டு சாமிகுளத்தில் கடந்த 40 ஆண்டுகளாக குப்பை மற்றும் உரக்கிடங்கு உள்ளது. நகராட்சி 27 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் இங்கு தேக்கி வைக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கப்பட்டது. சாமிகுளம் பகுதியில் தற்போது குடியிருப்புகள் அதிகரித்துள்ளதால் குப்பைகளிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது.

இதனால் அங்குள்ள குப்பை மற்றும் உரக்கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டுமென சாமிகுளம் பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதனடிப்படையில் புதிய இடத்தில் உரக்கிடங்கு அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு தீர்மானிக்கப்பட்டது. இப்பணிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் ரூ.26 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. 27வது வார்டு அய்யனார்புரத்தில் புதிய உரக்கிடங்கு அமைக்க நகராட்சி நிர்வாகம் இடத்தை தேர்வு செய்தது. டெண்டர் விடப்பட்டு பணிகள் முடங்கி கிடந்தது. பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டனர்.

இதனையடுத்து அய்யனார்புரத்தில் முடங்கி கிடந்த பணிகளை நகராட்சித் தலைவர் தமிழ்ச்செலவி கூத்தபெருமாள் பார்வையிட்டார். பணியை விரைந்து துவக்க ஒப்பந்தகாரிடம் அறிவுறுத்தினர். குடிநீர் திட்ட மேற்பார்வையாளர் செல்லத்துரை, கவுன்சிலர் சிவராம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் சென்றனர்.

 

அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை துண்டிக்க பேரூராட்சி கூட்டத்தில் முடிவு

Print PDF

தினகரன் 22.07.2010

அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை துண்டிக்க பேரூராட்சி கூட்டத்தில் முடிவு

மஞ்சூர், ஜூலை 22: அனுமதி பெறாமல் உள்ள குடிநீர் இணைப்புகளை துண்டிக்க கீழ் குந்தா பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கீழ்குந்தா பேரூராட்சியிலுள்ள 15 வார்டுகளில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள், அரசு மற்றும் தனியார்அலுவலகங்கள் அமைந்துள்ளது.

இவற்றுக்கு பொது குழாய் மூலம் மட்டுமின்றி தனி இணைப்புகளாகவும் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. தனியார் குடிநீர் இணைப்பு மூலம் பேரூராட்சிக்கு கணிசமான அளவு வருவாய் கிடைத்து வருகிறது. கீழ்குந்தா பேரூரா ட்சி நிர்வாகத்தின் முறை யான அனுமதியை பெறா மல் சிலர் முறைகேடாக குடிநீர் இணைப்புகளை பெற்றுள்ளனர்.

இதனால், பேரூராட்சிக்கு கணிசமான அளவு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. வறட்சி காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு முறை யான குடிநீர் இணைப்புகளுக்கு கூட குடிநீரை வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. முறையற்ற குடிநீர் இணைப்புகளால் வறட்சி காலத்தில் குடிநீர் பற்றாக்குறை மேலும் பன்மடங்காக அதிகரிக்கிறது. அனுமதி பெறாமல் முறைகேடாக உள்ள குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள், மன்ற உறுப்பினர்கள் அடிக்கடி பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கீழ்குந்தா பேரூராட்சி மாதாந்திர மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் ஆஷா தலைமையில் நடந்தது. துணை தலைவர் பாபு, செயல் அலுவலர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர்.அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டித்து குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்று பெரும்பாலான கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

பேரூராட்சி பகுதியில் அனுமதியின்றி முறைகேடாக உள்ள அனைத்து குடிநீர் இணைப்புகளையும் கண்டறிந்து உடனடியாக துண்டிக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை துண்டிக்க பேரூரா ட்சி பணியாளர்களு க்கு உத்தரவிடப்பட்டது.

தொடர்ந்து கூட்டத்தில் கெட்சிகட்டி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் பல்வேறு நோக்கு கட்டிடம், வார்டுகளில் தடுப்பு சுவர், நடைபாதை அமைத்தல், 5வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் நகரில் பொது கழிப்பிடம் அமைத்தல், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை பட்டியலில் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளிப்பு

Print PDF

தினமணி 22.07.2010

துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளிப்பு

கடையநல்லூர், ஜூலை 21: கடையநல்லூர் நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு, நகர்மன்றத் தலைவர் இப்ராஹிம் தலைமை வகித்து, 90 துப்புரவுப் பணியாளர்களுக்கு உபகரணங்களை வழங்கினார்.

இதில் ஆணையர் அப்துல் லத்தீப், சுகாதார அலுவலர் கணேசமூர்த்தி, ஆய்வாளர்கள் கைலாசசுந்தரம், பிச்சையாபாஸ்கர், நகர்மன்ற உறுப்பினர்கள் பாட்ஷா, பாலசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 395 of 506