Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வரி கட்டாதவர்களின் சொத்துக்கள் சீல் வைக்கப்படும்

Print PDF

தினகரன் 14.06.2010

வரி கட்டாதவர்களின் சொத்துக்கள் சீல் வைக்கப்படும்

நாக்பூர், ஜூன் 14: நாக்பூரில் 15 நாட்களுக்குள் சொத்து வரி கட்டவில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று மாநகராட்சி கமிஷனர் எச்சரித்துள் ளார்.

நாக்பூர் மாநகராட்சியின் புதிய கமிஷனர் சஞ்சய் ஜெய்ஸ்வால் இது தொடர் பாக அளித்த பேட்டியில் கூறியதாவது; நாக்பூரில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஏராளமானோர் தங்களது சொத்துக்களை பதிவு செய்துகொள்ளாமல் இருக் கின்றனர். உடனே தேவை யான ஆவணங்களை தாக்கல் செய்து சொத்துக்களை பொதுமக்கள் பதிவு செய்து கொள்ளவேண்டும். அவ்வாறு பதிவு செய்து கொள்ள வில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.

அதேபோல் ஏற்கனவே சொத்துக்களை பதிவுசெய்த வர்கள் 15 நாட்களுக்குள் தங்களது சொத்து வரியை செலுத்தவில்லை என்றால் சொத்துக்கள் சீல் வைக்கப் படும் என்றும் தெரிவித்தார்.

 

மயிலாப்பூரில் உள்ளது போல் முக்கிய சாலையில் காரை நிறுத்த 60 தானியங்கி டோக்கன் இயந்திரம் ? வி.சி.மணி

Print PDF

தினகரன் 11.06.2010

மயிலாப்பூரில் உள்ளது போல் முக்கிய சாலையில் காரை நிறுத்த 60 தானியங்கி டோக்கன் இயந்திரம் ? வி.சி.மணி

சென்னை, ஜூன் 11: மயிலாப்பூர், பாண்டிபஜார், தரமணியில் உள்ளதுபோல், முக்கிய சாலையில் கார் நிறுத்துபவர்களிடம் கட்டணம் வசூலிக்க, 60 தானியங்கி டோக்கன் இயந்திரம் வைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தடுக்கவும், மாநகராட்சி வருவாயை பெருக்கவும் கார் பார்க்கிங் செய்வதில் திருத்தம் செய்யப்பட்டது. சோதனை முறையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், பாண்டிபஜார் நாகேஷ் தியேட்டர், தரமணி சிஎஸ்ஐஆர் சாலை ஆகிய மூன்று இடங்களில் பார்க்கிங் டோக்கன் வழங்க தானியங்கி இயந்திரம் வைக்கப்பட்டது. இந்த இடங்களில் மாநகராட்சி மற்றும் தனியார் இணைந்து 17 இயந்திரங்களை வைத்துள்ளனர்.

இங்கு கார் பார்க்கிங் செய்ய ஒரு மணி நேரத்துக்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.15 செலுத்தி 3 மணி நேரம் மட்டுமே ஒருவர் கார் பார்க்கிங் செய்ய முடியும். இயந்திரத்தில் 5 ரூபாய் நாணயத்தை போட்டு டோக்கன் எடுத்துக் கொள்ளலாம்.

இதை அங்குள்ள தனியார் கம்பெனி ஊழியர் கண்காணிப்பார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், மாநகராட்சிக்கு கூடுதல் வருவாயும் கிடைத்துள்ளது.

இதையடுத்து சென்னையில் மாநகராட்சி மூலம் கார் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும் 94 இடங்களிலும் படிப்படியாக தானியங்கி டோக்கன் இயந்திரம் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக அண்ணாநகர் 2வது, 3வது அவென்யூ, ரவுண்டானா, சாந்தி காலனி, புரசைவாக்கம் டேங்க், அண்ணாசாலை அருகில் உள்ள ஜெனரல் பீட்டர்ஸ் சாலை, ஒயிட்ஸ் சாலை, பாண்டிபஜார், அடையார் காந்திநகர் ஆகிய 9 இடங்களில் 60 தானியங்கி இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

