Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ஹுமாயூன் சமாதி வளாகத்தில் ஓட்டல், கடைகளுக்கு மாநகராட்சி சீல்

Print PDF

தினகரன் 21.06.2010

ஹுமாயூன் சமாதி வளாகத்தில் ஓட்டல், கடைகளுக்கு மாநகராட்சி சீல்

புதுடெல்லி, ஜூன் 21: ஹுமாயூன் சமாதி வளாகத்தில் ஒரு ஓட்டல், புரானா கிலா ஏரிக்கரையோரம் ஒரு ஓட்டல் மற்றும் கடைகளுக்கு மாநகராட்சி, தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சீல் வைத்தனர்.

டெல்லியில் அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்வதற்காக கண்காணிப்புக்குழு ஒன்றை அண்மையில் உச்சநீதிமன்றம் நியமித்தது.

அக்குழுவினர் ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில், செங்கோட்டை வளாகத்தில் அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருந்த ரெஸ்டாரெண்டுகளுக்கு கடந்த 18ம்தேதி சீல் வைக்கப்பட்டது.

கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், மாநகராட்சி மற்றும் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் அந்நடவடிக்கையை மேற்கொண்டனர். மறுநாளான நேற்று முன்தினம் மிருகக்காட்சி சாலையின் முன்புறம் அங்கீகாரம் இன்றி அமைக்கப்பட்டிருந்த ஜூஸ் கடைக்கு சீல் வைத்தனர். புரானா கிலா ஏரியின் கரையோரத்தில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டிருந்த ஒரு ஓட்டலுக்கும், கூரை வேயப்பட்ட குடிசையில் இயங்கி வந்த கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.

மேலும், ஹுமாயூன் சமாதி அமைந்துள்ள வளாகத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள், மாநகராட்சி மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் சீல்வைத்தனர். சமாதியை அடுத்து, ஓட்டல் ஓபராய் எதிரில் அமைக்கப்பட்டிருந்த 2 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

 

நகராட்சி இடங்களை பொதுமக்கள் வாங்கக் கூடாது: ஆணையர்

Print PDF

தினமணி 21.06.2010

நகராட்சி இடங்களை பொதுமக்கள் வாங்கக் கூடாது: ஆணையர்

போடி, ஜூன் 20: நகராட்சிக்குச் சொந்தமான இடங்களை பிளாட் போட்டு விற்பனை செய்தால் பொதுமக்கள் வாங்கக் கூடாது என போடி நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

போடி நகரில் பல இடங்கள் பிளாட் போட்டு விற்பனை செய்யப்படுகிறது. மனையிடங்கள் பிளாட்டுகளாகப் பிரித்து விற்கும்போது பூங்கா, விளையாட்டு மைதானம் போன்றவை அமைக்க இடம் ஒதுக்கி அவற்றை நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்.

சிலர் அவ்வாறு அனுமதி பெற்றுவிட்டு பூங்கா, விளையாட்டு மைதானம் ஆகியவற்றிற்கு ஒதுக்கிய இடங்களையும் விற்பனை செய்து விடுகின்றனர். இதேபோல் பொது உபயோக இடங்களையும் சிலர் பிளாட் போட்டு விற்க முயன்று வருகின்றனர். பொதுமக்களில் சிலர் இதை வாங்கி ஏமாற்றம் அடைகின்றனர்.

இதுகுறித்து போடி நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

நகராட்சிக்குச் சொந்தமான பூங்கா இடங்கள், பொது உபயோக இடங்கள், சிறுவர் விளையாட்டு மைதானம், சாலைகள், மயானங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் வாங்கவோ, ஆக்கிரமிப்பு செய்யவோ கூடாது. மேலும் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள மயான இடத்தை தற்போது மனைப்பிரிவாக பிரிக்க சிலர் முயற்சி செய்வதாகத் தெரிகிறது.

மயான இடத்தையோ, நகராட்சி எல்லைக்குள் போடப்படும் அனுமதியற்ற மனைப்பிரிவுகளையோ பொதுமக்கள் வாங்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அனுமதியற்ற மனைப்பிரிவு மனையிடங்களுக்கு நகராட்சி மூலம் எவ்வித அடிப்படை வசதியும் செய்து தர இயலாது, மனையிடங்களை வாங்குபவர்கள் நேரடியாக நகராட்சி அலுவலகத்தை அணுகி விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

 

நெல்லையில் ஸ்வீட் குடோனுக்கு சீல்

Print PDF

தினகரன் 18.06.2010

நெல்லையில் ஸ்வீட் குடோனுக்கு சீல்

நெல்லை, ஜூன் 18: நெல்லை கைலாசபுரம் நடுத்தெருவில் ஒரு ஸ்வீட் ஸ்டாலுக்கான கேக் மற்றும் ரொட்டி, தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வரு கிறது. இங்கிருந்து வெளியாகும் அதிகளவிலான புகையினால் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களுக்கு சுகாதார கேடு, சுவாச கோளாறு ஏற்பட்டு வருவ தாக மாநகராட்சிக்கு புகார் கள் வந்தன. கமிஷனர் சுப்பையன் உத்தரவின் பேரில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அப்பகுதியில் நேரடி ஆய்வு நடத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு சுகா தார சீர்கேட்டை விளைவிக் கும் வகையில் அக் குடோன் இருப்பதாக குழு அறிக்கையில் தெரிவித்தது. மாநகராட்சி அதிகாரிகள், அதன் உரிமையாளரை 3 முறை விசாரணைக்கு வரு மாறு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் சம்பந்தப்பட்ட உரிமையாளர் நேரில் வரவில்லை.

எனவே மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் அக்குடோனை இழுத்து மூட முடிவு செய்தனர். நேற்று தச்சை மண்டல உதவி கமிஷனர் சுல்தானா தலைமையில், உதவி செயற்பொறியாளர் சாமுவேல் செல்வராஜ், உணவு ஆய் வாளர் சங்கரலிங்கம், பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் ரத்னகுமார், பாலமுருகன், பாலபபிதா ஆகியோர் அடங்கிய குழுவினர் கைலாசபுரத்திற்கு சென்றனர். மாநகராட்சி நோட்டீசை அளித்து அக்குடோனுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.

சுகாதார அதிகாரிகள் அதிரடி

நெல்லை கைலாசபுரத்தில் சுகாதார சீர்கேடுடன் செயல்பட்ட ஸ்வீட் குடோனுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 


Page 403 of 506