Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வெளியில் இருக்கும் தடுப்பு குறித்து தாஜ், ஒபராய் ஓட்டலுக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ்

Print PDF

தினகரன் 09.06.2010

வெளியில் இருக்கும் தடுப்பு குறித்து தாஜ், ஒபராய் ஓட்டலுக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ்

மும்பை, ஜூன் 9: தீவிர வாதிகளின் தாக்கு தலுக்கு இலக்கான தாஜ் மற்றும் ஒபேராய் ஓட்டலுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு தொடர்பாக இரு ஓட்டல்களுக்கும் மாந கராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

மும்பையில் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தி யதில் தாஜ்மகால் மற்றும் ஒபேராய் ஓட்டல்கள் மிகவும் கடுமையாக சேதம் அடைந்தன. இந்த தாக்குதலை தொடர்ந்து ஓட்டலுக்கு அருகில் வாகன நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு காரணங்களையொட்டியும் ஓட்டல் நிர்வாகம் தடுப் புகளை அமைத்து இருக் கிறது.

இந்த தடுப்புகள் ஒரு ஆண்டுக்கும் மேலாக இருப்பதால் போக்கு வரத் துக்கு இடையூராக இருந்து வருகிறது. இதையடுத்து இது தொடர் பாக பொதுமக்கள் அளித்த புகாரினை தொடர்ந்து அவற்றை அகற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக இரு ஓட்டல்களுக்கும் மாநகராட்சிநிர்வாகம் நோட் டீஸ் அனுப்பி இருக்கிறது.

இது தொடர்பாக மாநகராட்சி கூடுதல் கமிஷனர் ஏ.கே.சிங் அளித்த பேட்டியில்,‘ ஓட்டலுக்கு வெளியே ஏன் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது என்று கேட்டு இரண்டு ஓட்டல்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர்களிட மிருந்து இன்னும் பதில் வரவில்லை. பாதுகாப்பு காரணங்களுக் காக வைத்திருப்பதாக கூறப்பட்டாலும் அதற்கு போக்குவரத்து பிரிவு போலீசாரிடம் முறைப்படி அனுமதி பெறவேண்டும்என்று தெரிவித்தார்.

தற்போது இரு ஓட்டல்களிலும் பழுது பார்க்கும் பணி முடிவடைந்து விட்டது. நோட்டீசுக்கு இரண்டு நாளில் பதில ளிக்காவிட்டால் தாங் களாகவே அவற்றை அகற்ற வேண்டி வரும் என்று மாநகராட்சிநிர்வாகம் தனது நோட்டீசில் தெரிவித்து இருந்தது.

 

ஜெயங்கொண்டத்தில் சுகாதாரமின்றி இயங்கிய 12 உணவகங்களுக்கு சீல்

Print PDF

தினகரன் 09.06.2010

ஜெயங்கொண்டத்தில் சுகாதாரமின்றி இயங்கிய 12 உணவகங்களுக்கு சீல்

ஜெயங்கொண்டம், ஜூன் 9: ஜெயங்கொண்டத்தில் சுகாதாரமின்றி இயங்கிய 12 உணவகங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஜெயங்கொண்டம் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் உணவகங்கள், டீ கடைகள், சிற்றுண்டி சாலைகள் நடத்தப்படுவதாக அரியலூர் கலெக்டருக்கு புகார் வந்தது. உடனடியாக கடைகளை தணிக்கை செய்ய சுகாதாரத்துறை மற்றும் நகராட்சியினருக்கு கலெக்டர் ஆபிரகாம் உத்தரவிட்டார். மீன்சுருட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் லட்சுமிதரன் தலைமையில் ஜெயங்கொண்டம் நகராட்சி செயல் அலுவலர் மோகன், சுகாதார மேற்பார்வையாளர் திருநாவுக்கரசு, சுகாதார ஆய்வாளர்கள் ராஜ், ராஜ்குமார், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை எழுத்தர் பாலசுப்ரமணியன் உட்பட்ட குழுவினர் ஜெயங்கொண்டத்தில் கும்பகோணம் சாலை, சிதம்பரம் சாலை, திருச்சி சாலை போன்ற பகுதியில் உணவகங்கள், டீ கடைகள், சிற்றுண்டி கடைகளில் அதிரடி தணிக்கை மேற்கொண்டனர். 31 கடைகளில் ஆய்வு செய்ததில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய 12 கடைகளுக்கு சீல் வைத்தனர். சுகாதார நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