வசூல் தொகையை குறைக்க முடியாது

தானியங்கி டோக்கன் வழங்கப்படாத இடங்களில் ரசீது மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு, அதிக நேரம் காரை நிறுத்தி விட்டு குறைந்த நேரம் விட்டுச் சென்றேன் என்று வாக்குவாதம் செய்ய முடியும். தானியங்கி டோக்கன் வழங்கும் இடங்களில் இப்படி ஏமாற்ற முடியாது. துல்லியமான நேரம், நாள், கார் நம்பர் போன்ற தகவல்கள் துண்டு சீட்டில் இயந்திரம் மூலம் அச்சடிக்கப்படுகிறது. ஒரு மாதத்தில் எவ்வளவு வசூலானது என்பது இயந்திரத்தில் உள்ள சாப்ட்வேர் மூலம் பதிவு செய்யப்படுகிறது. இதனால் அதிக வசூல் செய்து விட்டு குறைவாகத்தான் வசூலானது என்று பொய் சொல்ல முடியாது. கார் பார்க்கிங் கட்டணம் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் வருவாய் கிடைக்கிறது.

 

கமிஷனருக்கு மேயர் கடிதம் மாநகராட்சி காவல் பணிக்கு 10 போலீசார் நியமனம்

Print PDF

தினகரன் 11.06.2010

கமிஷனருக்கு மேயர் கடிதம் மாநகராட்சி காவல் பணிக்கு 10 போலீசார் நியமனம்

பெங்களூர், ஜூன் 11:பெங்களூர் மாநகராட்சியில் காவல் பணிக்காக 10 போலீசாரை நியமிக்குமாறு போலீஸ் கமிஷனர் சங்கர்பிதரிக்கு மேயர் எஸ்.கே.நடராஜ் கடிதம் எழுதியுள்ளார்.

புதிய பெங்களூர் மாநகராட்சி பதவியேற்றபிறகு, கடந்த இரண்டுமாதங்களாக நடந்த மன்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவையை ஒத்திவைக்க நேர்ந்தது. கடந்த கூட்டத்தில் மேயர் மாடத்திற்கு அருகே சென்று எதிர்க்கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்தியதால், அவை அமளிக்காடாக காட்சியளித்தது. இதற்கு முடிவுக்கட்ட தீர்மானித்துள்ள மேயர் எஸ்.கே.நடராஜ், மன்றத்தை கட்டுப்பாட்டோடு நடத்துவதற்கு 10 அவை காவலர்களை நியமிக்குமாறு பெங்களூர் போலீஸ் கமிஷனர் சங்கர்பிதரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து மேயர் எஸ்.கே.நடராஜ் கூறியதாவது: அவையை கட்டுப்பாடோடு நடத்தவிரும்புவதால், அவை காவலர்களின் உதவியை கேட்டுள்ளோம். முதல்முறையாக கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவுன்சிலர்கள் பலருக்கு மாதகூட்டத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பது தெரியவில்லை. நியமன உறுப்பினர்களையும் சேர்த்து முன்னர் 110 பேர் இருந்தனர். இப்போது இது இரண்டுமடங்காகியுள்ளது.

மன்றத்தில் காவலர்களின் பணி, சட்டப்பேரவையை போன்றதாகவே அமையும். அவமரியாதையாக நடந்து கொண்டால், கவுன்சிலர்கள் அவையில் அப்புறப்படுத்துவார்கள். நடைமுறைவிதிகள் குறித்து போலீசாருடன் விவாதித்துவருகிறோம். அவை காவலர்களுக்கு மாநில அரசு சம்பளம் அளித்துவருகிறது. மன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு மாநகராட்சி சார்பில் சம்பளம் கொடுப்பதா? என்பது பற்றி ஆராய்வோம். மன்ற கூட்டத்தில் அவைகாவலர்களை நியமிக்க கர்நாடக முனிசிபல் சட்டம், 1976ல் இடமுள்ளது. சென்னை, மும்பை, டெல்லி மாநகராட்சியில் இருந்தபோதும், பெங்களூர் மாநகராட்சியில் அவை காவலர்களை வைத்திருக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 


Page 407 of 506