Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மேலூர் நகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினமலர் 04.06.2010

மேலூர் நகராட்சி எச்சரிக்கை

மேலூர்: மேலூர் நகரில் உள்ள 1 முதல் 27 வார்டுகளில் அனுமதியற்ற குடிநீர் குழாய் இணைப்புகள் முறைப்படுத்தப்பட உள்ளன. நகராட்சி அனுமதியின்றி தன்னிச்சையாக குடிநீர் குழாய் போட்டுள்ளவர்கள் உடனடியாக, அதனை தெரிவித்து முறைப்படுத்தி கொள்ள வேண்டும். இல்லையேல் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கமிஷனர் அய்யனார் அறிவித்துள்ளார்.

 

மோட்டார் மூலம் குடிநீர் திருடினால் இணைப்பு துண்டிக்கப்படும் பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை

Print PDF

தினகரன் 03.06.2010

மோட்டார் மூலம் குடிநீர் திருடினால் இணைப்பு துண்டிக்கப்படும் பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை

வத்திராயிருப்பு, ஜூன் 3: மின் மோட்டார் பொருத்தி குடிநீர் திருடினால் நிரந்தரமாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என வ.புதுப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சாம்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: புதுப்பட்டி பேரூராட்சியில் 3 ஆயிரத்து 68 வீடுகள் உள்ளன. இதில் 725 வீடுகளுக்கு பேரூராட்சி சார்பில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது போதிய மழை இல்லாததால் புதுப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இப்பகுதியில் சிலர் மின் மோட்டார் மூலம் குடிநீரை திருடுவதாக புகார்கள் வந்துள்ளன. மோட்டார் பொருத்தி குழாயில் இருந்து குடிநீரை உறிஞ்சினால் அருகில் உள்ள குழாய்களில் தண்ணீர் சரியாக வராது. குடிநீர் குழாய் இணைப்பில் மின் மோட்டார் பொருத்துவது சட்டப்படி குற்றம். எனவே இந்த அறிவிப்பு கிடைத்த 24 மணி நேரத்தில் குழாய்களில் மின் மோட்டார் பொருத்தியுள்ளவர்கள் தாங்களாகவே அவற்றை அகற்றி விட வேண்டும். தவறினால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் நிரந்தரமாக குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

தரமற்ற மசாலா பொடி தயாரிப்பு ரைஸ் மில்லுக்கு "சீல்' வைப்பு

Print PDF

தினமலர் 03.06.2010

தரமற்ற மசாலா பொடி தயாரிப்பு ரைஸ் மில்லுக்கு "சீல்' வைப்பு

தேனி: தரமற்ற மசாலாபொடி தயாரித்த ரைஸ்மில்லுக்கு நகராட்சி அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.

தேனி நகரில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் ஓட்டல்கள், காலாவதியான உணவு பொருட் களை விற்பனை செய்யும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மீது நகராட்சி அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று சுகாதாரமற்ற முறையிலும், தரமற்றதாகவும் மசாலா பொடி தயாரிக்கும் ரைஸ்மில்கள், மசலாப்பொடி தயாரிப்பு இடங்களில் நகராட்சி கமிஷனர் மோனி தலைமையில், சுகாதார அலுவலர் தயாளன் மற்றும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சிவராம் நகரில் மசாலாப்பொடி அரைக்கும் பார்வதி ரைஸ்மில்லில் சோதனை செய்தனர். அங்கு மசாலாப்பொடி அரைக்கும் மல்லி, வத்தலுடன், கம்பு, அரிசியை வைத்திருந்தனர். அரைத்து வைத்திருந்த மசாலாப்பொடி தரமற்றதாக இருந்தது. பணியாளர் கள் விபரத்தை தெரிவிக்க மறுத்தனர். மேலும் பணியாளர்கள் "மாஸ்க்' அணிந்து பணிபுரியவில் லை. இது குறித்து விளக்கம் கூறாததால் பார்வதி ரைஸ் மில்லுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 


Page 413 of 506