 

பெங்களூர் மாநகராட்சியில் சென்னை கவுன்சிலர்கள் குழு ஆய்வு

Print PDF

தினமணி 09.06.2010

பெங்களூர் மாநகராட்சியில் சென்னை கவுன்சிலர்கள் குழு ஆய்வு

பெங்களூர், ஜூன் 8: பெருநகர பெங்களூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்து மேயர் எஸ்.கே. நடராஜை சந்தித்த சென்னை மாநகராட்சியின் அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு, புதிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

சென்னை மாநகராட்சி மன்றத்தின் திமுக கொறடா ஏகப்பன் தலைமையில் காங்கிரஸ் கவுன்சிலர் மங்கள ராஜ், பாஜக கவுன்சிலர் ஏழுமலை, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் தேவி, பகுஜன் சமாஜ் கட்சி கவுன்சிலர் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் 36 பேரும், சென்னை மாநகராட்சி சூப்பிரண்டு லஷ்மணசாமி, உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் ஆகியோரும் செவ்வாய்க்கிழமை காலை பெங்களூருக்கு வந்தனர்.

பெங்களூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து மேயர் எஸ்.கே. நடராஜ், துணை மேயர் தயானந்த், மாநகராட்சி மன்ற கட்சித் தலைவர்கள் சத்தியநாராயணா, நாகராஜ் ஆகியோரை சந்தித்தனர்.

மாநகராட்சி நிர்வாக செயல்பாடு குறித்து தெரிந்துகொள்ள வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கவுன்சிலர்களை மேயர், துணை மேயர் உள்ளிட்டோர் மாநகராட்சி மன்ற கூட்ட அரங்கிற்கு அழைத்துச் சென்றனர்.அங்கு மேயர், துணை மேயர் ஆகியோரை பெங்களூர் மாநகராட்சி தமிழ் கவுன்சிலர் தன்ராஜ் சென்னை கவுன்சிலர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி திமுக கொறடா ஏகப்பன் அளித்த பேட்டி:

சென்னையில் அமல்படுத்தப்படாத நாட்டில் பிற முக்கிய நகரங்களில் செயல்படுத்தப்படும் புதுவித திட்டங்கள் என்னென்ன, மாநகராட்சிகளின் நிர்வாக செயல்பாடு உள்ளிட்டவை குறித்து தெரிந்துகொள்வதற்காக அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த குழுவில் உள்ள நாங்கள் முதல் முறையாக பெங்களூருக்கு 2 நாள் பயணமாக வந்துள்ளோம். இங்கு மாநகராட்சி செயல்படுத்தும் திட்டங்கள், மாநகராட்சியின் செயல்பாடு குறித்து மேயர், கவுன்சிலர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டோம். புதன்கிழமை நகரில் சுற்றுப் பயணம் செய்து பார்வையிட உள்ளோம்.

அதைத் தொடர்ந்து சண்டீகர், தில்லி, புனா, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்குச் சென்று அங்கு செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வோம். பிறகு சென்னைக்கு திரும்பி பிற நகரங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மேயரிடம் அறிக்கை அளிப்போம்.

பெங்களூரில் குப்பைகள் இல்லாமல் தூய்மை நகராகவும் சாலை வசதிகளும் நன்றாக உள்ளது. பூங்காக்கள் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது. சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் அதிகம் இல்லை. ஆனால் சென்னையில் இதுபோன்ற திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. சென்னையில் நகரம் முழுவதும் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பெங்களூர் மாநகராட்சி மேயரின் பதவிக்காலம் ஓராண்டு மட்டுமே.

மாநகராட்சித் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்த மேயருக்கு ஓராண்டு காலம் போதாது. ஆனால் சென்னையில் மேயரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும் என்றார். இதுகுறித்து மேயர் நடராஜ் கூறுகையில், மாநகராட்சியின் பல்வேறு குழுக்கள், விதிமுறை,திட்டங்கள் குறித்து சென்னை கவுன்சிலர்களுக்கு விளக்கிக் கூறினோம். சென்னை கவுன்சிலர்கள் இங்கு ஆய்வு செய்தது போல பெங்களூர் கவுன்சிலர்கள் குழுவும் சென்னைக்கு சென்று வரும் என்றார்.

 


Page 410 of 506