Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

புதிய சென்ட்ரல் மார்க்கெட்டில் கடை ஒதுக்க குலுக்கல் எப்போது

Print PDF

தினமலர் 29.06.2010

புதிய சென்ட்ரல் மார்க்கெட்டில் கடை ஒதுக்க குலுக்கல் எப்போது

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில், கடைகளை ஒதுக்க அடுத்த மாதம் 2ம் தேதி குலுக்கல் நடக்கிறது.புதிய மார்க்கெட் ஏற்கனவே திறக்கப்பட்டாலும் இன்னமும், பழைய மார்க்கெட்டில் இருந்து கடைகள் இங்கு மாறவில்லை. புதிய மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் டெபாசிட் செலுத்தாததே காரணமாக இருந்தது. தற்போது டெபாசிட் செலுத்தத் துவங்கி உள்ளனர்.பழைய மார்க்கெட்டில் மொத்தம் உள்ள 524 கடைகளில் 470 பேர் டெபாசிட் செலுத்தி, "ஷிப்டிங்' முறையில் இடம் மாறுகின்றனர். மீதி கடைகளுக்கு ஏலம் ஏற்கனவே முடிந்து விட்டது. "ஷிப்டிங்' முறையில் இடம் மாறுவோருக்கு, ஜூலை 2ம் தேதி குலுக்கல் நடத்தி, கடைகள் ஒதுக்கப்படும். தக்காளி, வாழை இலை, நாட்டுக் காய்கறி, இங்கிலீஷ் காய்கறி என தனித்தனியாக குலுக்கல் நடத்தப்படும். எண்கள் எழுதப்பட்ட, சீட்டுகளை வியாபாரிகளே எடுத்து, எந்த எண் வருகிறதோ, அக்கடையை வைத்துக் கொள்ள வேண்டும்.புதிய மார்க்கெட்டில் 1100 தரைக்கடைகளுக்கு இடம் ஒதுக்கப்படும். இக்கடைகளுக்கான ஏலம் ஜூலை 1ம் தேதி நடத்தப்படும். பெரிய நிரந்தர கடைகளுக்கு 60 ஆயிரம் ரூபாய், சிறு கடைகளுக்கு 35 ஆயிரம் ரூபாய் டெபாசிட் பெறப்படுகிறது. தரை கடைகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் பெறப்படும். டெபாசிட் மூலம் மட்டும் மாநகராட்சிக்கு 10 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது.இப்பணிகள் முடிந்த பிறகு, புதிய மார்க்கெட் முழுவீச்சில் செயல்படத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நீல்மெட்டல் பனால்காவிடம் இருந்து மேலும் 4 வார்டு பணிகள் பறிப்பு

Print PDF

தினமலர் 29.06.2010

நீல்மெட்டல் பனால்காவிடம் இருந்து மேலும் 4 வார்டு பணிகள் பறிப்பு

சென்னை நகரில் துப்புரவு பணி செய்யும், நீல் மெட்டல் பனால்கா நிறுவனத்திடம் இருந்து மேலும் நான்கு வார்டு பணிகளை திரும்பப் பெற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் புளியந்தோப்பு, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய நான்கு மண்டலங்களில் நீல் மெட்டல் பனால்கா நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணி செய்கிறது. இந்த நிறுவனம் துப்புரவுப் பணியை சரிவர செய்யவில்லை என புகார்கள் எழுந்தன.மாநகராட்சி நிர்வாகம் மண்டல அளவில் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தும் நீல் மெட்டல் பனால்கா நிறுவனம் சரிவர துப்புரவுப் பணி செய்யவில்லை.அதன் அடிப்படையில் கடந்த மே மாதம் நடந்த மன்றக் கூட்டத்தில் நீல் மெட்டல் பனால்கா நிறுவனம் துப்புரவு பணி செய்யும் கோடம்பாக்கம் மண்டலத்தில் 128 மற்றும் 129 ஆகிய இரண்டு வார்டுகளில் துப்புரவு பணியையும், மற்ற மண்டலங்களில் முக்கிய சாலைகளின் துப்புரவு பணியையும் மாநகராட்சி ஏற்றுக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.அதன்படி முதல்கட்டமாக இருவாரங்களுக்கு முன் 128வது வார்டில் துப்புரவுப் பணியை மேயர் சுப்ரமணியன் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கினர். அடுத்த வாரம் 129 வார்டின் துப்புரவுப் பணியை மாநகராட்சி ஏற்க உள்ளது. பல வகைகளில் எச்சரிக்கை விடுத்தும் நீல் மெட்டல் பனால்கா நிறுவனம் துப்புரவுப் பணியை மேம்படுத்தாததால் கோடம்பாக்கம் மண்டலத்தில் 117, 118, 120 மற்றும் 121 ஆகிய நான்கு வார்டுகளின் துப்புரவுப் பணியை விரைவில் மாநகராட்சி ஏற்க உள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் நான்கு மண்டலங்களின் துப்புரவுப் பணியை ஏற்றுக் கொள்ள மாநகராட்சி திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நீல் மெட்டல் பனால்கா நிறுவனத்திடம் இருந்து திரும்பப் பெறும் மண்டலங்களில், மாநகராட்சி துப்புரவு பணி செய்ய வசதியாக தேவைப்படும் துப்புரவு பணியாளர்களை நியமிக்கும் பணியை மாநகராட்சி தொடங்கி உள்ளது.ஏற்கனவே 800 துப்புரவு தொழிலாளர்களை தேர்வு செய்ய கடந்த 10 நாட்களுக்கு முன் நேர்முகத் தேர்வு நடத்தியது. அது போல் மேலும் 800 தொழிலாளர்களை நியமிக்க அடுத்த வாரம் நேர்முகத் தேர்வுக்கு அழைத்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

 

சாயர்புரம் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பிரகாஷ் ஆய்வு

Print PDF

தினகரன் 28.06.2010

சாயர்புரம் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பிரகாஷ் ஆய்வு

ஏரல், ஜூன் 28: சாயர்புரம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பிரகாஷ் ஆய்வு செய்தார்.

சாயர்புரம் பேரூராட்சியில் நபார்டு திட்டம், எம்பி மற்றும் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு திட்டம், 12வது நிதிக்குழு திட்டம், கலெக்டர் விருப்புரிமை நிதி திட்டம் ஆகியவற்றின் கீழ் தார்சாலை, சிமென்ட் சாலை, பயணிகள் நிழற்குடை அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை ஷெட் அமைத்தல் போன்ற திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை கலெக்டர் பிரகாஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் சாயர்புரம் புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தையும் அவர் பார்வையிட்டார்.

பேரூராட்சி தலைவர் பொன்சேகர், நிர்வாக அதிகாரி தனசிங், உதவி செயற்பொறியாளர் மனோகரன், உதவி பொறியாளர் மணி, சாயர்புரம் ஜெபர்சன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

 


Page 400 of 506