Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மின் மோட்டார் மூலம் குடிநீர்எடுப்பவர்கள்மீதுநடவடிக்கை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை

Print PDF

தினகரன் 30.06.2010

மின் மோட்டார் மூலம் குடிநீர்எடுப்பவர்கள்மீதுநடவடிக்கை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை

சின்னசேலம், ஜூன் 30: சின்னசேலம் பேரூராட்சி பகுதியில் மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்னசேலம் பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது. இதை சுற்றி ஆறுகள், ஓடைகள், குளங்கள் எதுவும் கிடையாது. மழைகாலத்தில் கூட கிணறுகளிலும், ஆழ்துளை குழாய் கிணற்றிலும் போதிய நீர் கிடையாது. இதனால் முதல்வரின் தீவிர முயற்சியால் தியாகதுருகம், கள்ளக் குறிச்சி, சின்னசேலம் உள்ளிட்ட 92 வழியோர கிராமங்களுக்கு ரிஷிவந்தியம் பெண்ணையாற்று கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது வறட்சி காலம் என்பதால் குளிக்க, குடிக்க, துணி துவைக்க கூட அனைத்து தேவைகளுக்கும் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் சின்னசேலம் பேரூராட்சி மூலம் வழங்கும் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பல தனி நபர்கள் இந்த குடிநீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சி எடுக்கின்றனர். இதனால் மேடான பகுதிகள் மற்றும் 6வது வார்டு உள்ளிட்ட சில இடங்களில் பேரூராட்சி மூலம் வழங்கும் குடிநீர் கிடைப்பதில்லை.

இந்த பேரூராட்சிக்கு செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் இல்லாத காரணத்தால் நிர்வாகத்தில் தொய்வு ஏற்படுகிறது. வடக்கநந்தல் பேரூராட்சி கள்ளக்குறிச்சி நகராட்சியிலும் மின்மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சி எடுக்கின்றனர்.

எனவே சின்னசேலம், வடக்கநந்தல், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மின் மோட்டார் பயன்படுத்தி குடிநீர் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அந்தந்த தலைவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

 

மேயர் நடராஜ் தகவல் விளம்பர பலகைகளை முறைப்படுத்த சட்டம்

Print PDF

தினகரன் 30.06.2010

மேயர் நடராஜ் தகவல் விளம்பர பலகைகளை முறைப்படுத்த சட்டம்

பெங்களூர், ஜூன் 30:மாநகரில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் அகற்றுவதுடன், விளம்பர பலகை வைப்பது குறித்து புதிய சட்டம் கொண்டுவர விரைவில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று மேயர் எஸ்.கே.நடராஜ் தெரிவித்தார்.

பெருநகர் மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் தலைமையில் நேற்று நடந்தது. இதில் மாநகரில் ஆங்காங்கே வைத்துள்ள விளம்பரம் பலகை குறித்து எதிர்க்கட்சி தலைவர் எம்.நாகராஜ் பேசும் போது,

மாநகரில் உள்ள 8 மண்டலங்களிலும் விளம்பர பலகைகள் நிறைந்துள்ளது. இதில் அனுமதி பெற்றது எவ்வளவு, அனுமதி பெறாமல் உள்ளது எவ்வளவு என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்றார். அவருக்கு கட்சி பேதம் மறந்து எல்லா உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்து மேயர் நடராஜ் பேசியதாவது:

மாநகரில் ஆயிரத்து 667 விளம்பர பலகைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 685 விளம்பரங்கள் தொடர்பான பணம் மாநகராட்சிக்கு வரவில்லை. சில அதிகாரிகள் விளம்பர நிறுவனங்களுடன் கை கோர்த்து மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு செய்துள்ளனர்.

மாநகரில் அனுமதி பெறாமல் வைத்துள்ள விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற தீவிர நடவடிக்கை மேற்கொள்ப்படும்.

மாநகரில் வைக்கப்படும் விளம்பர பலகைகள் மூலம் மாநகராட்சிக்கு ரூ.18 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால் விளம்பர ஏஜெண்சிகளுக்கு ரூ.100 கோடி வரை வருவாய் கிடைக்கிறது.

மாநகராட்சிக்கு வரும் வருவாய் கை நழுவி போவதை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் அரசியலில் பலம் படைத்த சிலர் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை எடுக்க விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எவ்வளவு பலம் படைத்த அரசியல்வாதிகள் குறுக்கிட்டாலும், விளம்பர பலகை அகற்றும் பணி தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள் ளேன்.

மாநகராட்சிக்கு விளம்பரம் மூலம் வருவாய் ஈட்டுவது அவசியமாகும். இதற்கான அனுமதி கொடுப்பதில் சில நிபந்தனைகள் விதிக்க வேண்டும்.

