Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

தூத்துக்குடியில் அதிகாரிகள் அதிரடி மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’

Print PDF

தினகரன் 20.07.2010

தூத்துக்குடியில் அதிகாரிகள் அதிரடி மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்

தூத்துக்குடி, ஜூலை 20: தூத்துக்குடி மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமாக பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றில் பலர் தாங்கள் பயன்படுத்தி வரும் கடைகளுக்கு வாடகையே கொடுக்காமல் இருந்து வந்தனர். கடந்த பத்து மாதங்களாக வாடகை பாக்கி தராத கடைகளுக்கு மாநகராட்சி வருவாய் பிரிவு அலுவலர்கள் நேரில் சென்று எச்சரித்தனர்.

இருப்பினும் சிலர் வாடகை கொடுக்கவில்லை. இதையடுத்து வாடகை தராத 6 கடைகளை நேற்று அதிகாரிகள் சீல் வைத்தனர். இதை கண்டித்து அப்பகுதி வியாபாரிகள் வியாபாரிகள் திடீர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே வியாபாரிகள் பலர் தாங்களாகவே முன்வந்து வாடகை பாக்கியை செலுத்தினர். நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.8 லட்சம் வசூலானது. வாடகை பாக்கியுள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை

Print PDF

தினமணி 20.07.2010

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை

தூத்துக்குடி, ஜூலை 19: தூத்துக்குடியில் பாதாளச் சாக்கடை திட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு பணியைத் தடுத்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: தூத்துக்குடி புல்தோட்டம் பகுதியில் அமைக்கப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தால் பொதுமக்களுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இது தொடர்பாக அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளேன்.

தமிழக அரசின் உயர்நிலை அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தி தான் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நிபுணர்கள் ஆய்வு செய்து சுற்றுச்சூழலுக்கோ, நிலத்தடி நீருக்கோ எந்தவித பாதிப்பும் வராது என தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த திட்டம் உலகவங்கி நிதியுதவியுடன் நடைபெறுவதால், உலகவங்கி அதிகாரிகளும் ஆய்வு செய்த பின்னரே திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டத்தால் பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு வராது என்பதை 100 சதவிகிதம் உறுதியாக கூறமுடியும். நன்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தான் கடலில் விடப்படும். எனவே, கடலில் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றும் பேச்சுக்கே இடமில்லை.

அரசுப் பணியை நடைபெறவிடாமல் தடுத்தாலோ, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தாலோ அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.

 

6 கடைகளுக்கு நேற்று சீல் நடவடிக்கை தொடரும் என கமிஷனர் அதிரடி

Print PDF

தினமலர் 20.07.2010

6 கடைகளுக்கு நேற்று சீல் நடவடிக்கை தொடரும் என கமிஷனர் அதிரடி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சியில் வாடகை செலுத்தாத மாநகராட்சி 6 கடைகளுக்கு நேற்று சீல் வைக்கப்பட்ட து. தொடர்ந்து இந்த அதிரடி தொடரும் என்று கமிஷனர் குபேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பாக்கிகளை வசூல் செய்யும் நடவடிக்கையில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. மாநகராட்சி புதிய கட்டடம், பக்கிள் ஓடை சீரமைப்பு, பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளுக்கு மாநகராட்சியின் பங்கு தொகையை செலுத்த வேண்டியுள்ளது. பல கோடி ரூபாய் வரி பாக்கி இருக்கும் போது மாநகராட்சியால் அதனை செலுத்த முடியாமல் திண்டாட்டம் ஏற்பட்டது.

இதனால் வரிகளை வசூல் செய்ய மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். சொத்துவரி செலுத்தாத வீடுகளில் ஜப்தி நடவடிக் கை எடுக்கப்படும் என்றும், குடிநீர் கட்டணம் செ லுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை விட ப்பட்டது. இதனை தொடர் ந்து பல லட்ச ரூபாய் வரி பாக்கி வசூல் ஆகி வருகிறது. இந் நிலையில் மாநகராட்சி கடைகளிலும் வியாபாரிகள் அதிகமாக மாநகராட்சிக்கு வாடகை பாக்கியை செலுத்தாமல் வைத்துள்ளனர். ஒவ்வொரு கடையிலும் 8 மாதம், பத்து மாதம் என்று பாக்கி வைத்துள்ளனர். மாநகராட்சியில் இரு ந்து பலமுறை வரி பாக்கிø ய செலுத்துமாறு கேட்டும் வியாபாரிகள் வாடகை பாக்கியை செலுத்தாமல் இருந் து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கடைகளை பூட்டி சீல் வைக்க மாநகராட்சி முடிவு செய்தது. மாநகராட்சி வருவாய் பிரிவு ஊழியர்கள் நேற்று புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் வாடகைப் பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைத்தனர். புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள கடை வியாபாரிகள் ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகளை பூட்டினர். இருப்பினும் மாநகராட்சியினர் வாடகை பாக்கியுள்ளவர்களின் கடைகளை பூட்டு போடும் பணியில் தீ விரம் காட்டினர்.

இது குறித்து கமிஷனர் குபேந்திரன் கூறியதாவது;தூத்துக்குடி புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கும், கடைகள் கட்டுவததற்கும் சென்னை நிதி நிறுவனத்தில் இருந்து கடன் பெற்று கட்டப்பட்டுள்ளது. அந்த கடனை மாநகராட்சி செலு த்த வேண்டும். ஆனால் கø டகளில் உள்ளவர்கள் வாடகையை முறையாக செலுத்தாததால் நிதி நிறுவனத்தினர் வட்டி, அபராத வட்டி போட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த கடனை திரும்ப செலுத்த சொல்லி சென்னை நிதி நிறுவத்தில் இருந்து மாநகராட்சிக்கு தொடர்ந்து நெருக்கடி வருகிறது.இதனால் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளை மாநகராட்சி சார்பில் பூட்டு போட முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கை துவக்கப்பட்டுள் ளது. நேற்று 6 கடைகளில் பூட்டு போடப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் 8 லட்ச ரூபாய் வாடகை பணம் வசூல் ஆகியுள்ளது.தொடர்ந்து இது போன்ற நடவடிக்கை தொ டரும். இதனால் வியாபாரிகள் முறையாக வாடகை பாக்கியை செலுத்தி விட வேண்டும். இவ்வாறு குபேந்திரன் தெரிவித்தார். .

 


Page 397 of 506