அதற்காக சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டியது அவசியமாகும். இதை கருத்தில் கொண்டு புதிய சட்டம் மற்றும் கொள்கை வகுப்பது தொடர்பாக ஆலோசிக்க விரைவில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன். இவ்வாறு எஸ்.கே.நடராஜ் தெரிவித்தார்.

 

அனுமதி பெறாத வீட்டு மனைகளை வாங்காதீர்: உள்ளாட்சி அமைப்புகள் திடீர் அறிவிப்பு

Print PDF

தினமலர் 30.06.2010

அனுமதி பெறாத வீட்டு மனைகளை வாங்காதீர்: உள்ளாட்சி அமைப்புகள் திடீர் அறிவிப்பு

கடலூர்: அனுமதி பெறாத வீட்டு மனைகளை வாங்க வேண்டாம் என உள் ளாட்சி அமைப்புகள் திடீரென அறிவித்து வருவதால், ஏற்கனவே மனைகளை வாங்கியவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.பிள்ளைகளின் படிப்பு, வேலை மற்றும் வியாபாரம் தொடர்பாக கிராமப் பகுதி மக்கள் நகரப் பகுதிகளுக்கு இடம் பெயர்வது கடலூர் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், புவனகிரி, சிதம்பரம் போன்ற நகரப் பகுதிகளில் வீடுகளின் தேவை அதிகரித்து வருவதால் இப்பகுதிகளில் ரியல் எஸ்டேட் வியாபாரம் படு பிசியாகி உள்ளது.கிராமப் பகுதிகளில் வசிப்பவர்கள் கூட தங்க ளது எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு நகரப் பகுதியில் எதற்கும் ஒரு வீடு இருக்க வேண்டும் என போட்டி போட்டுக் கொண்டு வருவதாலும், அதற்கேற்ப வீட்டு மனைகள் இல்லாததால், இருக் கின்ற மனைகளின் விலை கடந்த நான்காண்டுகளில் பல மடங்கு உயர்ந் துள்ளது. வீட்டு மனைகளின் தேவை அதிகரித்துள்ளதை அறிந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் நகரப் பகுதி மற்றும் நகரத்தை ஒட்டிய ஊராட்சி பகுதிகளில் உள்ள விளை நிலங் களை வாங்கி மனைப் பிரிவுகளாக மாற்றி இரட்டிப்பு விலைக்கு விற்று வருகின்றனர்.கடந்த காலங்களில் புதிய நகர்கள் உருவாக்க வேண்டும் எனில் அந்தந்த பகுதிகளில் உள்ள உள் ளாட்சி அமைப்புகளின் அனுமதி மற்றும் "டி.டி.பி.,' அனுமதி பெற் றால்தான் பத்திரப் பதிவு செய்ய முடியும்.

இந்த அனுமதி பெற புதிய நகர் களை உருவாக்குபவர்கள் அப்பகுதிக்கு அடிப்படை தேவைகளான 23 அடி அகல சாலை, தெருவிளக்கு, குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.மேலும், விளையாட்டுத் திடல், பூங்கா அமைக்கவும், பொது உபயோகத்திற்கு தனியாக இடம் ஒதுக்கி உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். அப் போதுதான் அந்த பகுதிகளுக்கு தேவையான அடிப் படை வசதிகளை அப்பகுதி உள்ளாட்சி அமைப்புகள் செய்து தரும்.ஆனால் தற்போது தங்கள் பெயரில் உள்ள இடத்தை வேறு ஒருவருக்கு விற்க என்..சி., சான்றிதழ் தேவையில்லை என்ற சட்ட விதி இருப்பதால், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறாமலேயே நிலங்களை மனைகளாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு மாவட் டத்தில் பல்வேறு பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட புதிய நகர்கள் உருவாக் கப்பட்டுள்ளன.

இதில் மனைகளை வாங்கிய பலர் வீடுகளையும் கட்டி வசித்து வருகின்றனர்.இந்நிலையில் விருத்தாசலம், நெல்லிக்குப்பம் மற்றும் பண்ருட்டி நகராட்சி நிர்வாகங்கள் உள் ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறாத வீட்டு மனைகளை வாங்காதீர் என அறிவித்துள்ளனர். இது தொடர்பாக முக்கிய இடங்களில் அறிவிப்பு பலகைகளை வைத் துள்ளது.அதில், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறாத மனைகளை வாங்கினால் அந்த இடங்களில் கட்டடங்கள் கட்ட நகராட்சி நிர்வாகம் அனுமதிக்காது. அந்த பகுதிகளுக்கு நகராட்சி சார்பில் எந்தவித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படமாட்டாது. மேலும், தமிழ்நாடு நகராட்சிகள் சட்டம் 1920 மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டம் 1071 ன் படியும் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறாத மனைகளை வாங்கியவர்களும், அதில் வீடு கட்டி வசித்து வருபவர்கள் நகராட்சி நிர்வாகங்களின் திடீர் அறிவிப்பை கண்டு கலக்கம் அடைந்துள்ளனர்.

 


Page 398 of 506